நந்திக்கடல்

நந்திக் கடல் (ஆங்கிலம்:Nantikkaṭal) என்பது இலங்கையின் வடகிழக்கிலுள்ள முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கடற்காயல் ஆகும். இதன் அர்த்தம் சங்குகளின் கடல் என்பதாகும்.[1]. பேராறு உள்ளடங்கலாக சில ஆறுகள் இக்கடற்காயலில் கலக்கின்றன. முல்லைத்தீவு மாவட்டம் நந்திக்கடலுக்கும் இந்து சமுத்திரத்துக்கும் இடையில் அமைந்திருக்கிறது. இதனால் நந்திக்கடல் முல்லைத்தீவு கடற்காயல் என அழைக்கப்படுவதும் உண்டு.

நந்திக்கடல்
அமைவிடம்முல்லைத்தீவு மாவட்டம், இலங்கை
ஆள்கூறுகள்9°17′0″N 80°46′0″E
வகைகடற்காயல்
முதன்மை வரத்துபேராறு
முதன்மை வெளிப்போக்குஇந்து சமுத்திரம்
அதிகபட்ச நீளம்14 கிலோமீட்டர்கள் (8.7 mi)
அதிகபட்ச அகலம்5 கிலோமீட்டர்கள் (3.1 mi)
Settlementsமுல்லைத்தீவு

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவராக இருந்த வேலுப்பிள்ளை பிரபாகரன் இவ்விடத்தில் வைத்துக் கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கம் கூறியது.

மேற்கோள்கள்

  1. "Nanthikkadal". TamilNet (6 March 2009). பார்த்த நாள் 23 May 2009.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.