நண்டு

நண்டு (crab) உலகின் எல்லா கடல்களிலும் காணப்படும் ஒரு நீர்வாழ் உயிரினமாகும். நன்னீர் நிலைகளிலும் காணப்படும் நண்டு இனங்களும் உண்டு. சில மில்லிமீற்றர் (mm) அகலமான நண்டுகள் முதல் கால் அகலம் நான்கு மீற்றர் (m) வரை வளரும் யப்பானியச் (Japanese) சிலந்தி நண்டு வரை பல அளவுகளிலும் காணப்படுகிறது. நண்டுகள் பொதுவாகத் தட்டையான ஓடும் ஐந்து சோடி கால்களும் கொண்டவை. இவற்றில் முதற்சோடிக் கால்கள் கவ்விகளாக மாற்றமடைந்துள்ளன.

நண்டு
Callinectes sapidus
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: கணுக்காலி
துணைத்தொகுதி: ஓடுடைய கணுக்காலி
வகுப்பு: மெல்லிய ஓட்டுடையவை
வரிசை: பத்துக்காலி
துணைவரிசை: முட்டைத்தாங்கி
உள்வரிசை: நண்டு
லின்னேயசு, 1758
Superfamilies
  • Section Dromiacea
  • Dakoticancroidea †
  • Dromioidea
  • Eocarcinoidea †
  • Glaessneropsoidea †
  • Homolodromioidea
  • Homoloidea
  • Section Raninoida
  • Section Cyclodorippoida
  • Section Eubrachyura
    • Sub-section Heterotremata
  • Aethroidea
  • Bellioidea
  • Bythograeoidea
  • Calappoidea
  • Cancroidea
  • Carpilioidea
  • Cheiragonoidea
  • Componocancroidea †
  • Corystoidea
  • Dairoidea
  • Dorippoidea
  • Eriphioidea
  • Gecarcinucoidea
  • Goneplacoidea
  • Hexapodoidea
  • Leucosioidea
  • Majoidea
  • Orithyioidea
  • Palicoidea
  • Parthenopoidea
  • Pilumnoidea
  • Portunoidea
  • Potamoidea
  • Pseudothelphusoidea
  • Pseudozioidea
  • Retroplumoidea
  • Trapezioidea
  • Trichodactyloidea
  • Xanthoidea
    • Sub-section Thoracotremata
  • Cryptochiroidea
  • Grapsoidea
  • Ocypodoidea
  • Pinnotheroidea

நண்டுகள் மேல் ஓட்டினை உடையன. ஆண்டுக்கொருமுறை மேலோடுகள் கழன்று புதுப்பித்துக் கொள்கின்றன. நண்டுகள் கூட்டுக்கண்கள் இரண்டைக் கொண்டவை.

பெண் நண்டுகள் ஆண் நண்டுகளிலும் பார்க்க அகலமான வயிற்றுப்பகுதியைக் கொண்டுள்ளன. வயிற்றின் கீழேயே அவை தம் முட்டைகளைக் கொண்டுள்ளன.

நண்டு மிகவும் பிரபலமான கடல் உணவு ஆகும். கடலுணவுகளில் 20% நண்டுகளே. ஆண்டுதோறும் ஒன்றரை மில்லியன் தொன்னுக்கும் (Ton) அதிகமான நண்டுகள் உணவாகின்றன.

நண்டு வகைகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.