டன்

டன் (அல்லது தொன்) என்பது பல சொற்பொருள்களில் வழங்கும் ஓர் அலகு. இது எடையைக் குறிக்கவும், கொள்ளளவைக் குறிக்கவும், ஆற்றலைக் குறிக்கவும், விசையைக் குறிக்கவும் பயன்படுத்தும் அலகுகளில் பயன்படும் சொல்.

எடை

எடையைக் குறிக்கும் டன் என்னும் சொல் பொதுவாக மூன்று பொருளில் ஆளப்படுகின்றது.

  • மெட்ரிக் டன் 1000 கிலோ கிராம் எடை கொண்டது. இது ஏறத்தாழ 2,204.6 பவுண்டு எடை ஆகும்.
  • பெரிய டன் (லாங் டன்) என்பது ஐக்கிய இராச்சியத்தில் முன்னர் பயன்படுத்திய இம்ப்பீரியல் அலகு முறையில் 2,240 ப்வுண்டு எடையைக் குறித்தது. 17-18 ஆவது நூற்றாண்டுகளில் இரும்பு எடையைக் குறிக்க சின்ன எடை டன் (ஷார்ட் வெய்ட் டன்) என்பது 2,240 பவுண்டும், பெரிய டன் என்பது 2400 பவுண்டும் என்று வழக்கில் இருந்தது.
    • பெரிய டன் (லாங் டன்) என்பது பெட்ரோலியம் முதலியவற்றுக்குப் பயன்படுத்துகின்றனர்.
    • கப்பல்களில் ஏற்றிச்செல்லும் எண்ணெய், மற்றும் பொருள்களை அளவிட டெட் வெய்ட் டன் (deadweight ton, dwt) என்னும் அளவைப் பயன்படுத்துகின்றனர். இதன் எடை 2,240 பவுண்டு (= 1016 கிலோ கிராம்). இது அமெரிக்காவிலும் பயன்படுத்துகின்றனர்.
  • சின்ன டன் (ஷார்ட் டன்) என்பது 2000 பவுண்டு ( = 907.18474 கிலோ கிராம்).

விசை

விசையைக் குறிக்க SI அலகுகள் அல்லாதவற்றுள் கிலோ கிராம் விசை என்று கூறுவதுபோல டன் விசை என்று கூறுவதுண்டு.

  • 1 சின்ன டன் (ஷார்ட் டன்) விசை = 2000 பவுண்டு விசை = 8.896443230521 கிலோநியூட்டன் (kN)
  • 1 பெரிய டன் விசை (லாங் டன் விசை) = 2240 பவுண்டு-விசை (lbf) = 9.96401641818352 kN
  • 1 டன் விசை = 1000 கிலோ கிராம் விசை (kgf) = 9.80665 kN

கொள்ளளவு

கப்பல்களில் பொருட்களை ஏற்றிச் செல்ல பயன்படும் கொள்ளளவைக் குறிக்க டன் என்னும் சொல் பயன் படுகின்றது. இதனைச் சரக்கு டன்னேஜ் என்றும் சொல்வர்.

ஒரு டன் என்பது:

ஆற்றலும் திறனும் குறிக்கப் பயன்படும் அலகுகள்

டன் என்னும் சொல் ஆற்றலின் அலகுகளில் ஒன்றாகவும் உள்ளது. குறிப்பாக வெடிகுண்டுகள், அணுகுண்டு போன்ற வெடி பொருட்களின் அளவைக் குறிப்பிட TNT (டி.என்.டி) எனப்படும் டிரை-நைட்ரோ-தொலியீன் (TNT Trinitrotoluene) என்னும் வேதிப்பொருளின் வெடிப்பின் வழி வெளியாகும் ஆற்றலைக் குறிப்பர்.

ஒரு டி.என்.டி டன் என்பது

  • 109 (வெப்பவேதியியல்) கலோரி ஆற்றல் ஆகும். இது கிகாகலோரி (gigacalorie) (Gcal) என்றும் அழைக்கப்படுகின்றது. இதன் அளவு SI அலகான ஜூல் வழி சொல்லும் பொழுது 4.184 கிகாஜூல் (gigajoules) (GJ) ஆகும்.
  • ஒரு கிலோடன் டி.என்.டி என்பது 1012 காலரிகள் அல்லது டெராகலோரி (teracalorie) (Tcal), அல்லது 4.184 டெராஜூல் (terajoules) (TJ) அளவு ஆற்றலாகும்.
  • ஒரு மெகா டன் டி.என்.டி என்பது (1,000,000 மெட்ரிக் டன்). இது ஒரு பேட்டா கலோரி (petacalorie) (Pcal) அல்லது 4.184 பேட்டா ஜூல் (petajoules) (PJ) ஆற்றலாகும்.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.