நக்சல்பாரி

நக்சல்பாரி இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் இருக்கும் ஓர் கிராமமாகும். இது டார்ஜிலிங் மாவட்டத்தில் சிலிகுரி உட்கோட்டத்தில் உள்ளது. இங்கு 1960களில் விவசாயப் போராட்டங்கள் நடைபெற்றன. இதன் காரணமாகத் துவங்கிய இயக்கமே நக்சல்பாரி இயக்கம் எனப்பெயர் பெற்றுள்ளது. [3]

நக்சல்பாரி
நக்சல்பாரி
இருப்பிடம்: நக்சல்பாரி
, மேற்கு வங்காளம்
அமைவிடம் 26°41′N 88°13′E
நாடு  இந்தியா
மாநிலம் மேற்கு வங்காளம்
மாவட்டம் டார்ஜிலிங் மாவட்டம்
ஆளுநர் கேசரிநாத் திரிபாதி[1]
முதலமைச்சர் மம்தா பானர்ஜி[2]
மக்களவைத் தொகுதி நக்சல்பாரி
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


152 மீட்டர்கள் (499 ft)

புவியியல் அமைப்பு

நக்சல்பாரி 26.68°N 88.22°E / 26.68; 88.22[4] என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது கடல்மட்டத்தைவிட 152 மீட்டர்கள்(501 அடி) உயரத்தில் உள்ளது.

நக்சல்பாரி அமைந்துள்ளப் பகுதி இமயமலையின் அடிவாரத்தில் தராய் வலயத்தில் உள்ளது. நக்சல்பாரியின் மேற்கே, மேச்சி ஆற்றின் அடுத்த கரையில் நேபாளம் உள்ளது. நக்சல்பாரியைச் சுற்றிலும் விளைநிலங்களும், தேயிலைத் தோட்டங்களும் காடுகளும் சிறு கிராமங்களும் 121 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளன. இப்பகுதியில் உள்ள பெரிய கிராமங்கள், புராகஞ்ச், ஃகதிகிசா, ஃபான்சிதேவா மற்றும் நக்சல்பாரி ஆகும்.

வரலாறு

1967ஆம் ஆண்டு இங்கு நிகழ்ந்த இடதுசாரி ஏழை விவசாயிகளின் எழுச்சி இந்திய அரசியலில் ஓர் முதன்மையான திருப்புமுனையாகும். உழுபவருக்கே நிலம் என்ற முழக்கம் இங்கேதான் துவங்கியது. அவர்களது வாழ்விற்கும் நிலஉரிமைகளுக்கும் நடந்த போராட்டத்தை அதிகாரத்தால் அடக்க முயன்றபோது வன்முறை வெடித்தது. போர்முறை வழிகளாலேயே பொதுவுடமை அடைய முடியும் என்று சாரு மசும்தார், கானு சன்யால் போன்ற தலைவர்கள் துவக்கிய வன்முறை இயக்கம் நக்சல்பாரி இயக்கம் அல்லது நக்சலைட் இயக்கம் எனவும் அழைக்கப்பட்டது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.