ந. அருள்
ந. அருள், 2009 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் முதல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழான மொழி பெயர்ப்புத் துறை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். அருந்தமிழில் அயற்சொற்கள் என்ற தலைப்பில் ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர் (M.Phil)பட்டம் பெற்றார். பின்னர் புதுதில்லியிலுள்ள தில்லி பல்கலைக்கழகத்தின் இக்கால இந்திய மொழியியல் துறையின் வழியாக ஆங்கிலக் கவிஞர் சேக்சுப்பியரின் மொழிபெயர்ப்புகள், தழுவி எழுதிய படைப்புகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் தேர்ந்த திறன் உடையவர். இவர் தந்தை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், தமிழறிஞருமான முனைவர் ஔவை நடராசன் ஆவார். இவருடைய பாட்டனார் ஔவை துரைச்சாமியும் புகழ் பெற்ற தமிழறிஞர், உரையாசிரியர் ஆவார்.
ந. அருள் | |
---|---|
பிறப்பு | தமிழ்நாடு, ![]() |
தேசியம் | இந்தியர் |
கல்வி | முனைவர் பட்டம் |
பணி | இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை |
பணியகம் | தமிழ்நாடு அரசு |
சமயம் | இந்து |
பெற்றோர் | அவ்வை நடராசன் (தந்தை) |
வாழ்க்கைத் துணை | சாலை வாணி |
வெளியான நூல்கள்
- அருந்தமிழில் அயற்சொற்கள் - ஔவை அறக்கட்டளை வெளியீடு (அக்டோபர்’ 2001)
விக்கிப்பீடியாவிற்கான பங்களிப்பு
- ந. அருள் விளம்பரத்துறையிலும், மக்கள் தகவல் தொடர்புத் துறையிலும் ஆர்வம் உடையவர். இவர் தமிழ்நாடு அரசு ஆதரவுடன் 2010 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டு நிகழ்வுகளிலும், தமிழ்நாடு அரசு தகவல் தொழில்நுட்பத் துறை நடத்திய பள்ளி, மற்றும் பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்கான தமிழ் விக்கிப்பீடியா தகவல் பக்கங்கள் போட்டியில் அரசு ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினராக இருந்தார்.
- தமிழ் விக்கிப்பீடியாவின் மேல் மிகுந்த அக்கறை கொண்டு வளர்ச்சிக்கு உதவி வருபவர்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.