தென்னை
இலங்கை, இந்தியா போன்ற வெப்ப மண்டல நிலப்பரப்புகளில் வளரும் மரம் தென்னை ஆகும். தென்னையின் அனைத்து பகுதிகளும் பயன்மிக்கவை. சிறப்பாக தேங்காய் தென்னிந்திய சமையலில் முக்கிய இடத்தைப் பெறுகிறது.
Coconut Palm | |
---|---|
![]() | |
Coconut Palm (Cocos nucifera) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரங்கள் |
தரப்படுத்தப்படாத: | ஒருவித்திலைத் தாவரங்கள்[1] |
தரப்படுத்தப்படாத: | Commelinids |
வரிசை: | Arecales |
குடும்பம்: | Arecaceae |
துணைக்குடும்பம்: | Arecoideae |
சிற்றினம்: | Cocoeae |
பேரினம்: | Cocos |
இனம்: | C. nucifera |
இருசொற் பெயரீடு | |
Cocos nucifera (லின்னேயஸ்) | |
தென்னை மரம் 30 மீ வரை வளரக் கூடியது. இதற்கு கிளைகள் கிடையாது. இதன் உச்சியில் இருக்கும் தென்னோலை 4-6 மீ நீளமுடையது.
வளர் இயல்பு
மணற்பாங்கான நிலத்தில் வளரவல்ல தென்னை, உப்புநீரைத் தாங்கி வளரக் கூடியது. நல்ல மழையும் சூரியஒளியும் கிடைக்கும் இடங்களில் இது நன்கு வளரும்.
தென்னை வளர்ப்பு

தென்னை உலகில் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் வளர்க்கப்படுகிறது. தேங்காய் உற்பத்தி ஆண்டுக்கு 61 மில்லியன் டன்களாகும். இந்தோனேசியா, பிலிப்பைன்சு, இந்தியா ஆகிய மூன்று நாடுகளே எப்போதும் முன்னணியில் இருந்து வருகின்றன.[2]
இந்தியாவில் தமிழகம், கேரளா, கர்நாடகம் மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் தென்னை அதிகளவில் வளர்க்கப்படுகிறது.[3]
தென்னையில் இருந்து பெறப்படும் பயன்கள்
- இளநீர்
- தேங்காய் - தேங்காயிலிருந்து கிடைக்கும் புரத அமைப்பு, மனித உடலுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது.
- தேங்காப்பால் - சமையலுக்கு
- தேங்காய்ப் பால்மா
- தேங்காப்பூ - சம்பல்
- உலர் தேங்காப்பூ - இனிப்புப் பண்டங்கள்
- கொப்பரை
- தேங்காய் எண்ணெய்
- பாம் ஆயில்
- தெழுவு
- கருப்பட்டி
- கள்ளு
- சிரட்டை
- நீருணவு உண்ணப் பயன்படுத்தப்படுவது
- பொட்டுச் சட்டியாகப் பயன்படுத்தப்படுவது
- இது இப்போது மரக்கன்றுகளை வளர்க்க சிறப்பாக பயன்படுத்தப்படுகிறது
- தென்னோலை
- கிடுகு
- ஈக்கிளைப் பயன்படுத்தி விளக்குமாறு செய்வார்கள்
- மரம்
- விறகு
- பொச்சுமட்டை
- பொச்சு மட்டையிலிருந்து பெறப்படும் தேங்காய் நாரில் இருந்து கயிறு தயாரிக்கப்படுகிறது.
- பாத்திரங்கள் கழுவ, நெருப்பு மூட்டப் பயன்படுத்தப்படுகிறது
- தேங்காய் நார் கழிவு மாடி தோட்டங்களுக்கு பயன்படுகிறது.
- விசிறி
- குருத்து - தோரணங்களுக்குப் பயன்படுத்தப்படுவது, மரபு மருத்துவம்
- குரும்பட்டி - தேர் போன்ற தானே செய்தல் விளையாட்டுப் பொருட்கள்
மேற்கோள்கள்
- William J. Hahn (1997), Arecanae: The palms, tolweb.org
- https://www.vikatan.com/nanayamvikatan/2015-feb-22/column/103654.html
- http://www.dinakaran.com/News_detail.asp?Nid=352430