துறைநீலாவணைச் செப்பேடு
துறைநீலாவணையில் சேமிக்கப்பட்ட செப்பேட்டில் வீரர்முனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயமும் சீர்பாதகுலம் தொடர்பான செய்திகளும் சீர்பாதக் குடிகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. (இலங்கை நூதனசாலையில் பணியாற்றிய திரு எம். டி. இராகவன் என்பவர் இச்செப்பேட்டினை நூதனசாலையில் சேமித்ததுடன் 24.10.1953ம் ஆண்டு Spolia Zeylancia Vol.27 Part-I எனும் நூதனசாலை வெளியீட்டில் ஆங்கில மொழிபெயர்ப்புடன் குறிப்பிட்டுள்ளார்) [1] இவ்வாறான துறைநீலாவணை செப்பேடு பின்வருமாறு அமைகின்றது.
பரத கண்டத்தில் பண்புடைய அரசராய் தரமுட னாண்ட சற்சன சோழன் தவப்பு தல்வியாக தரையினில் செனித்த நவமணி நேரும் மாருதப் புரவீக வல்லிதன் குதிரை வதனம் மாற
எல்லையிற் தீர்த்தம் இந்திய முழுவதும் படிந்து திரிந்து பயனில தாக வடிவேற் பெருமான் வைகிய கதிரை சென்றுதன் குறையை தீர்ப்பது முறையென மனறலங் குழலி வந்தனழ் லிலங்கை கந்தன் கழலடி காரிகை வணங்க விந்தை யாக விரும்பும் நாகநன் நாடதை கண்ணி நகுலநன் மனைவியின்
மாடே தெற்காய் மல்கும் நதியில் முழுகிட வுந்தன் முற்பக வினையால் தழுவிய குதிரை சாயல் தீர்ந்து விளங்குவா யென்று மெல்லிய கனவில் உளமதுருக உவப்புடன் கண்;டு
கீரி மலையை கிட்டியே செல்வி தீரினில் படிய நீத்தது மாமுகம் அச்செயல் தன்னை அறிந்திடு மாது மெச்சிட ஒற்றரை விரைவினிற் றான் உச்சிதமாக உவப்புட னனுப்பினள்
அச்சம தில்லையென அரசன் விருப்புடன் கந்த னுருவக் கனகச் சிலைதனை விந்தைய தாக விரைவுட னனுப்ப கச்சாத் துறையின் கரையதிற் கொண்டு மெச்சிட ஒற்றர் விட்டனர் படகை அவ்விடந் தனில் ஆயிழை வந்து செவ்வை சேர் காங்கேயன் திருவு வந்தனை நகுல மலைக்கு நடந்தனள் கொண்டு
தகைமைசேர் கோயில் தையலாள் இயற்றி கொடித்தம்பம் நட்டு குற்மில் விழாவை துடியிடை மங்கை சோர்வுறச் செய்து காரண நாமம் களறின ளப்போ
பாரதி லென்னை பற்றி தீய மாமுக வடிவம் மாறின தாலே மாமுக னுறைவத மாவிட்ட புரம் காங்கேய னுருவது கரைசேர் இடம் காங்கேயன் துறையென கழறியே மீண்டு தாய் நாடேக தையலாள் இருந்தாள்
அழகர் படவு அடங்கலும் அம்மை ஐங்கரக் கடவுட் ஆலயம் அமைத்து துங்க முடனே சொல்லருள் நிதியும் கிண்ணற யம்வெளி தரவை முன்மாரி தண்ணிய மல்வத்தை குளமும் வெளியெனும் செந்நெல் காணியும் சேயிழை யுதவி விழாக் கொண்டாடி விருப்புட னங்கு
நாளும் திருப்பணி நலமுடன் புரிய ஆளும் செங்கோல் அரவிந் தம்கொடி விருதென வீந்து விருப்படன் தேவியின் திருபெய ரென்றும் மறவாது வழங்க சீர்பாதத் தோரென சீரிய நாமம் போபெற வுவகைப் பிளம்போ டீந்தன்றி கோயி லூழியம் குறைவிலா தியற்ற ஆயநான்னு மரபோர் ஆணையிற் படிந்து
தூன்துதி வேலை தரணியிற் துதிக்க புhன்மொழி யீந்து பத்தா வுடன் கண்டியினை அடைந்து கருணை ததும்ப அண்டிய பொருட்கள் அன்பாய் அனுப்பினாள் தாய்நாடு சென்று தவமணி யனையாள் ஆயதன் மாளிகை அமர்ந்தன ளாக அரசியின் கட்டளைக் கமைந்து நடக்க
வரமுறு நால்வரும் வாதிட்டு வெருவ தங்க வேலதை தண்ணளி யுடனே மங்காச் சிந்தன் வலுவுடன் எடுத்து வடக்கை நோக்கி வந்தோர் இடத்தில் திடமுடன் தில்லை மரத்தில் வைத்து அங்குள பதியின் அமர்ந்தேர்க் குரைத்து
துங்கமுட னவர்களை துணைவராய் கொண்டு கனகவேற் பணியை களிப்புட னெடுத்து மனமுடன் கொத்து மண்டப மமைத்து தில்லைக் கந்தனென திருநம மிட்டு வல்லை மற்றிடம் வந்தோர் தமையழைத்து உரிமை உங்கட்கு உளதென் றேதினான்
வரிபடர் வழியாய் வந்தநாள் முதலாய் கந்தனுக் கினிய கடிமலர் தூவலும் வந்தவர் பூசையை வழிகொடு நடத்தலும் திருவார் சிந்தனின் செம்மை வங்கிசமே
சீர்பாததேவியின் பேரால் திகழு மரபினர் எல்லிடை யெண்ணி புதுவுயர் மரபோர் வாழும் போதினில் வகுத்தார் மரபோர் கேழும் யாரெனக் கிளத்து மிங்கு சுpந்தாத்திரன் சீரிய காலதேவன் காங்கேயன் நுரையாகி வெள்ளாகி முடவன் பழைச்சி படையன் பரதேசி பாட்டு வாழி உடைய னருளினன் உத்தம ஞானி ஆகுவா ரிவரை அடிப்படை யாக்கி வாகு மருபுடன் வதியச் செய்தனர்
நான்கு வருணமும் நலமுடன் பூனூல் தான் மார்பி லணியும் தன்னை யுடையார் வில்வீர ரன்றி வேறோர் பூனூல் இப்புவி தனில் இடாரென மதித்து பூனூல் அணிந்த பொற்புறு அரசரை அந்நூல் அணிந்த அந்தண ரென்று கூறுவ தன்றி குவலய மதில் அரசியின் குலமென் அழைப்பது சாலும் தரமுறு செங்கோல் தகைமைக் கொடி அரவிந்த மலரும் அமைந்த மையால்
மங்கலப் பொருளாய் வழங்கிடு மிருகையும் துங்கமுடன் பெற்று துலங்கவே அரசர்க் குரிய அறுதொழில் தவழ மரபுட னாற்றி வரவ தென்று மன்னியே வாழும் சீர்பாதத் தோர் மனுகுலமென வகுத்தார்.[2] [3]