திருக்கோவில் செப்பேடு

திருக்கோயிலில் சேமிக்கப்பட்ட செப்பேட்டில் வீரர்முனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயமும் சீர்பாதகுலம் தொடர்பான செய்திகளும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு சீர்பாதகுலம் தொடர்பாக விளக்கும் திருக்கோயில் செப்பேடு பின்வருமாறு அமைகின்றது.[1]

திருவருள் கயிலைச் சிவனரள் புரிய மருவளர் ரிலங்கை மன்னனாம் வால சிங்கனென்னும் சிறந்த பேருடையான் சித்து வித்தையில் செகமெச்சிய தீரன்

கயிலை ஞானம் அறுபத்து நாலும் கற்றுத்தேறினோன் இருக்கு யசுர் சாமம் அதர்வமெனும் வேதம் நான்கும் விரும்பி யுணர்ந்தோன் குமண குளிகையின் கார சக்தியால் நூன தேசவள விகற்பங்களை நன்றாய் அறிந்தோன் ஈழதேசமெனும்

இலங்கா புரிக்கு இராச தானியென கண்டிமா நகரை கனம் பெற வகுத்து செங்கொல் செலுத்தி தேசத்தை யாளுகையில் மன்னனு மப்பொ மணஞ்செய்யக் கருதி

துன்னு திரைகடல் துரிதமாய் தாண்டி மன்னு சோழன் மாதவப் புதல்வியை மணமாலை சூட்டி மகிழ்ந் திருக்கையில் இராசனும் தன் பவனாகிய ராணியாம் அம்மா ளுடன் சனங்களையும் சேர்த்து சந்தோச மாக தென்னிலங்கா புரி

சேர விரும்பி ஆரியநா ட்டு ஆந்தணர் தம்மில் அச்சுதனையங்கார் ஆவர் மனைவி செந்திரு மாது தேவியா ருடன் திருவெற்றி யூரின் சுpவனடி மாறவ சந்திர சேகர சுமய தீட்சதர் தையலாள் பார்வதி குட்ட மாவடி கண்ணப்ப முதலி முத்து நாயக்கன் முதலியோருடன் [2]

குடி மக்களை கூட்டிச் சேர்த்து கப்பலோட்டக் கைதேர்ந் தவரில் சங்கரச் செட்டி சதாசிவச் செட்டி இவர்களை யேற்றி இராசனும் மிராணியுமேறி தென்னிலங்காபுரி திசை நோக்கி வருகையில் திருகோணமலை திரைகடல் நடுவில்

கட்டிய தன்மையாய் கப்பலும் நின்றது நின்றிடும் கப்பலை கண்டது மரசன் காரண மேதென கண்டறி வீரென ஏவ லாளர் இறங்கிப் பார்க்கையில்

ஐந்து கரமும் யானை முகமும் அங்குச பாசமும் தாங்கிய கையுடன் எங்கள் பிரான் எழுந்தரளி யிருக்கின்றாரென அவ்வரை கேட்டு அரசனும் திகைத்து அந்தணர் தங்களை அன்படன் பார்த்து ஐயனே நீங்கள் ஆழியில் இருக்கும் மேய்யனை கப்பலில் விரைவுடன் சேரென ஆவ்வார்த்தை கேட்டு அந்தண ரானொர்

கண்ணீர் சொரிய கசிந்த மனதுடன் வெள்ள மதம்பொழி வினாயக பிரானை உள்ளன்புடன் ஊக்கமாய் நின்று கணேசனை வாவென கைகூப்பித் தொழ

அவ்வுரு வாகும் ஐங்கரத் தண்ணல் திருவடி தன்னை சீக்கிரம் காட்ட கடலில் இருந்த கருணாகரனின் பாதார விந்தம் பற்றிச் சேர்த்தனர்

பற்றிய பொழுது பாராளு மன்னன் சித்தம் மகிழ்ந்து திருவடி வணங்கி ஐந்து கரனே இச்சிந்து யாத்திரையில் ஊன்திருவடி காண என்தவம் புரிந்தோம் எத்தினோம் என்று இறைஞ்சிப் பணிந்து கருணா கரனே இக்கப்பலானது

கண்டிமாநகர் கரையை அடைந்தால் ஆலயம் அமைத்து அவ்விடத்தி லிருத்தி பூசை செய்விப்பேனென பூபதி போற்றினான் இவ்வாறு வாய்திறந்து இராசனும் துதிக்க செவ்வாய் மடலாள் சிரசில் கைகூப்ப

கணேச னருளால் கப்பலுமோடி சம்மாந்துறை சார்ந்திடு நகரம் வீரர்முனையென விளம்மிய திக்கரை கப்பல் செர கண்டு எல்லோரும் கப்பலை விட்டு கரையில் இறங்கி

தச்சர் சித்தர் தட்டார் முதலிய குடி மக்களை கோவு மழைத்து ஐங்கரன் கடவுளுக்கு ஆலய மொன்று சீக்கிரம் அமையென செலவு கொடுக்க

அரச னுரைப்படி அலயம் அமைத்தார் அந்தண ராதியோர் அபிசே கித்து விநாயகர் பெருமானை வீழ்ந்தடி பணிந்து கோமா னுரைப்படி கோயிலுள் வைத்தார்

கண்டி யரசன் கணேசப் பெருமானை சிந்த யாத்திரையுள் திருவடி கண்டதால் சிந்த யாத்திரைப் பிள்ளையார் நாமத்துடன் நித்திய பூசை நியமமாக செய்து விநாயகர் ஆலயம் விளங்கிடும் பொருட்டு செந்நெல் விளைவு சிறந்த நிலங்களும்

தேவால யத்தின் திருப்பணி சாமான் எல்லா வற்றையும் எழுத்தில் வரைந்து அந்தணர் தங்களை அரசனழைத்து பாசாங்கு சங்கரன் பாதார விந்தம் பாற்கடல் மீது பற்றிச் சேர்ந்ததனால் சீர்பாத தேவியின் திருப் பெயராற் சீர்பாத குலமென சிறந்த பெயர்சூட்டி

அரசர்க்கும் தேவர்க்கும் அரும் விருந்தான வெற்றிக் கொடியை விரும்பிக் கொடுத்து வணிகர் தம்மையும் வரும்படி செய்து இரு சாதியாரும் இசைந்தெக் காலமும் ஆட்சி புரியுமென்று ஆசீர் வதித்து

எழுந்தைப் பரராசன் இவர்களுக் கீந்து குடி மக்களால் கோயில் சிறக்க சாதிக் காணிகள் சகலருக்கும் கொடுத்து செங்கோல் வேந்தனும் தேவியுமாக கண்டிமா நகரை கனம்பெற வடைந்தார்[3]

மேற்கோள்கள்

  1. வரலாறு'
  2. 'சீர்பாதகுல குடிகள்'
  3. மக்களின் வாழ்வும் வளமும்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.