துருவத் தட்பவெப்பம்
துருவத் தட்பவெப்பம் (polar climate), துருவப் பகுதிகளில் கோடைக்காலத்திலும் வெயிலின் தாக்கம் மிகமிகக் குறைவாக உணரப்படுகிறது. வட துருவம் மற்றும் தென் துருவப் பிரதேசங்களின் சராசரி வெப்பம் 10 °C (50 °F) குறைவாக உள்ளது. புவியின் 20% பகுதிகள் துருவத் தட்பவெப்பம் கொண்டுள்ளது.


பெரும்பாலன துருவத் தட்பவெப்ப பிரதேசங்கள் நிலநடுக் கோட்டிற்கு வடக்கேயும், தெற்கேயும் அமைந்துள்ளது. துருவப் பிரதேசத்தின் கோடைக்காலத்தின் நீண்ட பகல் நேரமும், குளிர்காலத்தின் பகல் நேரம் குறுகியதாகவும் உள்ளது. மேலும் துருவப் பகுதிகளில் கோடைக்காலமும், குளிர்காலமும் நீண்டதாக உள்ளது. துருவத் தட்பவெப்பம் காரணமாக இப்பிரதேசங்கள் மரங்கள் அற்ற, பனி மூடிய தூந்திரப் பிரதேசமாக உள்ளது.
பிற தட்பவெப்பங்கள்
துருவ தட்பவெப்பம் இரு வகைப்படும்: அவைகள் ET எனப்படும் தூந்திர தட்பவெப்பம் மற்றும் EF எனப்படும் பனி மூடிய தட்பவெப்பம் ஆகும். தூந்திர தட்பவெப்ப காலநிலையில் ஆண்டின் ஒரு மாத சராசரி வெப்பம் 0 °C (32 °F) மேலாக இருக்கும். பனி மூடிய துருவ தட்பவெப்ப காலநிலையில் ஆண்டு முழுவதும் வெப்பம் 0 °C (32 °F) கீழ் இருக்கும்.[2]
தூந்திர தட்பவெப்ப நிலையில் உள்ள பிரதேசத்தில் மரங்கள் வளராது. இருப்பினும் சிறப்பான சிறு புல் வகைகள், புதர்கள் வளரும். பனி மூடிய தட்பவெப்ப நிலையில் உள்ள பிரதேசங்களில் பனி உருகும் வரை புற்களும், புதர்களும் கூட வளராது. அல்பைன் தட்பவெப்ப பிரதேசஙகளிலும், துருவ தட்பவெப்ப நிலை கொண்டிருக்கும்.
துருவ தட்பவெப்ப இடங்கள்

புவியில் அண்டார்டிகாவில் மட்டும் அதிக பனி மூடிய தட்பவெப்ப நிலையில், நிரந்தர பனிச் சிகரங்கள் காணப்படுகிறது. தூந்திர தட்பவெப்ப நிலை கொண்டுள்ள கிரீன்லாந்திலும் நிரந்தர பனி மூடிய சிகரங்கள் உள்ளது. ஸ்காண்டிநேவியா, பெரிங் நீரிணை, சைபீரியா மற்றும் வடக்கு ஐஸ்லாந்து, வடக்கு கனடா, அலாஸ்கா பகுதிகள் தூந்திர தட்பவெப்ப நிலை கொண்டுள்ளது.
தென் அமெரிக்காவின் தென்கோடியில் உள்ள தியாரா டெல் பியுகோ, தெற்கு சேத்லாந்து தீவுகள் மற்றும் போக்லாந்து தீவுகள் துருவ தட்பவெப்பம் கொண்டுள்ளது.
ஆர்க்டிக் பெருங்கடல்

ஆர்க்டிக் பெருங்கடல் சூழ்ந்த ஆர்க்டிக் பகுதிகள் ஆண்டு முழுவதும் பனி மலைகளுடன் காணப்படுகிறது. ஆர்டிக்கின் குளிர்கால தட்பவெப்பம் −40 to 0 °C (−40 to 32 °F) முதல் −50 °C (−58 °F) முடிய வரை உள்ளது. கோடக்கால தட்பவெப்பம் −10 to 10 °C (14 to 50 °F) முதல் 30 °C (86 °F) முடிய உள்ளது. ஆர்க்டிக் பெருங்கடற் பரப்புகள் தூந்திர பிரதேசமாக உள்ளது.
அண்டார்டிகா
புவியில் குளிர் அதிகமுள்ள பகுதி அண்டார்டிகா ஆகும். அண்டார்டிகாவின் குறைந்தபட்ச வெப்பம் −89.2 °C (−128.6 °F) என ருசியாவின் வஸ்தோக் நிலையம் கணக்கிட்டுள்ளது.[4]
தொழில்நுட்ப ரீதியாக பார்த்தால் அண்டார்டிகா ஒரு பனிப்பாலைவனம் ஆகும். இங்கு ஆண்டு சராசரி மழைப் பொழிவு 166 மில்லிமீட்டர்கள் (6.5 in) ஆகும்.
மேற்கோள்கள்
- Yung, Chung-hoi. "Why is the equator very hot and the poles very cold?". Hong Kong Observatory. பார்த்த நாள் 2010-12-02.
- McKnight, Tom L; Hess, Darrel (2000). "Climate Zones and Types: The Köppen System". Physical Geography: A Landscape Appreciation. Upper Saddle River, NJ: Prentice Hall. பக். 235–7. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-13-020263-0.
-
This article incorporates public domain material from websites or documents of the த வேர்ல்டு ஃபக்ட்புக். - Gavin Hudson (2008-12-14). "The Coldest Inhabited Places on Earth". Eco Worldly. மூல முகவரியிலிருந்து 2008-12-18 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-02-08.