துப்பறியும் சாம்பு

துப்பறியும் சாம்பு என்பது தமிழின் துப்பறியும் சிறுகதை ஆகும். 20-ஆம் நூற்றாண்டுத் துவக்கத்தில் வெளிவந்த இதனை ஆர். மகாதேவன் என்பவர் எழுதினார். [1]இந்தக் கதையின் முதன்மை மாந்தரின் கதாப்பாத்திரத்தின் பெயர் தான் சாம்பு. இவர் வங்கியில் அலுவலராகப் பணி புரிந்து வருகிற ஒரு நடுத்தர வயதானவர். கடினமான சில புதிர்களை எளிதில் விளக்கத்துடன் தீர்த்து வைக்கிறார். இவருடைய கதாப்பாத்திரம் வரைகதைக் கதாப்பாத்திரமான செர்லாக் ஹோம்சைப் போல வடிவமைக்கபட்டிருக்கும்.

இந்தக் கதைகள் அனைத்தும் சமகாலச் சமுதாயத்தில் நடைபெறும் நிகழ்வுகளை நகச்சுவையுணர்வுடன் வெளிப்படுத்தியதால் இது பிரபலமானது. மேலும் 1920, 1930,1940 போன்ற ஆண்டுகளில் இருந்த சென்னையின் நவீன நகரத்தினை இவரின் சொல்திறமிக்க எழுத்துக்களால் சித்தரிக்கிறார். சில பகுதிகளில் இரண்டாம் உலகப்போர் பற்றிய சில நுட்பமான குறிப்புகள் உள்ளன.

சொற்பிறப்பியல்

இந்தத் தலைப்பின் முதல் பகுதியான துப்பறியும் என்பது தமிழின் துப்பு என்ற வார்த்தையில் இருந்து வந்தது. துப்பு என்றால் தடயம் என்று பொருள். அறி என்றால் தெரிந்து கொள்ளல் என்று பொருளாகும்.

சாம்பு , மற்ற கதாப்பாத்திரங்கள்

ஆர் மகாதேவன் சாம்பு கதாப்பாத்திரத்தின் தோற்றத்தை வழுக்கைத் தலை மற்றும் பெரிய மூக்கு கொண்டவராய் ,மெலிந்த முகவாய் கொண்டவராய் அந்தக் கதாப்பாத்திரத்தை வடிவமைத்திருப்பார். அவரைப் பார்ப்பவர்கள் அசடு போன்று இருப்பதாக மற்றவர்கள் கருதக்கூடிய வகையில் இவரின் உடலமைப்பு இருக்கும்[2]. இவ்வாறு இருபதாலேயே இவரின் எதிரிகள் இவரை குறைத்து மதிப்பிடுவர். அதனை சாதகமாகப் பயன்படுத்தி சாம்பு அவர்களை வெற்றிகொள்வார். இந்தக் கதையானது சாம்புவின் தோற்றத்தைப் பார்த்து முதலில் அவரை ஏளனம் செய்வார்கள் பின் தன்னை ஏளனம் செய்பவர்களை வெற்றிகொள்ளும் வகையில் கதைக்களம் அமைந்திருக்கும். சாம்புவிற்குத் தெரியாமலேயே அந்தக் குற்றத்தினை அவர் கண்டுபிடித்திருப்பார். இறுதில் தான் குற்றத்தைக் கண்டுபிடித்துவிட்டேன் என்பது அவருக்கே தெரியும்.

சம்புவின் பற்றுறுதியதாளராக கோபாலன் என்ற காவல் அதிகாரி இருப்பார். இவர்தான் நடக்ககூடிய குற்றங்களை சாம்புவின் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு செல்பவர். சாம்பு மற்றும் கோபாலன் ஆகிய இருவரும் ஒருவரையொருவர் இக்கட்டான நேரங்களில் காப்பாற்றிக்கொள்வர். சில சமயம் சாம்புவின் தோற்றத்தைப் பார்த்து அவரை கோபாலன் எள்ளி நகையாடுவார். வேம்பு என்பவரை சாம்பு திருமணம் செய்துகொள்வார். வேம்பு மிகவும் அழகான , புத்திசாலியான பெண். தன்னுடைய கணவனின் வெறுமையான வாழ்க்கையை ஒருபோதும் விமர்சனம் செய்யாது வாழ்ந்து வருபவர். இவர்களுக்கு சுந்து என்ற ஒரு மகன் உள்ளான். அவனும் சில சமயங்களில் குற்றங்களைக் கண்டுபிடிக்க உதவி செய்கிறான்.

சாம்புவை வங்கி இயக்குனர் , பணமோசடி செய்த வங்கியின் மேலாளரை தப்பிக்கச் செய்ததற்காக சாம்புவை வேலையிலிருந்து நீக்கினார். அப்போதிலிருந்து தான் சாம்புவின் துப்பறியும் வேலையானது துவங்குகிறது. அவரை வேலையிலிருந்து நீக்கிய வங்கி இயக்குநரின் தொலைந்துபோன பவள அட்டிகையைக் கன்டுபிடித்துத் தருமாறு சாம்புவிடம் முறையிடுகிறார். அப்போது ஒரு இனிய தண்டனையை சாம்பு வங்கியின் மேலாளருக்கு வழங்குகிறார். இந்த வழக்கு தொடர்பாக அவர் வங்கிக்கு செல்லும் போது தன்னுடன் பணிபுரிந்தவர்களை அலட்சியமாக கடந்து சென்றதை தன் வாழ்வின் சிறந்த தருணமாகக் கருதுகிறார்.

தழுவல்கள்

1980 ஆம் ஆண்டு இறுதியில் துப்பறியும் சாம்பு என்ற பிரபாலமான தொடராக தொலைக்காட்சியில் வந்தது. இதில் காத்தாடி ராமமூர்த்தி சாம்புவாகவும், டெல்லி கணேஷ் காவல் அதிகாரி கோபாலனாகவும் நடித்தனர். இதன் இறுதி பாகமாக சாம்பு இலண்டன் செல்கிறார். அங்கு இசுக்கொட்லாந்துகாவல் அதிகாரிகளைச் சந்தித்து அவர்களால் தீர்க்கமுடியாத சில வழக்குகளையும் சாம்பு தீர்த்துவைக்கிறார். இவர்களுக்கு மகள் பிறக்கிறது.

பின் 1990 ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஒய். ஜி. மகேந்திரன் சாம்புவாகவும், ஏ. ஆர். எஸ். அவர்கள் கோபாலனாகவும் நடித்திருந்தனர்.

இந்தக் கதையைத் தழுவி கோபுலு என்பவர் வரைகதைக் கதையாக உருவாக்கினார். அதனை ஆனந்த விகடனில் தொடராக பிரசுரம் செய்தனர்.

சான்றுகள்

  1. "துப்பறியும் சாம்பு" (in ta-IN), சிலிகான் ஷெல்ஃப், 2017-06-20, https://siliconshelf.wordpress.com/2017/06/20/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/, பார்த்த நாள்: 2018-03-18
  2. Thuppariyum Sambu, http://www.thrillingdetective.com/eyes/sambu.html, பார்த்த நாள்: 2018-03-18

வெளியிணைப்புகள்

Thrilling Detective page

A description of the characters in the novel

15 episodes of Teleseries Thupparium Sambu only in Indian Imprints

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.