தீக்கல் கண்ணாடி

தீக்கல் கண்ணாடி (Flint glass) குறைந்த அபி எண்ணும், அதிக ஒளிவிலகல் எண்ணும் கொண்ட ஒரு ஒளியியல் கண்ணாடியாகும் (இதன் நிறப்பிரிகைத் திறனும் அதிகம்). ஃபிளிண்ட் கண்ணாடியின் அபி எண் 50 முதல் 55 வரை அல்லது அதற்கும் கீழே இருக்கும். தீக்கல்கண்ணாடியின் ஒளிவிலகல் எண்கள் 1.45 முதல் 2.00 வரை இருக்கும். கிரௌன் கண்ணாடியால் உருவாக்கப்பட்ட குழி வில்லையும், தீக்கல் கண்ணாடியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட குவி வில்லையும் இணைத்து நிறப்பிறழ்ச்சி இல்லா வில்லை உருவாக்கப்படுகிறது. இந்த அமைப்பு நிறப்பிறழ்ச்சியை தவிர்க்க உதவுகிறது.

கிரௌன் கண்ணாடி மற்றும் ஃபிளிண்ட் கண்ணாடியால் உருவாக்கப்பட்ட ஒரு நிறப்பிறழ்ச்சி இல்லா வில்லை.

பிளிண்ட் என்ற வார்த்தை தென்கிழக்கு இங்கிலாந்தில் காணப்படும் சுண்ணாம்பு படிமத்தில்லுள்ள தீக்கல் முண்டுகளைக் கொண்டு பெறப்பட்டது. பொற்றாசு மற்றும் காரீயக் கண்ணாடியை உருவாக்க இவை பயன்படுகிறது.

பாரம்பரியமாக உருவாக்கப்படும் தீக்கல் கண்ணாடி 4–60% காரீய(II)ஆக்சைடைக் கொண்டுள்ளது. இந்த வகைக் கண்ணாடிகள் சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துவதால், இன்றைய கால கட்டத்தில் காரீய(II)ஆக்சைடுக்குப் பதிலாக மற்ற உலோக ஆக்சைடுகள் (எடுத்துக்காட்டாக டைட்டானியம் டை ஆக்சைடு) பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை பயன்படுத்துவதால் கண்ணாடியின் பண்புகள் மாறுவதில்லை.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  • Kurkjian, Charles R. and Prindle, William R. (1998). Perspectives on the History of Glass Composition. Journal of the American Ceramic Society, 81 (4), 795-813.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.