திருநாள் (திரைப்படம்)
திருநாள் பி. எசு. இராம்நாத் இயக்கத்தில் 2016 ஆவது ஆண்டில் வெளியாகியுள்ள ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஜீவா, நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு சிறீகாந்து தேவா இசையமைத்துள்ளார்.
திருநாள் | |
---|---|
இயக்கம் | பி. எசு. இராம்நாத் |
தயாரிப்பு | எம். செந்தில்குமார் |
கதை | பி. எசு. இராம்நாத் |
இசை | சிறீகாந்து தேவா |
நடிப்பு | ஜீவா நயன்தாரா |
ஒளிப்பதிவு | மகேஷ் முத்துசாமி |
படத்தொகுப்பு | வி. டி. விஜயன் டி. எசு. ஜெய் |
கலையகம் | கோதண்டபாணி பிலிம்சு |
வெளியீடு | 5 ஆகஸ்டு 2016 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தயாரிப்பு
2010 ஆம் ஆண்டில் வெளியான அம்பாசமுத்திரம் அம்பானி திரைப்படத்தை இயக்கிய பி. எசு. இராம்நாத், இயக்கத்தில், ஜீவா நடிப்பதாக 2014 நவம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்டது.[1] 2015 ஏப்ரல் மாதத்தில் இப்படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டார். சிறீகாந்து தேவா இப்படத்திற்கு இசையமைப்பது உறுதி செய்யப்பட்டது.[2] இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் அமைக்கப்பட்ட பெரிய அக்ரஹார செயற்கை படப்பிடிப்பு தளத்தில் 2015 மே மாதத்தில் தொடங்கியது. இத்திரைப்படத்தின் முதல் டிரெய்லர் தீபாவளி அன்று வெளியானது.[3] 2015 ஆகஸ்டு மாதத்துடன் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு தற்போது பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.[4]
பாடல்கள்
Untitled |
---|
பாடல்கள் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
எண் | தலைப்பு | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "ஏ சின்ன சின்ன" | டி. இமான், வேல்முருகன் | |||||||
2. | "கரிசக் காட்டு" | அபே சாத்பர்கர் | |||||||
3. | "ஒரே ஒரு வானம்" | சக்திஸ்ரீ கோபாலன், மகாலட்சுமி ஐயர் | |||||||
4. | "பழைய சோறு" | ரஞ்சித், நமிதா | |||||||
5. | "தந்தையும் யாரோ" | எஸ். ஜானகி | |||||||
6. | "திட்டாத திட்டாத" | கிரேஸ் | |||||||
7. | "அன்பால் அமைந்த" | கங்கை அமரன் |