திருக்கருக்காவூர்

அமைவிடம்

திருக்கருக்காவூர் மாவட்ட தலைநகரான தஞ்சாவூரில் இருந்து 19 கிலோ மீட்டர் கிழக்கே அமைந்துள்ளது, ஊராட்சி ஒன்றியமான அம்மாபேட்டையில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

மக்கள்தொகை

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமம் 474 வீடுகளும், 1872 மக்கள்தொகையும் கொண்டுள்ளது. இதில் 932 ஆண்களும் 940 பென்களும் அடங்குவர்.[2] இந்த ஊரின் கல்வியறிவு விகிதம் 71.8 % ஆகும்.[2] இங்கு பட்டியல் இனத்தவர்கள் 36.86% ஆக உள்ளது, இந்த பட்டியல் இனத்தவர்கள் மக்கள் தொகை 690 ஆகும். திருக்கருக்காவூரின் பாலின விகிதம் 1009 ஆக உள்ளது.

முக்கிய தலங்கள்

திருக்கருக்காவூரில் புகழ்பெற்ற கர்ப்பரட்சாம்பிகை கோவில் உள்ளது.ஊர்த்தவ மகரிஷியின் சாபத்தால் நித்துவரின் மனைவி வேதிகைக்கு ஏற்பட்ட கருச்சிதைவை இறைவன் மருத்துவம் பார்த்து அவள் கருவைக் காப்பாற்றிய தலம் இது.[3] திருக்களாவூர் என மக்களால் பொதுவாக அழைக்கப்பெறும் இந்த தலம் மாதவி வனம், முல்லைவனம், திருக்கருகாவூர், கர்ப்பபுரி என்று பல பெயர்களால் நூல்களில் குறிப்பிடப்படுகிறது. தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலங்களில் திருக்கருக்காவூரும் ஒன்று.[4]

போக்குவரத்து

திருக்கருக்காவூருக்கு அருகாமையில் உள்ள தொடர்வண்டி நிலையமான பாபநாசம் தொடர்வண்டி நிலையம். இது இவ்வூரில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. [5][6]

இவற்றையும் காண்க

குறிப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.