தி பிக் பேங் தியரி (தொலைக்காட்சி தொடர்)

தி பிக் பேங் தியரி (The Big Bang Theory) ஓர் அமெரிக்க சூழ்நிலை காமெடி தொலைக்காட்சி தொடராகும். சக் லோரெ மற்றும் பில் பிராடி ஆகியோரால் தயாரிக்கப்படுகிறது. செப்டம்பர் 24, 2007 இல் சி.பி.எஸ் சானலில் ஒளிபரப்பாகத் துவங்கியது.[2]

த பிக் பேங் தியரி
The Big Bang Theory
வேறு பெயர் TBBT
வடிவம் நகைச்சுவை
தயாரிப்பு சக் லோரே
பில் பிராடி
இயக்கம் ஜேம்ஸ் பர்ரோஸ்
மார்க் சென்ட்ரோவ்ஸ்கி
நடிப்பு ஜானி கேலக்கி
ஜிம் பார்சன்ஸ்
கேலி குகோ
சைமன் ஹெல்பெர்க்
குணால் நாயர்
சாரா கில்பெர்ட்
முகப்பிசை "The History of Everything"[1] by Barenaked Ladies
நாடு ஐக்கிய அமெரிக்கா
மொழி ஆங்கிலம்
பருவங்கள் 7
இயல்கள் 152
தயாரிப்பு
செயலாக்கம் சக் லோரே
பில் பிராடி
லீ ஆரோன்சன்
தயாரிப்பு ஸ்டீவ் மொலாரோ
மைக் கோல்லியர்
பாயே ஓஷிமா பேலூ
துணைத்
தயாரிப்பு
டோடி லெவின்
கிறிஸ்டி செசில்
இணைத்
தயாரிப்பு
ஜோ பெல்லா
மேரி தி. கவிக்லே
பீட்டர் சகோஸ்
தொகுப்பு பீட்டர் சகோஸ்
ஓட்டம்  21 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசை சி.பி.எஸ் (CBS)
பட வடிவம் 480i (SDTV),
1080i (HDTV)
முதல் ஒளிபரப்பு செப்டம்பர் 24, 2007
இறுதி ஒளிபரப்பு தற்போது
புற இணைப்புகள்
வலைத்தளம்

கலிபோர்னியாவின் பசதினா பகுதியில் நடப்பதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தொலைக்காட்சி தொடரின் கதை இருபதுகளில் இருக்கும் கலிபோர்னியா தொழில்நுட்ப பல்கழைக்கழக அறிவுஜீவி இளைஞர்கள் இருவர் பற்றியது. லியோனார்டு இயற்பியல் பரிசோதனை அறிஞர் ஷெல்டன் இயற்பியல் தத்துவ அறிஞர். இவர்களுக்கு அருகே ஒரு அழகான பெண் வசிக்கிறாள், தற்போது வெயிட்ரஸாகப் பணிபுரியும் அப்பெண் (பென்னி (தி பிக் பேங் தியரி பாத்திரம்)) காட்சி ஊடகங்கள் கனவைக் கொண்டிருக்கிறாள். லியோனார்டு மற்றும் ஷெல்டனின் அதிமேதாவித்தனமும் அறிவுஜீவித்தனமும் பென்னியின் சமூகத் திறன்கள் மற்றும் பொதுப் புத்திக்கு நேரெதிராய் அமைவது நகைச்சுவை விளைவை அளிக்கிறது.[3][4] இவர்களின் இதே அளவு மேதாவித்தனமுடைய நண்பர்கள், ஹோவார்ட் மற்றும் ராஜேஷ்.

பிரதான பாத்திரங்கள்

  • ஜான்னி கலேகி - லியோனார்டு ஹோஃப்ஸ்டாடர் ஆக
  • ஜிம் பார்ஸன்ஸ் - ஷெல்டன் கூப்பர் ஆக
  • கேலி குவொகோ ஸ்வீட்டிங் - பென்னி ஆக
  • ஸைமன் ஹெல்பெர்க் - ஹோவார்டு வோலோவிட்ஸ் ஆக
  • குணால் நாயர் - ராஜேஷ் கூத்திரபள்ளி ஆக
  • மயிம் பியாலிக் - ஏமி ஃபாரா ஃப்வுலர் ஆக (நான்காம் பருவத்திலிருந்து முக்கிய பாத்திரம்)​
  • மெலிஸ்ஸா ராச் - பெர்னடெட் ரோஸ்டென்கௌஸ்கி-வோலோவிட்ஸ் ஆக (நான்காம் பருவத்திலிருந்து முக்கிய பாத்திரம்)​
  • ஸாரா கில்பர்ட் - லெஸ்லி வின்கில் ஆக (இரண்டாம் பருவம் மட்டும் முக்கிய பாத்திரம்)
  • கெவின் ஸஸ்மன் - ஸ்டூவார்ட் ப்ளூம் ஆக (ஆறாம் பருவம் மட்டும் முக்கிய பாத்திரம்)

எபிசோடுகள்

சீசன் எபிசோடுகள் மூல ஒளிபரப்பு
1 17 செப்டம்பர் 24, 2007 - மே 19, 2008
2 23 செப்டம்பர் 22, 2008 - மே 11, 2009
3 23 செப்டம்பர் 21, 2009 - மே 2010
4 24 செப்டம்பர் 22, 2010 - மே 11, 2011
5 23 செப்டம்பர் 21, 2011 - மே 13, 2012

தயாரிப்பு வரலாறு

2006-07 தொலைக்காட்சித் தொடருக்காக உருவாக்கப்பட்ட நிகழ்ச்சியின் ஆரம்ப பைலட்டானது, அதன் இப்போதைய வடிவத்திலிருந்து நிறைய மாறுபட்டதாய் இருந்தது. ஜிம் பார்சன்ஸ் மற்றும் ஜானி கலேகி மட்டும் தான் இருந்தனர், அவர்களின் எதிர் வரிசை வீட்டில் இருக்கும் பெண் பாத்திரம் (இப்போது கலே குவோகோ நடிக்கிறார்) இன்னும் அற்பமான பாத்திரமாக படைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சி அவ்வளவாக வரவேற்பு பெறவில்லை, ஆனால் படைப்பாளர்களுக்கு நிகழ்ச்சியை மறுவடிவமைக்க வாய்ப்பு வழங்கப்பட்டது, எஞ்சிய முக்கிய பாத்திரங்கள் கொண்டு வரப்பட்டு நிகழ்ச்சி அதன் தற்போதைய வடிவத்திற்கு கொண்டு வரப்பட்டது.[5]

தி பிக் பேங் தியரி யின் இரண்டாவது பைலட் ஜேம்ஸ் பரோஸினால் இயக்கப்பட்டது, இவர் நிகழ்ச்சியில் தொடர்ந்து பணிபுரியவில்லை. இந்த மறுவேலை செய்யப்பட்ட பைலட்டானது மே 14, 2007 இல் சிபிஎஸ்ஸிடம் இருந்து 13 அத்தியாய ஆர்டரைப் பெற்றது.[6] சிபிஎஸ்ஸில் ஒளிபரப்பப்படும் முன்னதாக, பைலட் எபிசோட் ஐட்யூன்ஸில் இலவசமாக விநியோகிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 24, 2007 இல் அரங்கேறியது, அக்டோபர் 19, 2007 இல் முழு 22-எபிசோடுகள் சீசனுக்கு தேர்வு செய்யப்பட்டது.[7]

2007- 2008 அமெரிக்காவின் ரைட்டர்ஸ் கில்டு வேலைநிறுத்தத்தின் காரணமாக நவம்பர் 6, 2007 இல் நிகழ்ச்சி தயாரிப்பு தடைப்பட்டது, மீண்டும் மார்ச் 17, 2008 இல் முன்கூட்டிய நேர ஸ்லாட்டில்,[8] ஒன்பது புதிய எபிசோடுகளுடன் மீண்டும் ஒளிபரப்பானது.[9][10] வேலைநிறுத்தம் முடிவுற்றதும், 2008-2009 சீசனுக்கு ஒளிபரப்ப இரண்டாவது சீசனுக்கு நிகழ்ச்சி தேர்வானது, செப்டம்பர் 22, 2008 இல் அதே நேர ஸ்லாட்டில் ஒளிபரப்பானது.[11] ரேட்டிங் அதிகரித்ததை அடுத்து, நிகழ்ச்சிக்கு 2010-11 சீசனுக்கான இரண்டு ஆண்டு புதுப்பிப்பு கிட்டியது.[12][13]

லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் வானியல் பேராசிரியராக இருக்கும் டேவிட் சால்ட்ஸ்பெர்க் ஸ்கிரிப்டுகளை சரிபார்த்து துணையாக பயன்படுத்தப்படும் உரையாடல்கள், கணித சூத்திரங்கள் மற்றும் படங்களை வழங்குகிறார்.[3] நிர்வாக இயக்குநராகவும் சகபடைப்பாளியாகவும் இருக்கும் பில் பிராடி கூறும் போது, "(முதலாவது) சீசன் முழுவதும் ஷெல்டன் கவனம் செலுத்தப் போகிற ஒரு உண்மையான பிரச்சினையை ஷெல்டனுக்கு வழங்க நாங்கள் செயலாற்றிக் கொண்டிருக்கிறோம், அப்போது போர்டுகளுக்கு உண்மையான முன்னேற்றம் இருக்கிறது ... அனைத்து அறிவியலையும் சரியாக எடுத்தமைக்க நாங்கள் கடுமையாக உழைத்தோம்."[4]

ஓபனிங் தீம்

தீம் பாடலை பேர்நேக்டு லேடிஸ் இசைக்குழு எழுதி பதிவு செய்தது, இப்பாடல் காலத்தின் விடியல் துவங்கி இந்த பிரபஞ்சம் உட்சென்றிருக்கும் வளர்ச்சிகளை விவரிக்கிறது. அக்டோபர் 9, 2007 இல், பாடலின் ஒரு முழு நீள பதிப்பு (1 நிமிடம் 45 விநாடிகள்) வெளியிடப்பட்டது.[14] தொலைக்காட்சி வரலாற்றில் ஐந்து மிகப் பிரபலமான தீம் மெட்டுகளில் ஒன்றாக தொலைக்காட்சி விமர்சகர் சமந்தா ஹாலோவே இந்த தீமைக் குறிப்பிட்டார்.[15]

டிவிடி வெளியீடுகள்

டிவிடி பெயர் வெளியீட்டு தேதிகள் எபிசோடு # கூடுதல் தகவல்
பிராந்தியம் 1 பிராந்தியம் 2 பிராந்தியம் 4
முழுமையான முதலாவது சீசன் செப்டம்பர் 2, 2008 12 ஜனவரி, 2009 ஜூன் 3, 2009 17 மூன்று வட்டு தொகுதி அனைத்து 17 எபிசோடுகளையும் கொண்டிருக்கிறது. ஒரே கூடுதல் அம்சம் குவான்டம் மெக்கானிக்ஸ் ஆஃப் தி பிக் பேங் தியரி: ஒரு மேதாவியாய் இருப்பது ஏன் சிறப்பானது என்பது குறித்து தொடரின் நடிகர் பட்டாளம் மற்றும் படைப்பாளிகள் பகிர்ந்து கொள்கிறார்கள் என்னும் தலைப்பிட்ட 18 நிமிட குறும்படம். ஓடும் நேரம்: 374 நிமிடங்கள்.
முழுமையான இரண்டாவது சீசன் செப்டம்பர் 15, 2009[16] அக்டோபர் 19, 2009 டிபிஏ 23 நான்கு வட்டு தொகுதி அனைத்து 23 எபிசோடுகளையும் கொண்டிருக்கிறது. சிறப்பு அம்சங்களில் ஒரு கேக் ரீல் (Gag Reel), இயற்பியல் அறிஞர்கள் நட்சத்திரத்திற்கு: இயற்பியல் அறிஞர்/UCLA இன் பேராசிரியர் டேவிட் சால்ட்ஸ்பர்க் நிகழ்ச்சியுடன் கொண்டுள்ள ஆலோசனை உறவு, மற்றும் பிக் பேங் தியரி தொடர்பாக அளவற்ற நகைச்சுவை சூழ்நிலை கருதுகோளை பரிசோதிப்பது: சீசன் 2 இன் தனித்துவமான பாத்திரங்களும் குணாதிசயங்களும் ஆகியவை அடக்கம்.

சீசனல் ரேட்டிங்குகள்

சிபிஎஸ்ஸில் தி பிக் பேங் தியரி ஒவ்வொரு எபிசோடுக்கும் சராசரி மொத்த பார்வையாளர்களின் அடிப்படையிலான சீசனல் ரேட்டிங்குகள்:

சீசன் டைம்ஸ்லாட் (EDT) சீசன் பிரீமியர் சீசன் ஃபினாலே டிவி சீசன் ரேங்க் பார்வையாளர்கள்
(மில்லியனில்)
1 திங்கள்கிழமை 8:30 P.M. (செப்டம்பர் 24 – நவம்பர் 12, 2007)
திங்கள்கிழமை 8:00 P.M. (மார்ச் 17 – மே 19, 2008)
செப்டம்பர் 24, 2007 மே 19, 2008 2007–2008 #59 [17] 8.31 [17]
2 திங்கள்கிழமை 8:00 P.M. (செப்டம்பர் 22, 2008 – மே 11, 2009) செப்டம்பர் 22, 2008 மே 11, 2009 2008–2009 #44 10.14
3 திங்கள்கிழமை 9:30 P.M. செப்டம்பர் 21, 2009 மே 2010 2009–2010 #41 12.84

இங்கிலாந்து விநியோகம் மற்றும் ரேட்டிங்குகள்

இந்த நிகழ்ச்சி இங்கிலாந்தில் பிப்ரவரி 14, 2008 இல் சேனல் 4 இல் அறிமுகம் கண்டது,[18] டிசம்பர் 2008 இல், முதல் சீசனின் முதல் ஒன்பது எபிசோடுகளை தனது டிவி சாய்ஸ் ஆன் டிமாண்ட் சேவையில் வர்ஜின் மீடியா வழங்கியது, அத்துடன் சீசன் 1 இன் மற்ற எபிசோடுகளை ஜனவரி 2009 இல் கிடைக்கச் செய்தது.

விருதுகளும் பரிந்துரைகளும்

ஆண்டு முடிவு வகை விருது நிகழ்ச்சி பெறுபவர்(கள்)
2009 பரிந்துரை ஒரு காமெடி தொடரின் மிகச் சிறந்த முன்னணி நடிகர் 61 ஆவது பிரைம்டைம் எம்மி விருதுகள் ஜிம் பார்சன்ஸ்
பரிந்துரை காமெடித் தொடரில் சிறந்த துணை நடிகை கிறிஸ்டின் பரான்ஸ்கி
பரிந்துரை ஒரு மல்டி-கேமரா தொடருக்கான சிறந்த கலை-இயக்கம்
style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி காமெடியில் சிறந்த சாதனை TCA விருதுகள்
style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி காமெடியில் தனிநபர் சாதனை ஜிம் பார்சன்ஸ்

சர்வதேச ஒளிபரப்பு

திங்கள்கிழமைகளில் கிழக்கு நேர வலயம் நேரப்படி 9:30 மணிக்கு சக் லோரெ தயாரிப்பில் ஒளிபரப்பாகும் மற்றொரு நிகழ்ச்சியான டூ அன்ட் எ ஹாஃப் மேன் நிகழ்ச்சியைத் தொடர்ந்து தி பிக் பேங் தியரி ஒளிபரப்பாகிறது.[19]

குறிப்புதவிகள்

  1. "As sold on iTunes Music Store". பார்த்த நாள் 2008-10-10.
  2. தி பிக் பேங் தியரி நடிப்பு & விவரம்TVGuide.com . பெறப்பட்டது பிப்ரவரி 14, 2009.
  3. Gary Strauss (2007-04-11). "There's a science to CBS' Big Bang Theory". USA Today. பார்த்த நாள் 2008-11-07.
  4. Scott D. Pierce (2007-10-08). "He's a genius". Deseret News. பார்த்த நாள் 2008-12-11.
  5. "Breaking News - Development Update: May 22-26 (Weekly Round-Up)". TheFutonCritic.com. பார்த்த நாள் 2009-05-02.
  6. "CBS PICKS UP 'BANG,' 'POWER' PLUS FOUR DRAMAS". The Futon Critic. 2007-05-14. http://www.thefutoncritic.com/news.aspx?id=7387.
  7. CBS(2007-10-19). "Breaking News — Cbs Gives Freshman Comedy "The Big Bang Theory" And Drama "The Unit" Full Season Orders". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 2008-12-13.
  8. The Futon Critic; CBS(2008-02-20). ""The Big Bang Theory" And "How I Met Your Mother" to Swap Time Periods". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 2008-02-20.
  9. "CBS Sets Series Return Dates". பார்த்த நாள் 2008-02-13.
  10. "Production Stops on at least 6 Sitcoms". பார்த்த நாள் 2007-11-06.
  11. "CBS Picks Up 11 Series". The Futon Critic (2008-02-15). பார்த்த நாள் 2008-02-15.
  12. "Big Bang Theory: Deal Is Done for Two More Seasons!". பார்த்த நாள் 2009-11-03.
  13. Andreeva, Nellie (2009-03-18). "CBS renews 'Men,' 'Big Bang'". Hollywoodreporter.com. மூல முகவரியிலிருந்து 2009-03-22 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-05-02.
  14. Barenaked Ladies. "Big Bang Theory Theme". Amazon Digital Services, Inc..
  15. Samantha Holloway (July 5), The top five (plus one) TV theme songs, The Examiner, http://www.examiner.com/x-11396-Jacksonville-TV-Examiner~y2009m7d5-The-top-five-plus-one-TV-theme-songs
  16. http://the-big-bang-theory.com/story/1206/Season-2-DVD-coming-in-September/
  17. ABC Medianet(2008-05-28). "SEASON PROGRAM RANKINGS (THROUGH 5/25)". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 2008-12-13.
  18. "Overnights 2008-02-14". Channel 4 Sales (2008-02-15). பார்த்த நாள் 2008-02-17.
  19. Matt Mitovich (24 சூன் 2009). "Fall TV: CBS Announces Premiere Dates". TV Guide Online. http://www.tvguide.com/News/FallTV-CBS-premieres-1007227.aspx. பார்த்த நாள்: 2009-06-24.
  20. Weis, Manuel (2009-09-01). "Nachmittags: ProSieben setzt auf «Big Bang Theory»". Quotenmeter.de. http://www.quotenmeter.de/cms/?p1=n&p2=35375&p3=. பார்த்த நாள்: 2009-06-20.
  21. "KARS,IT DÜNYALAR ÇARPIS,INCA...". பார்த்த நாள் 2008-12-13.

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.