தி. ந. இராமச்சந்திரன்

முனைவர். தில்லை நடராஜன் இராமச்சந்திரன் (Dr.T.N.Ramachandran) (பிறப்பு: 18 ஆகஸ்டு 1934) தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் புலமை பெற்றவர். சிறந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ் சைவம் மற்றும் சைவ சித்தாந்தம் குறித்து பல நூல்களை எழுதியவர். சேக்கிழார் அடிப்பொடி எனும் சிறப்பு பட்டத்தைப் பெற்றவர்.

தில்லை நடராஜன் இராமச்சந்திரன்
பிறப்புடி. என். இராமச்சந்திரன்
18 ஆகஸ்டு 1934
சிதம்பரம்
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்சேக்கிழார் அடிப்பொடி
பணிஆன்மீக எழுத்தாளர், பேச்சாளர்
அறியப்படுவதுசைவம், சைவ சித்தாந்தம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்2 & 7ம் திருமுறை விளக்க உரை
வலைத்தளம்
http://drtnr.org/

சைவத் தமிழ் திருத்தொண்டர்களின் வாழ்க்கை வரலாற்றியல் இலக்கியமான சேக்கிழாரின் பெரியபுராணம் மற்றும் சைவ சித்தாந்தம் குறித்து தமிழிலும், ஆங்கிலத்திலும் பல நூல்களை எழுதியவர்.

இளமை

தில்லை நடராஜன் – காமாட்சியம்மாள் இணையருக்கு 18 ஆகஸ்டு 1934ல் பிறந்த இராமச்சந்திரன், சட்டக் கல்வி பயின்று 9 ஆகஸ்டு 1956 முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 13 செப்டம்பர் 1956ல் கல்யாணி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

விருதுகள்

  • மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு விழாவின் போது தி. ந. இராமச்சந்திரன் சிறப்பு செய்யப்பட்டார். 1984ல் இராமச்சந்திரனின் சைவப் பணியைப் பாராடி தருமபுர ஆதீனம் சைவ சித்தாந்த கலாநிதி பட்டத்தை வழங்கியது.
  • தி. ந. இராமச்சந்திரன், தெய்வச் சேக்கிழாரின் பெரியபுராணம் குறித்து தொடர் சொற்பொழிவுகள் ஆற்றியதால், சேக்கிழார் அடிப்பொடி எனும் பாராட்டைப் பெற்றார்.

படைப்புகள்

தி. ந. இராமச்சந்திரன் தமிழிலும், ஆங்கிலத்திலும் பல சைவத் தமிழ் நூல்களை இயற்றியுள்ளார். அவைகளில் சில: [1]

  • பெரியபுராணம் திருமுறைகளின் கவசம்[2]
  • பாரதி பாடல்கள் சிந்தனை விளக்கம்
  • Tirumurai the Second
  • Tirumurai The Seventh
  • SAYINGS
  • UTTERANCES
  • Kaivalya Navaneetham
  • Brahmmasuthra Siva Advaitha
  • Chitrakavi Maalai
  • Max Mullar

மேற்கோள்கள்

  1. தி.ந இராமச்சந்திரனின் நூல்கள்
  2. இராமச்சந்திரன், தி.ந

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.