தார்ப் பாலைவனம்
பெரிய இந்தியப் பாலைவனம் என்று அழைக்கப்படும் தார்ப் பாலைவனம் இந்தியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களிலும் மற்றும் பாக்கித்தான் நாட்டிலும் பரவியுள்ளது.[1] பாகிஸ்தான் நாட்டில் பரவியிருக்கும் இப்பாலைவனத்தை, சோலிஸ்தான் பாலைவனம் என்று அழைக்கப்படுகிறது. இப்பாலைவனத்தின் பெரும்பகுதி (61 சதவீதம்) ராஜஸ்தானிலேயே உள்ளது.[2]
தார்ப் பாலைவனம் | |
பெரிய இந்தியப் பாலைவனம் | |
பாலைவனம் | |
![]() தார் பாலைவனம், இராசத்தான், இந்தியா | |
நாடுகள் | இந்தியா, பாக்கிஸ்தான் |
---|---|
மாநிலம் | இந்தியா: இராசத்தான் அரியானா பஞ்சாப் (இந்தியா) குசராத்து பாக்கிஸ்தான்: சிந்து மாகாணம் பஞ்சாப் (பாக்கிஸ்தான்) |
Biome | Desert |
தாவரம் | cactus |
விலங்கு | camel |
இப்பாலைவனத்தில் பிகானேர், ஜெய்சல்மேர், கங்காநகர் மற்றும் ஜோத்பூர் போன்ற பெரிய நகரங்களும், ஜெய்சல்மேர் கோட்டையும் அமைந்துள்ளது. இப்பாலைவனத்தின் பாக்கித்தான் பகுதியை சோலிஸ்தான் பாலைவனம் என்பர்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- Singhvi, A. K. and Kar, A. (1992). Thar Desert in Rajasthan: Land, Man & Environment. Geological Society of India, Bangalore.
- Thar Desert
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.