தாரே ஜமீன் பர்

"தாரே ஜமீன் பர்" (இந்தியில்: तारे ज़मीन पर, உருதுவில்: تارے زمین پر, ஆங்கில டி வி டி (DVD) தலைப்பு: லைக் ஸ்டார்ஸ் ஆன் எர்த் (Like Stars on Earth) )[1] என்பது 2007 ஆம் ஆண்டில் அமீர் கான் இயக்கிய ஒரு இந்தியப்படம், அதை தயாரித்தது அமீர் கான் ப்ரொடக்‌ஷன்ஸ், மற்றும் முதலில் இந்த கருத்தை மேம்படுத்தியவர்கள் கணவன்-மனைவியாக அணி சேரும் அமோல் குப்தா (எழுத்தாளர் மற்றும் படைப்பு இயக்குனர்) மற்றும் தீபா பாடியா (கருத்து, ஆராய்ச்சி மற்றும் தொகுப்பாளர்.[3] அதன் இசையமைப்பாளர்களான மூவர், ஷங்கர்-ஏஹ்சான்-லோய், பாடல்களை எழுதியவர் பிரசூன் ஜோஷி, அசைப்பட ஒளிப்பதிவு செய்தவர்கள் (CG animation) விசுவல் கம்ப்யுடிங் லாப்ஸ் (Visual Computing Labs), டாடா எல்க்ஸ்சி (Tata Elxsi Ltd.) லிமிடெட் என்ற நிறுவனம், 2 டி அசைவூட்டல் செய்தவர் வைபவ் குமரேஷின் வைபவ் ஸ்டுடியோஸ் (Vaibhav Kumaresh’s Vaibhav studios) ,[4][5] மற்றும் தலைப்பிற்கான அசைவூட்டம் செய்தோர் திமன்த்வ்யாஸ் (Dhimantvyas).[6][7]

Taare Zameen Par
(Like Stars on Earth)
இயக்கம்Aamir Khan
Amol Gupte
தயாரிப்புAamir Khan
கதைAmole Gupte (also Creative Director)
இசைShankar-Ehsaan-Loy
நடிப்புDarsheel Safary
Aamir Khan
Tisca Chopra
Vipin Sharma
Sachet Engineer
Tanay Chheda
M.K. Raina
ஒளிப்பதிவுSetu
படத்தொகுப்புDeepa Bhatia (also concept and research)
விநியோகம்Aamir Khan Productions (India - film)
UTV Home Entertainment (India - DVD)
Walt Disney Company Home Entertainment (International - DVD)
வெளியீடுDecember 21, 2007(Film)
July 25, 2008 (India DVD)
January 12, 2010 (International DVD)[1]
ஓட்டம்140 min.
நாடுIndia
மொழிHindi/ஆங்கிலம்
ஆக்கச்செலவுRs. 12 கோடிs
மொத்த வருவாய்Rs. 131 கோடிs[2]

"தாரே ஜமீன் பர்" டிசம்பர் 21, 2007 அன்று உலக அளவில் உள்ள திரையரங்குகளில் திரையிட பட்டது. இந்தப்படத்தின் இந்தியத்தொகுப்பு டிவிடி (DVD) மும்பை யில் ஜூலை 25, 2008 அன்று வெளியானது. லைக் ஸ்டார்ஸ் ஆன் எர்த் (Like Stars on Earth) என்ற பெயரில் ஒரு டிவிடி (DVD) அனைத்துலக தொகுப்பு ஜனவரி 12, 2010 அன்று வெளியாகும்.[1] வால்ட் டிஸ்னீ கம்பனி ஹோம் என்டெர்டைன்மேன்ட் (Walt Disney Company Home Entertainment) என்ற நிறுவனம் இப்படத்தை வடக்கு அமெரிக்கா, ஐக்கிய பேரரசு, மற்றும் ஆஸ்திரேலியா வில் வெளியிட / திரையிடுவதற்கான வீடியோ உரிமைகளை (home video rights) வாங்கியுள்ளது. "அணைத்து உலக திரைப்படப்பிடிப்பு நிறுவனம் ஒரு இந்தியப்படத்தின் வீடியோ உரிமைகளைப் பெற்றிருப்பது இதுவே முதல் தடவையாகும்."[8]

இந்த படம் ஒரு எட்டு வயது சிறுவனான இஷான் தர்ஷீல் சபாரியின் கதையை கூறுகிறது, அவன் வாழ்க்கையில் மிகவும் அவதிப்படுகிறான், ஒரு ஆசிரியரான அமீர் கான் அவனை ஒரு டிஸ்லெக்ஸிக் (dyslexic) அதாவது புரிந்தும் படிக்க இயலாமை அல்லது சொல்லெழுத்துக்கேடு உடைய நிலைமை உள்ளவன் என்று அடையாளம் காணும் வரை. வணிகரீதியிலும் விமர்சனரீதியிலும் மக்களால் போற்றப்பட்ட,[9]தாரே ஜமீன் பர் என்ற இப்படம் 2008 ஆம் ஆண்டின் பிலிம்பேரின் சிறந்த படத்திற்கான விருது மற்றும் குடும்ப நலப்பணிகளுக்கான சிறந்த படத்திற்கான 2008 ஆண்டின் தேசிய திரைப்பட விருதைப் பெற்ற வெற்றிப்படமாகும்.[10] தில்லி அரசு இப்படத்திற்கு வரிவிலக்கு அளித்துள்ளது.[11]

கதைச் சுருக்கம்

இஷான் அவஸ்தி (தர்ஷீல் சபாரி) பள்ளிக்கூடம் செல்லப்பிடிக்காத ஒரு எட்டு வயது சிறுவனாவான். ஒவ்வொரு பாடமும் அவனுக்கு கடினமாக இருப்பதுடன் அவன் என்றென்றும் தேர்வில் தோற்றுக்கொண்டே இருக்கிறான். மேலும் அவன் உடலில் இயக்கிகளின் ஒருங்கிணைப்பு செயற்திறன் குறைவாக உள்ளதால், அவன் ஒரு பந்தை நேர்கோட்டில் தூக்கி எறிய சிரமப்படுவான். அவனுக்கு உதவி செய்வதற்கு பதிலாக, அவன் ஆசிரியர்கள் மற்றும் வகுப்பில் படிக்கும் தோழர்கள் அவனை எப்போதும் அவமதித்துக்கொண்டே இருப்பார்கள். அதே வேளையில், இஷானுடைய அந்தரங்க உலகம் வளமான அற்புதங்களால் நிறைந்திருப்பதை யாரும் பாராட்டியதாக தெரியவில்லை: வண்ணங்கள் மற்றும் உயிரூட்டிய விலங்குகள் நிறைந்த மாயாஜால நிலங்கள் கொண்ட உலகம். அவனுடைய தனித்தன்மை கலையுலகில் இருந்தபோதும், யாரும் இதை முதலில் உணர்ந்து கொள்ளவில்லை.

அவன் வீட்டிலும் இதே நிலைமை தொடருகிறது. அவனுடைய தந்தை, நந்தகிஷோர் அவஸ்தி விபின் ஷர்மா, வெற்றிபெற்ற மற்றும் நேரமில்லாத ஒரு செயற்குழு அலுவலராவார், மேலும் அவர் பிள்ளைகளிடம் இருந்து மிகையாக எதிர்பார்ப்பவராவார். அவன் தாயார், மாயா அவஸ்தி (டிஸ்கா சோப்ரா ), ஓயாமல் இஷானை முன்னுக்கு கொண்டுவர முயன்றும் உதவ இயலாததால் சலிப்புற்ற ஒரு இல்லத்தரசியாகும். இஷானின் மூத்த சகோதரன் யோஹான் (சச்செட் எஞ்சினீயர்) ஒரு வெற்றிபெற்ற கல்விமான் மற்றும் ஒரு தடகள விளையாட்டாளர் ஆகும், இந்த உண்மை, இஷான் மனதில் எப்போதும் வருடிக்கொண்டே இருக்கும். இஷான் பள்ளிக்கூடத்திற்கு செல்லாமல் வகுப்பை ரத்து செய்தது (அல்லது மட்டம் போட்டது), அவனுடைய பெற்றோர்களுக்கு தெரிய வந்ததால், மேலும் கூடுதலாக குறைந்த மதிப்பெண்களும் பெற்றதால், அவனுடைய பெற்றோர்கள் அவனை கண்டித்து மேலும் 'ஒழுக்கமுள்ளவனாக' மாற்றுவதற்காக அவனை உணவு உறையுள் விடுதி கொண்ட பள்ளிக்கூடத்தில் சேர்க்க முடிவெடுக்கின்றனர்.

உணவு உறையுள் விடுதி கொண்ட பள்ளிக்கூடத்தில் சேர்ந்த பின்னரும் மற்றும் ராஜன் தாமோதரன் தனய் செட்டா என்ற திறமைசாலியான மாணவன் அவன் நண்பனாக இருந்தும் கூட, இஷானுக்கு அவன் வாழ்க்கைமுறை சிறக்க உதவவில்லை. அதற்கு பதிலாக, அவன் குடும்பத்தினருடன் இருந்து பிரிந்ததால் ஏற்பட்ட மனவேதனையும் சேர்ந்து, இப்போது அவனை சொல்லொணா பயம் மற்றும் உளச்சோர்வு சூழ்ந்து கொண்டதால், ஒரு முடிவில்லாத நிலைக்கு மூழ்கடிக்கப்படுகிறான். இருந்தாலும், புதிதாக மற்றும் தற்காலிகமாக வேலைக்கு வந்த ராம் ஷங்கர் நிகும்ப் அல்லது "நிகும்ப் ஐயா" என்றழைக்கப்பட்ட ஒரு கலை ஆசிரியர், (அமீர் கான்) இஷானின் உறையுள் விடுதி கொண்ட பள்ளிக்கூடத்தில் சேர்ந்த பின்னர், இந்நிலைமை மாறுகிறது. நிகும்ப், அவருக்கு முன் ஆசிரியராக பணிபுரிந்தவரைப்போல் கண்டிப்பாக இல்லாமல் வேறுபட்டு, அவர் ஒரு தனிப்பட்ட முறையை கற்றுக்கொடுக்க கையாண்டார், மற்றும் அதனால் மாணவர்களுக்கிடையே வெகு விரைவில் பிரபலமானார். அவர் நாளடைவில் இஷான் வகுப்பில் மகிழ்ச்சியாக இல்லாததையும் மற்றும் வகுப்பின் நடவடிக்கைகளில் ஈடுபாடில்லாமலும் இருப்பதை கண்டுகொள்கிறார்.(இத்தனைக்கும் அவர் வகுப்பில் மாணவர்கள் எல்லோரும் சுறுசுறுப்புடன் நடவடிக்கைகளில் பங்குகொள்வதற்கான சூழலை அவர் வகுப்பில் ஏற்படுத்தி இருந்தார்). மனம் அலை கழிந்ததால், நிகும்ப் இஷானின் பழையப் பணிகளை எல்லாவற்றையும் திரும்பிப்பார்க்கிறார் மேலும் அவனுடைய "தோல்விகளுக்கெல்லாம்" உண்மையான காரணம் டிஸ்லெக்ஸியா (dyslexia) எனப்படும் புரிந்தும் படிக்க இயலாமை அல்லது சொல்லெழுத்துக்கேடு என்ற ஒரு நிலைமையே என்று முடிவெடுக்கிறார்.

தாரே ஜமீன் பர் என்ற படத்தை ஊக்குவிப்பதற்கு நடத்திய நிகழ்ச்சியில் அமீர் கான்.

விடுமுறை நாளில், நிகும்ப் இஷானுடைய பெற்றோர்களை சந்தித்து, அவனுடைய மேலும் சில பணிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டுகிறார். அவர் இஷானின் ஓவியங்களில் காணும் பண்பினை கண்டு பேச்சு மூச்சற்றவராகிறார். நிகும்ப் இஷானின் பெற்றோர்களிடம் இஷான் ஒரு பிரகாசமான சிறுவன் என்றும் அவனை வகுப்பில் இருக்கும் இதர சிறுவர்களுடன் ஒப்பிடும் பொது, அவன் செய்திகளை வேறுபட்ட முறைகளில் செயல்படுத்தும் தன்மை கொண்டவன் என்றும் சொல்கிறார். அவர் டிஸ்லெக்ஸியா (dyslexia) எனப்படும் புரிந்தும் படிக்க இயலாமை அல்லது சொல்லெழுத்துக்கேடு பற்றி அவர்களுக்கு விளக்குகிறார் மற்றும் இது ஒரு நரம்பியல் சம்பந்தப்பட்ட நிலைமையாகும் என்றும், குறைந்த அறிவாற்றலின் அறிகுறி அல்ல என்பதையும் தெளிவுபடுத்துகிறார். அவர் அவனுக்கு மேலும் கூடுதலான தனிமுறைப்பயிற்சி வழங்கப்போவதாகவும், அது இஷானை வெற்றிப்பாதையில் கொண்டு செல்வதற்கு உதவும் என்றும் கூறுகிறார். அவருடைய வாதத்தை தாங்குவதற்கு, நிகும்ப் இஷானின் கலைத்திறமைகளை, அவன் வரைந்த ஓவியங்கள் மற்றும் கலைப்படைப்புக்களை பெரிதுபடுத்துகிறார். அவருடைய வாதத்தை நிரூபிப்பதற்காக, நிகும்ப் இஷானின் தந்தையிடம் ஜப்பானிய உரையில் உள்ள ஒரு பெட்டியை வாசித்துக்காட்டுமாறு கேட்டுக்கொள்கிறார். திரு. அவஸ்தி அவரால் அந்த உரையை படித்துக்காட்ட இயலாது என்று சொல்லும் போது, நிகும்ப் அவரை கடிந்துகொள்கிறார். அப்படி செய்யும்போது, இஷான் ஒவ்வொரு நாளும் என்ன அவதிக்குள்ளாகிறான் என்பதை, நிகும்ப் அவர்களுக்கு எடுத்துக்காட்டுகிறார்.

அவன் திரும்ப பள்ளிக்கு படிக்க வரும்போது, ஒரு நாள் வகுப்பில் நிகும்ப் டிஸ்லெக்ஸியா என்ற தலைப்பைப்பற்றி பேசுகிறார், டிஸ்லெக்ஸியா (dyslexia) என்பது புரிந்தும் படிக்க இயலாமை அல்லது சொல்லெழுத்துக்கேடு என்ற நிலைமையாகும், மேலும் அவர்களிடம் டிஸ்லெக்ஸியா என்ற நிலைமையினால் அவதிப்படும் புகழ்பெற்ற மனிதர்களைப்பற்றி பட்டியல் இட்டு காட்டுகிறார்: ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், லியொனார்டோ டா வின்சி, வால்ட் டிஸ்னீ, அகாதா க்ரிஸ்டீ, தாமஸ் எடிசன், பாப்லோ பிக்காசோ, மற்றும் நடிகர் அபிஷேக் பச்சன். மாணவர்கள் வகுப்பை விட்டு வெளியேறும் போது, நிகும்ப் இஷானிடம் அங்கே இருக்க சொல்கிறார். அந்த வேளையில், நிகும்ப் தானும் அதே போன்ற அவதிக்கு அதாவது புரிந்தும் படிக்க இயலாமை அல்லது சொல்லெழுத்துக்கேடு (dyslexia) நிலைமைக்கு ஆளாகியிருப்பதாக அவனிடம் சொல்கிறார். இதே தகவலை நிகும்ப் பள்ளியின் தலைமை ஆசிரியரான எம்.கே. ரைனாவிடம் கூறுகிறார் மேலும் அவர் இஷானுக்கு தனிப்பட்ட பயிற்சி அளிக்கலாமா என்று கேட்கிறார். தலைமை ஆசிரியரின் அனுமதியுடன், நிகும்ப் இஷானுக்கு குறைகளை களையும் உத்திகள் கொண்ட பயிற்சிகளை, அவை புரிந்தும் படிக்க இயலாமை அல்லது சொல்லெழுத்துக்கேடு (dyslexia) நிலைமையைப் பற்றி நன்கு அறிந்த வல்லுனர்கள் மேம்படுத்தியது, இஷானுக்கு அளிக்க தொடங்குகிறார். விரைவில் இஷான் மொழிகள் மற்றும் கணிதம் போன்றவற்றில் ஆர்வமுற்று திறமைகளை வளர்த்துக் கொள்கிறான் மேலும் அவனுடைய தரம் மேம்படுகிறது. அவ்வருடத்தின் இறுதிநாட்களில், நிகும்ப் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான ஒரு கலை சந்தையை ஏற்பாடுசெய்கிறார். இந்த போட்டியில் லலிதா லஜ்மி என்பவர் நடுவராக செயல்படுகிறார். (படத்தில் இந்த பாத்திரத்தில் அவரே நடிக்கிறார்). இஷான், அவனுடைய மனம் கவரும் ஆக்கமுறைகள் கொண்டு வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறார், மற்றும் அவனுடைய ஆசிரியரான நிகும்ப், (அவர் இஷானுடைய படத்தை வரைந்தார்) இரண்டாவது வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறார்.

இஷானின் பெற்றோர் பள்ளியின் இறுதி நாளன்று ஆசிரியர்களை சந்திக்கும்போது, அவனிடம் காணும் மாற்றங்களைக் கண்டு அவர்கள் பேச்சற்று விடுகிறார்கள் மேலும் அவன் எல்லா பாடங்களிலும் நன்றாக தேர்ச்சி பெற்று விளங்குகிறான். விடுமுறைகளைக்கழிக்க விடை பெறுவதற்கு முன்னர், இஷான் ஓடிச்சென்று அவனுடைய ஆசிரியரை கட்டிப்பிடித்துக்கொள்கிறான். இஷானை நிகும்ப் காற்றில் சுண்டி எறிதல் போன்ற காட்சியில், அவன் பறப்பது போன்ற ஒரு உவமையுடன் உறைய வைத்த சட்டம் போட்ட நிழற்படத்துடன் படம் முடிவடைகிறது.

நடிப்பு

நடிகர்/நடிகை பாத்திரம்
தர்ஷீல் சபாரி இஷான் அவஸ்தி
அமீர் கான் ராம் ஷங்கர் நிகும்ப் ("நிகும்ப் ஐயா")
டிஸ்கா சோப்ரா மாயா அவஸ்தி / மா
விபின் ஷர்மா நந்தகிஷோர் அவஸ்தி / பாபா
சச்செட் எஞ்சினீயர் யோஹான் அவஸ்தி /தாதா
தனய் செட்டா ராஜன் தாமோதரன்
எம்.கே. ரைனா முதன்மை போட்டோகிராபி
லலிதா லஜ்மி அவள்தான் (ஓவியப்போட்டி நடுவர்)

தயாரிப்பு

முன்- தயாரிப்பு

கணவன் மனைவி ஜோடியான அமோல் குப்தா மற்றும் தீபா பாடியா முதன்முதலில் தாரே ஜமீன் பர் என்ற கருத்திற்கான யோசனையை தெரிவித்தார்கள், சில குழந்தைகளால் கல்விகற்கும் முறைகளின் நியமனங்களுக்கு அடிபணிந்து ஒத்துப்போக இயலாமல்போவது ஏன் என்று அவர்களுக்கு விளங்கவில்லை மேலும் அதற்கான காரணத்தை அவர்கள் அறிந்துகொள்ள விரும்பினார்கள். இந்த திரைவிளையாட்டு "ஹை ஜம்ப்" என்ற ஒரு சிறு கதையாக துவங்கியது மற்றும் ஏழு ஆண்டுகளுக்குப்பிறகு ஒரு முழு நீளப்பணியாக உருவெடுத்தது.[3] பிறகு தீபா பாடியா தி ஹிந்து வுக்கு அளித்த பேட்டியில் துவக்கத்தில் அவர்களுடைய உத்வேகம் டிஸ்லெக்ஸியா என்ற புரிந்தும் படிக்க இயலாமை அல்லது சொல்லெழுத்துக்கேடு (dyslexia) என்ற பொருளை மையமாக கொண்டதாக இருக்கவில்லை என்றார். அதற்கு பதிலாக, ஜப்பான் நாட்டு படத்தயாரிப்பாளர் ஆன அகிரா குரோசவா என்பவரின் குழந்தைப்பருவத்தை அடிப்படையாக கொண்டது என்றார் (அவர் பள்ளிக்கூடத்தில் ஒரு பின்தங்கிய மாணவனாக இருந்தார்), ஏன் என்றால் பள்ளிக்கூட கல்விமுறைக்கு ஒத்துப்போகாத ஒரு சிறுவனின் கதையைப்பற்றி ஆராய்ந்து தெரிந்துகொள்ள அவர் விரும்பினார்.[3] பாடியா, குரோசாவாவின் வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட கணத்தில், அவர் ஒரு கலை ஆசிரியரை சந்தித்தார் மேலும் அந்த ஆசிரியர் அவருடைய நேரம் மற்றும் கவனிப்பை அவன்மீது திருப்பியதிலிருந்து குரோசாவாவின் வாழ்க்கை பொலிவடைந்து மலரத்தொடங்கியது என்பதை ஆதாரத்துடன் தெரிந்துகொண்டார்.[3] பாடியா மேலும் சொன்னதாவது, "இந்தக் காட்சி தான் எங்களுக்கு ஒரு ஆசிரியரால் ஒரு மாணாக்கனின் வாழ்க்கையை மாற்றியமைக்க இயலும் என்பதற்கான உத்வேகமாக தீர்ந்தது."[3]

குரோசாவாவை ஆதாரமாக கொண்டு ஒரு சிறுவனின் பாத்திரத்தை மேம்படுத்துகையில், பாடியாவும் குப்தேயும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்: "அமோல் எப்போதும் அந்த சிறுவனுக்கு என்ன கேடு? போன்ற கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருந்தார். அவன் என்ன மிகவும் மெதுவாக புரிந்து கொள்பவனா? அவனுக்கு என்ன ஆர்வமிருக்கவில்லையா, அல்லது அவன் திறமையற்றவனா? இது போன்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்துகொண்டே இருந்தன மேலும் அதற்கான சரியான விடைகள் எங்களிடம் இருக்கவில்லை என்பதும் புலனாயிற்று."[3] அவர்கள் இருவரும் மிகவும் ஆழ்ந்த ஆராய்ச்சியில் ஈடுபடத்தொடங்கினர் மேலும் அதன் காரணமாக அவர்கள் மகாராட்டிர டிஸ்லெக்ஸியா சங்கம்[12] மற்றும் பிஏசிஈ (PACE (Parents for a Better Curriculum for the Child)) போன்ற குழுமங்களை சந்திக்கத் தொடங்கினர். அவற்றின் நிகழ் விளைவாக அவர்கள் டிஸ்லெக்ஸியா என்ற புரிந்தும் படிக்க இயலாமை அல்லது சொல்லெழுத்துக்கேடு என்ற நிலைமையை மையத்தலைப்பு மற்றும் கருத்தாகக்கொண்டு படத்தை எடுக்க முடிவெடுத்தனர்: நாங்கள் இஷானின் கதையை முன் நிறுத்த இது தான் சரியான வழி என்றுணர்ந்தோம், ஏன் என்றால் சிறுவனுக்கு படித்து புரிந்து கொள்வதில் சிரமம் இருந்தும் அப்படி ஒரு பிரச்சினை இருப்பதாக யாரும் உணராமல் இருப்பதே."[3] அவர்கள் இருவரும் திரைப்படத்திற்கான திரைக்கதையை மேம்படுத்த டிஸ்லெக்ஸிக் நிலைமையினால் அவதியுற்ற சிறுவர்களுடன் நேரத்தையும் காலத்தையும் கழிக்கத்தொடங்கினர், மற்றும் திரைக்கதையின் இறுதிப்பதிப்பில் அவர்களை அடையாளம் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். குப்தே நினைவு கூர்ந்தது: “நாங்கள் ஒரு சிறு பயிலரங்கை எட்டு அல்லது ஒன்பது சிறுவர்களுடன் ஆரம்பித்தோம். ஒருவிளையாட்டு அமர்வாக அது இருந்தாலும், இதன் மூலம் நாங்கள் அவர்களுடைய மனக்கலக்க தவிப்புகளை கண்டறியவும், மற்றும் அவர்களுடைய மனப்போக்கை/ பாங்கை அறிந்து கொள்ளவும் அந்த இடத்தில் இயன்றது, அதற்காக நாங்கள் கலை, காகிதம் மற்றும் வண்ணங்களை பயன்படுத்தினோம். மேலும் அவர்கள் 'பெட்டிக்கு வெளியே இருந்து கொண்டு' மனதில் நினைப்பவர்கள் என்பது நாளடைவில் தெளிவாயிற்று. இப்பாங்கினை நாம் ஆதரிக்கவேண்டும், மதிக்கவேண்டும் மற்றும் கைதட்டி ஆர்ப்பரிக்கவேண்டும்."[3]

இந்தப்படத்தின் மைய உருவமான இஷானுக்கான பாத்திரத்தை ஏற்றுநடிக்க, குப்தே மற்றும் பாடியா அதற்கேற்ற நடிகனை கண்டுபிடிக்க ஷியாமக் தாவரின் கோடைக்கால பின்வாங்கும் பட்டறைகளை தெரிவுசெய்தார்கள். குப்தே பல சிறுவர்களின் திறமையை சோதிப்பதற்காக, அவர்களுக்கு அவர் சில திரைப்படக்காட்சிகளை விவரித்துக்காட்டினார் மற்றும் அதன் அடிப்படையில் வகுப்புக்கு மட்டம் தட்டுவதற்கான காட்சியை சிறுவர்களைக்கொண்டு இயல்பாக நடித்துக் காட்டச்சொன்னார். தர்ஷீல் சபாரியை தெரிவு செய்ததற்கான காரணத்தை கேட்டதற்கு, குப்தே மீண்டும் கூறியது, "அது கொஞ்சம் சிரமமான முடிவுதான். ஆனால் அவன் இஷானாக இருப்பதற்கு தேவையான குறும்புத்தனத்தை அவன் கண்களில் நீங்கள் காணலாம். அனைவரும் இயற்கையாகவே அவனையே தொடர்ந்து சுற்றிவரத் தொடங்கினர்."[3]

தயாரிப்பு

"அமோல் மிக சிறப்பான மற்றும் இதயத்தை பிழிந்தெடுக்கும் படக்கதையை எழுதியுள்ளார் என்று நான் நினைக்கிறேன் மேலும் இந்த படத்தில் அவர் ஒரு எழுத்தாளராக மட்டும் இருக்கவில்லை. முன் தயாரிப்பு வேலைகள் எல்லாமே அவர் செய்ததுதான் மேலும் அதற்கு மிகவும் முக்கியமான இசைக்கும் வடிவம் அவர்தான் கொடுத்துள்ளார் [...] அவர் படப்பிடிப்பில் முழுவதுமாக கலை இயக்குனராக கலந்து கொண்டு, எனக்கு அவர் மிகவும் ஆதரவு அளித்திருக்கிறார் மேலும் எனக்கு ஒரு வலிமையான வழிகாட்டியாகவும் இருந்து, நான் அறிமுக இயக்குனர் ஆவதற்கு காரணமாக இருந்திருக்கிறார். நான் அதற்காக அவருக்கு என் நன்றிக்கடனை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் என் மேல அத்தனை நம்பிக்கை வைத்து, அவருடைய இதயத்திற்கு மிகவும் பிடித்தமான ஒரு பணியை செய்வதற்கு என்னிடம் பொறுப்பை ஒப்படைத்ததற்கு நான் மேலும் கடமைப்பட்டவனாவேன்.
— அமீர் கான் [13]

பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஆன அமீர் கான் மற்றும் அமோல் குப்தா முதன் முதலாக அவர்கள் கல்லூரியில் படிக்கும்போது சந்தித்தார்கள் மேலும் அங்கே அவர் குப்தே அவர்களின் திறமைகளை, நடிகராகவும் , எழுத்தாளராகவும் மற்றும் ஓவியராகவும் இருப்பதைக்கண்டு மிகவும் பிரமித்துவிட்டார். தாரே ஜமீன் பர் படத்தின் கதையை மேம்படுத்துவதற்காக குப்தே மற்றும் பாடியா இருவரும் ஜோடியாக ஏழு வருடங்கள் பணி புரிந்தபிறகு, படத்தை வெளியிடுவதற்கு மூன்று வருடங்களுக்கு முன்னாலதான் கான் அதில் ஈடுபாடு கொண்டதாகவும், அதுவும் முதலில் ஒரு தயாரிப்பாளர் மற்றும் நடிகன் என்ற முறையில் அதில் சேர்ந்ததாக கான் சொல்கிறார் (குப்தே அதன் இயக்குனராக அப்போது இருந்தார்). இருந்தாலும், சில நாட்களுக்குப்பிறகு, கான் படத்தின் இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார், அவரும் குப்தே அவர்களும் ஒருவருக்கொருவர் இசைந்து இந்த பரிமாற்றத்தை மேற்கொண்டதாகவும் கான் கூறுகிறார். படத்தின் பலவகையான சுவையான அம்சங்களுக்கு குப்தே அவர்களுடைய ஈடுபாடே காரணம் என்று கான் பெருமிதம் கொள்கிறார்.[13][14]

தாரே ஜமீன் பர் படமே கானுக்கு முதல் இயக்குனர் மற்றும் நடிகரின் அனுபவத்தை பெற்றுத்தந்தது. கான் இந்த மாறுபட்ட நிலையானது அவருக்கு மிகவும் சவாலாக இருந்ததாக ஒப்புக்கொண்டுள்ளார், அவர் ஒரு படத்திற்கு இயக்குனராக வரவேண்டும் என்று எப்போதும் விரும்பிய போதிலும், "ஒரு விதமான முன்னேற்பாடும் இல்லாமல் அவர் அப்பணியில் குதிக்க நேர்ந்தது." இருந்தாலும், அவர், "ஒரு மகத்தான சிறுவர்களின் கொத்தோடு பணிகள்புரிய ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததற்கு, அதுவும் குறிப்பாக தர்ஷீல், சச்செட் மற்றும் தனய் செட்டா போன்றவர்களுடன் நடிப்பதற்கு கொடுத்துவைத்திருக்க வேண்டும்" என்றார்.[14] உண்மையாகவே, கான் படப்பிடிப்பின்போது குழந்தைகளிடையே மிகவும் பிரபலமடைந்துவிட்டார் மேலும் அதனால் "படப்பிடிப்பு நடந்த அந்த பஞ்சகணியிலுள்ள ந்யூ எர உயர்நிலைப் பள்ளியில் (New Era High School) படித்துக்கொண்டிருந்த அனைத்து 43 சிறுவர்களும் அவரைப்போலவே தலைமுடியை அலங்கரித்துக்கொள்ள வேண்டும் என விரும்பினர். செல்லம் கொடுப்பதில் பெயர்போன அமீர் கான் அவர்களுக்காக அவர்களின் விருப்பப்படி சிகை அலங்காரமும் செய்து கொடுத்தார்." [15] அதற்கும் மேலாக, குழந்தை நடிகர்களின் விருப்பத்தேவைகளை நாளுக்குநாள் நிறைவேற்றுவதில் கான் மிகவும் கவனம் செலுத்தினார். படத்தின் பிரதிநிதி பேச்சாளர் ஒருவர் சொன்னது, "அமீர் குழந்தைகளை மிகவும் நன்றாக பார்த்துக்கொண்டார். அவர்களுடைய நிகழ்ச்சி நிரல், உணவு மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்காக அவர் ஐந்து வல்லுனர்களை பணியில் அமர்த்தினார். அமீர் அவர்களை ஒரே பணியில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் அமர்த்த அவகாசம் கொடுக்கவில்லை மேலும் அடிக்கடி அவர்களுக்கு இடைவேளை அளித்தார் மற்றும் புத்துணர்வூட்ட குளிர்பானங்கள் மற்றும் சிற்றுண்டிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார். நாங்கள் அவர்களுக்காக படப்பிடிப்பை உள்ளரங்குகளிலும் வெளிப்புறத்திலும் மாற்றி மாற்றி அமைத்தோம், சிறுவர்கள் ஒரே இடத்தில் தொடர்ந்து அடைபட்டிருக்க வேண்டாம் என்ற நினைப்பால். பாலிவுட்டின் பாணியை பார்க்கும் போது, அது ஒரு மிகவும் வரவேற்கத்தக்க புத்துணர்வூட்டும் மாற்றமாக இருந்தது."[15] கான் மேலும் குறிப்பிட்டது:

சிறுவர்களுடன் பணிசெய்யும்போது, அதனுடன் சவால்களும் மிகையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அது கேளிக்கை நிறைந்ததாக இருந்தாலும், சில நேரங்களில் அது நம்மையும் சோதித்துப்பார்க்கும், அதுவும் நீங்கள் நாற்பது குழந்தைகளை ஒரே நேரத்தில் கண்காணிக்க வேண்டும் என்றால் [...] எங்களுக்கு குழந்தைகளை சுற்றிஇருந்து, குழந்தைகளுடன் கூட சேர்ந்து பணிகள் செய்யவேண்டியது முக்கியமாகும், அவர்களுடைய சக்தி மற்றும் நேரத்திற்கான கட்டுப்பாடுகளை கவனத்துடன் போற்றவேண்டும். அதனால் நாங்கள் குழந்தைகளை மகிழ்ச்சியாகவும் வசதியுடனும் வைத்துக்கொள்வதில் உறுதியாக இருந்தோம். நாங்கள் எப்பொழுதும் அவர்கள் கூடவே சுற்றி இருந்தோம்.[16]

தலைப்பு

ஒரு பேட்டியின் போது கான் அசலாக தாரே ஜாமீன் பர் என்ற தலைப்பைப்பற்றி சிந்திக்கவில்லை என்றும் மேலும் அவர், அமோல் குப்தே, மற்றும் தீபா பாடியா மூவரும் தலைப்பிற்கான சாத்தியக்கூறுகளைப்பற்றி விவாதித்தார்கள் என கூறினார். படத்திற்கான இறுதியாக முடிவுசெய்த தலைப்பைப்பற்றி கான் குறிப்பிட்டது:

தாரே ஜமீன் பர் குழந்தைகளைப்பற்றிய படமாகும் மற்றும் அப்படம் குழந்தைகளின் திறமைகளை போற்றுவதாகும். தாரே ஜமீன் பர் என்ற தலைப்பு, இந்த கருத்தை உட்கொள்கிறது. இத்தலைப்பானது ஒரு நிலையான உணர்வை கொண்டதாகும். எல்லா குழந்தைகளும் சிறப்பானவர்கள் மற்றும் விந்தைநிறைந்தவர்கள் ஆகும். அவர்கள் நமது புவியில் நட்சத்திரங்களைப்போல ஆகும். இந்த கருத்துணர்வே அந்த தலைப்பு உதிப்பதற்கு வழிவகுத்தது.[16]

பட வெளியீடு

பாக்ஸ் ஆபீஸ்

பாக்ஸ் ஆபீஸ் இந்தியா இந்தியாவில் தாரே ஜமீன் பர் என்ற படம் பாக்ஸ் ஆபீஸில் ஒரு மிகையான (சூப்பர் ஹிட்) வெற்றிப்படமாகும் என அறிவித்தது.[17] டிசம்பர் 21, 2007 அன்று இந்தியா முழுதும் 425 பதிவுகளுடன் வெளியானது[18] மற்றும் காலப்போக்கில் 2007 ஆம் ஆண்டின் மிக அதிகமாக வருவாய் ஈட்டிய படங்களில் ஐந்தாவது இடத்தை பிடித்தது.[17] ஐக்கிய சாம்ராஜ்ஜியத்தில் அப்படம் ஒன்பது வாரங்களில் £351,303 ஈட்டியது.[19] மற்றும் உலக அளவில் ரூபாய் 131 கோடியை ஈட்டியது.[20]

விமர்சன வரவேற்பு

தாரே ஜமீன் பர் அனைவரும் ஆர்பரித்து வரவேற்ற இனிய படமாகும். பிபிசி (BBC) யை சார்ந்த இரு மதிப்புரை எழுதுபவர்கள், இந்த படத்திற்கு தனித்தனியாக அட்டகாசமான விமர்சனம் அளித்துள்ளார்கள். மனிஷ் கஜ்ஜர் என்பவர் "இப்படம் மனதை தொடுவதாக அமைந்துள்ளது மற்றும் மிக சிறப்பான நடிப்பின்/ செயல்பாடுகள் காரணமாக உள் மனதின் ஆழத்தில் பதிகிறது" என்று சொன்னார். [இப்படம்] முழுதும் பொருள் நிறைந்ததாகும்! "[21] இதற்கும் மேலாக, ஜாஸ்ப்ரீத் பந்தோஹர் குறிப்பிட்டதாவது "தாரே ஜமீன் பர் பொதுவாக பாலிவுட் இயந்திரம் நாள்தோறும் அவிழ்த்துவிடும் விதிமுறைக்குட்பட்ட மசாலா படங்களில் இருந்து, இது முற்றிலும் வேறுபட்டதாகும்" என்றும் மற்றும் "அது ஒரு உத்வேகத்தை தூண்டும் கதையாகும், அது மனதை உணர்ச்சிவசப்படவைத்தாலும், அதே நேரத்தில் மகிழ்ச்சி அளிப்பதாகவும் உள்ளது; இது ஒரு சிறிய கண் சிமிட்டும் நட்சத்திரத்தின் படமாகும்."[22]தி டெலெகிராப் நிறுவனத்தின் பிரதிம் டி. குப்தா என்பவர் தாரே ஜமீன் பர் "ஒருவனை அது கட்டிப்பிடிக்கும், அவனை புகழ்ந்துரைக்கும் மற்றும் இறுதியில் அவனை நேராக எதிர்கொள்ளும், இது நீங்கள் இதுவரை எங்கும் பார்த்திராத வகையை சார்ந்ததாகும்" என்று விவரித்தார் மற்றும் [23]இந்தியா டுடே யின் காவேரீ பம்சாயி "இப்படம் எளிதாக இவ்வருடத்தின் மிகவும் நல்ல படமாகும்" என்றார்.[24]தி ஹிந்து வின் சுதிஷ் காமத் இந்தப்படத்தை மிகவும் உயர்வாக சிபாரிசு செய்தார் மேலும் அப்படத்தை "இவ்வருடத்தின் மிகச்சிறந்த படம்" என்று அழைத்தார். "இது சற்று பெட்டியை விட்டு மட்டும் வெளியே வந்ததல்ல, 'தாரே...' இந்த உலகத்தை விட்டே வெளியே வந்ததாகும்." என்றார்.[25] கூடுதலாக, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா வின் நிக்ட் கச்மி "கதை மிகவும் எளிதானதாகும் மற்றும் அரங்கிலுள்ள ஒவ்வொரு மனிதன் மற்றும் குழந்தையை உடனுக்குடன் சென்றடைகிறது, மற்றும் அதன் உச்சகட்டம் தெரிந்த வகையில் உள்ளது மற்றும் உங்கள் உணர்ச்சிகளுடன் அது மிகுதியாக விளையாடுகிறது. ஆனால் இப்படத்தை வானளாவிற்கு உயர்த்துவது அதன் எளிமை, எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய தன்மை மற்றும் அதன் செயல்பாடுகள் ஆகும். ஒரு பக்கம், யாரையும் வில்லனாக மாற்றாத அளவிற்கு படம் சாரா கைஎழுத்து வரிவடிவம் உள்ளது ...பெரியவர்கள் கூட அறியாமையால் பாதிக்கப்பட்டவரே [...] எல்லா பள்ளிக்கூடங்களும் பெற்றோர்களும் கட்டாயமாக இப்படத்தை பார்க்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்."[26]

இறுதியாக, ஸ்க்ரீன் நிறுவனத்தின் அப்ரஜித அணில் என்பவர் படத்திற்கு நான்கு நட்சத்திரங்கள் அளித்து, அவர் சொன்னது: "தாரே ஜமீன் பர் படத்தை யாரும் பார்க்க தவறக்கூடாது. ஏன் என்றால் அது வேறுபட்டது. அது மனதை முழுவதுமாக மகிழ்ச்சியடையவைப்பது. ஏன் என்றால் அது அனைவரையும் சிந்தனைசெய்ய வைக்கும். ஏன் என்றால் அது ஒவ்வொருவரையும் வளர உதவும். ஏன் என்றால் இப்படி ஒருவரின் மனதை இறுக்கிப்பிடிக்கும் நடிப்பை எப்போதோவது தான் பார்க்க இயலும். மேலும் ஏன் என்றால் 'கச்சிதமாக இருக்கும்’ நடிகர் இப்போது ஒரு 'கச்சிதமான இயக்குனராக' உருவாகிவிட்டார்.[27]

இதர திறனாய்வாளர்கள் அவர்களுடைய படத்தை பற்றிய கணிப்பில் வேறுபடுகிறார்கள். திரைக்கதையை பொறுத்தவரை, சிஎன்என்-ஐபிஎன் (CNN-IBN) னின் ராஜீவ் மசாந்து கூறுவதென்னவென்றால் இந்தப்படத்தின் உண்மையான வலிமையானது அதன் "குறிப்பிடத்தக்க, வேரூன்றிய, கடினப்பொருள் போன்ற கட்டியான வரிவடிவம் அதன் காரணமாக இப்படி உணர்ச்சிவசப்படும், இதயத்தை வருடும் அனுபவம் கிடைக்கப்பெற்றது" [28] மற்றும் தி ஹாலிவுட் ரிப்போர்ட்டரை சார்ந்த கவுதமன் பாஸ்கரன் நினைவூட்டுவது "உயர்ந்த செயல்முறைகள் இருந்த போதும், வலுவில்லாத வரிவடிவம் காரணமாக படம் சோபிக்கவில்லை."[29] பாஸ்கரன், பாலிவுட் சினிமா பற்றிய வேறொரு கட்டுரையில், தாரே ஜமீன் பர் படம், "நல்ல இயக்கம், நல்ல நடிப்பு (தர்ஷீல் சபாரி அந்த டிஸ்லெக்ஸிக் குழந்தையாக மிகவும் மென்மையாக நடித்துள்ளார்) மேலும் மிகவும் நன்றாக ஏற்றியது." என்று விவரித்தார்.[30] தி ஹாலிவுட் ரிப்போர்ட்டரின் மற்றுமொரு திறனாய்வாளர், லிசா செரிங், அவருக்கு படம் பிடித்திருந்தது, தாரே ஜமீன் பர் ஒரு "வலுவான மற்றும் இதயத்தை தொடும் படம்" என்று விவரித்தார் [31] மற்றும் வரைடி இதழின் டெரெக் கெல்லி என்பவர், ஒரு உடல் ஊனமுற்ற குழந்தையின் தனிவகை தேவைகளை கொச்சைப்படுத்தி, அவல நிலைமையை பயன்படுத்தி "மனதை-தொடும்-பாங்கை" வரவழைப்பதற்கு ஏளனம் செய்கிறார். படத்தில் "அனைவரும் மிகையாக கரிசனம் காட்டுவதும்" கெல்லிக்கு பிடிக்கவில்லை,-- "மேலும் நிஜவாழ்க்கையில் நிகழ்வது போன்ற சம்பவங்களோ அல்லது ஆர்வத்தை தூண்டும் சுவையான பாத்திரங்களோ இல்லாதது" அவருக்கு ஏமாற்றத்தை அளித்தது மேலும் படத்திற்கான சுவரொட்டிகளில் டிஸ்லெக்ஸியா சங்கம் அங்கீகரித்தது என்ற முத்திரை குத்தியதையும் அவர் சாடுகிறார்.[32]

2007 ஆம் ஆண்டின் மிகச்சிறந்த படத்தின் தெரிவில், தாரே ஜமீன் பர் மற்றும் சக் தே! இந்தியா என்ற படமும் சமமாக இருந்தன மேலும் பாலிவுட்டின் பல்வேறு பட இயக்குனர்களான மதுர் பண்டார்கர், டேவிட் தவன், ராகேஷ் ஓம்ப்ரகாஷ் மெஹ்ரா, அனுராக் பாசு, மற்றும் ஸ்ரீராம் ராகவன் போன்றோரும் 2007 ஆம் ஆண்டின் இந்தியா வில் தயாரித்த மிகச்சிறந்த படங்களாக ஆமொதிதனர்.[9] படத்தயாரிப்பாளரான அனுராக் கஷ்யப் சொன்னது என்னவென்றால், "தாரே ஜமீன் பர் "என்னை திரும்பவும் நான் விடுதியில் தங்கிய நாட்களை எண்ணவைத்தது. புரிந்தும் படிக்க இயலாமை அல்லது சொல்லெழுத்துக்கேடு (டிஸ்லெக்ஸியாவை) படத்தில் இருந்து எடுத்துவிட்டால், அது என் கதை போல் தோன்றும். இந்தப்படம் என்னை மிகவும் ஆழமமாக பாதித்துள்ளது மேலும் சில கணங்களுக்கு என்னை பேச்சற்றவனாகவே மாற்றிவிட்டது. படத்தை பார்த்தபிறகு, என்னை 'தாரே ஜமீன் பர்' பிடித்திருக்கிறதா என்று கேட்டார்கள். நான் மிகவும் ஆழமாக பொங்கியிருந்ததால், என்னால் பதில் கூற முடியவில்லை." [33]

2009 அகாடெமி விருதிற்கு சமர்ப்பித்தல்

2009 ஆம் ஆண்டுக்கான ஒஸ்கார் விருது எனப்படும் அகாடமி அவார்ட்ஸ் சிறந்த வெளிநாட்டுப் படம் (2009 Academy Awards Best Foreign Film (Oscars)) என்ற பகுப்பிற்காக அதிகாரபூர்வமாக இந்தியா தாரே ஜமீன் பர் படத்தை தெரிவு செய்தது[34] ஆனால் அப்படம் குறுக்கிய பட்டியலில் பட்டியலில் இடம் பெறவில்லை.[35] நடுவர் குழு உறுப்பினர் மற்றும் இயக்குனரான கிருஷ்ணா ஷா தாரே ஜமீன் பர் இசை வடிவத்தில் அமைந்திருந்ததாலும் மற்றும் மிகையான நீளம் காரணமாகவும், குறுக்கிய பட்டியலில் சேர்க்க இயலவில்லை என்று கூறினார். மேலும் இந்த இக்கட்டான நிலைமையைப்பற்றி ஏற்கனவே அவர் கானிடம் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.[36] கான் அவர்களே, என்டி டிவி (NDTV) நடத்திய ஒரு தனிப் பேட்டியில், தாரே ஜமீன் பர் ஒஸ்கார் விருதிற்கான குறுக்கிய பட்டியலில் இடம் பெறாததற்கு [37]"அதிர்ச்சி அடையவில்லை" என்று தெரிவித்தார் மேலும் "நான் விருதுகள் பெறுவதற்காக படங்களை தயாரிப்பதில்லை" என்றும் வாதாடினார். நான் படம்பார்க்கும் மக்களுக்காகவே (பார்வையாளர்களுக்காகவே) படங்களை தயாரிக்கிறேன் என்றார். நான் யாருக்காக இப்படத்தை தயாரித்தேனோ, அப்பார்வையாளர்கள், நிஜமாகவே அதை மிகவும் நேசித்தார்கள் மேலும் இந்தியாவிற்கு வெளியேயிருக்கும் பார்வையாளர்களும் அதை விரும்பினார்கள். நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் இந்த படத்தை உலக அளவில் பார்த்தவர் அனைவரும் விரும்பினார்கள் என்பதே, மேலும் என்னைப் பொறுத்தவரை அதுவே எனக்கு மிகவும் மகிழ்ச்சியூட்டுவதாகும் மேலும் நான் விலை மதிப்பில்லாதது என்று நினைப்பதும் அதுவே.[38]

மற்றவர்களும் இந்த முடிவிற்கு தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். மகேஷ் மஞ்ச்ரேகர், அவர் ஸ்லம்டாக் மில்லியனைர் படத்தில் ஜாவேத் என்ற முரடன் வேடம் பூண்டவர், (அப்படம் 2009 ஆஸ்கார் நிகழ்ச்சியில் பல விருதுகளைப்பெற்றது) கூறினார், "அமிருடைய தாரே ஜமீன் பர் படம் ஒஸ்காரின் இறுதி சுற்றுகளில் இடம் பெறாததற்கு நான் மிகவும் வருந்துகிறேன்." நான் அது ஸ்லம்டாகை விட பல மடங்கு நல்லதாக இருந்ததாக நினைத்தேன்..., போயில் மற்றும் இதர குழந்தைகளிடம் இருந்து எதையும் எடுத்துச்செல்லாமல். ஆனால், இந்தியப்படங்கள் அங்கே குறைந்த மதிப்பையே பெறுகின்றன."[39] மேலும் கூடுதலாக, தி ஹாலிவுட் ரிப்போர்ட்டரின் லிசா செரிங், குறிப்பிட்டது:

அமேரிக்கா மற்றும் இந்தியாவில் சாந்தினி சௌக் என்ற படம் திரையிடுவதற்கு மூன்று நாட்கள் முன்னால், தி அகாடெமி ஒப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சைன்சஸ் (The Academy of Motion Picture Arts and Sciences) தனது வெளிநாட்டுப்படங்களின் குறுகிய பட்டியலுக்கான ஒன்பது படங்களை அறிவித்தது, அப்படங்கள் விருதுக்கான வெளிநாட்டு மொழியை முன்மொழிதல் செய்வதற்கான வாய்ப்புடைய நெருங்கிய பட்டியலாகும். இந்தியா சமர்ப்பித்த, வலுமையான மற்றும் உணர்ச்சிமயமான அமீர் கானின் தாரே ஜமீன் பர் , அப்பட்டியலில் இடம் பெறவில்லை. இதில் உள்ள சோகம் என்னவென்றால், அமெரிக்காவின் முதன்மைபெற்ற பார்வையாளர்களுக்கு இப்படத்தை காணும் வாய்ப்பு என்றென்றைக்கும் கிடைக்காது; இருந்தாலும் சாந்தினி சௌக் என்ற படம் இங்கே பெரிய அளவில் விளம்பரம் ஆனது. தாரே ஜமீன் பர் என்ற படத்திற்கு மட்டும் அந்த அதிர்ஷ்டக்கை கிடைத்திருந்தால்!.[31]

விருதுகளின் பட்டியல்

தாரே ஜமீன் பர் படத்திற்கு 2008 ஆம் ஆண்டிற்கான பிலிம்பேரின் சிறந்த படத்திற்கான விருது கிடைத்தது. மேலும் அப்படம் வேறு பல விருதுகளையும் வென்றது, அவற்றில் மூன்று தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் சிறந்த இயக்குனருக்கு ஐந்து விருதுகளும் (அமீர் கான் ) கிடைத்தன. சிறிய நடிகரான தர்ஷீல் சபாரிக்கும்பல விருதுகள் கிடைத்தன அவற்றில் பிலிம்பேரின் திறனாய்வாளர்களின் சிறந்த நடிப்பிற்கான விருதும்(2008) அடங்கும்.

மேலிடத்தில் திரைக்காட்சிகள் காண்பித்தல்

ஆட்ரி ஹெப்பேர்னின் பிறந்த நாள் விழா

மே 3, 2009 அன்று பெர்லின் நகரத்தில் தாரே ஜமீன் பர் படத்தின் சிறப்புக்காட்சி ஒன்றை திரையிடுவதற்காக சீயன் ஹெப்பேர்ன் பெர்ரெர் என்பவர் அமீர் கானை அழைத்தார். பெர்ரெர்ரின் மறைந்த தாயாரான, ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகை ஆட்ரி ஹெப்பேர்னின் (Audrey Hepburn) 80 தாவது பிறந்த நாளை கொண்டாடுவதற்கான பெரிய அளவிலான நிகழ்ச்சியின் ஒரு பங்காக இப்படத்தை திரையிடுவதற்கான ஏற்பாடாகும். மேலும் அவர் அமீர் கானை "ஆட்ரி ஹெப்பேர்னின் குழந்தைகளுக்கான நிதி" ("Audrey Hepburn Children's Fund") என்ற அமைப்பில் சேர்ந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார், இந்த அமைப்பு யுனைடெட் நேஷன்ஸ் சில்ட்ரன்ஸ் பண்ட் (United Nations Children's Fund) என்ற அமைப்பின் ஆதரவை பெற்றதாகும். பெர்ரெர் சொன்னார்:

தாரே ஜாமீன் பர் என்ற படம் ஒரு குழந்தையின் அந்தரங்க உலகை சித்தரிக்கும், இதுவரை யாரும் செய்திராத, மிகவும் அற்புதமான திரைப்படமாக நான் காண்கிறேன் [...] அமீர் கானின் படம் குழந்தைகளிடம் மிகவும் அக்கறை கொண்டுள்ள திரைப்படமாகும், ஆட்ரி ஹெப்பேர்ன் அவர்கள் குழந்தைகளிடம் கொண்டிருந்த அதே ஆன்மாவை அமீர் கானுடைய படம் சித்தரிக்கின்றது, அது அவருக்கு மிகவும் முக்கியமாக இருந்தது, மேலும் அதனால் தாரே ஜமீன் பர் என்ற படமே இந்த முக்கிய நிகழ்ச்சியை கொண்டாடுவதற்கு உகந்ததாகும் என்பதை கூறுவதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.[40]

கான், அவரும் ஆட்ரி ஹெப்பேர்னின் விசிறியாகும், திரைப்படத்தை காண வந்திருந்த ஏராளமான மக்களைப் பார்த்து, இவ்வாறு பதிலுரைத்தார், "இப்படத்திற்கு இங்கு இப்படி ஒரு நல்ல வரவேற்பு கிடைத்தது என் மனதை தொட்டுவிட்டது மேலும் உங்கள் மேற்புகழ்ச்சி என்னை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது."[41] அவருடைய அனுபவத்தை அவருடைய வலைப்பதிவில் (blog) இவ்வாறு கூறுகிறார்:

மேலும் நான் ஒரு சுழல்காற்று போல் பெர்லினுக்கு வந்தது, நான் அங்கே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன், அல்லது உற்சாகத்துடன் இருந்தேன், வலைப்பதிவில் எழுதும் குழுவினரில் சிலரை காண முடிந்தது [...]

நான் ஆட்ரி ஹெப்பேர்ன் அவர்களின் மிகப்பெரிய விசிறியாக இருந்து நான் அந்த அழைப்பை சற்று உடனுக்குடன் ஏற்றுக்கொண்டேன் மேலும் நான் அப்படிசெய்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். நான் பேர்லினிலுள்ள என்னுடைய அனைத்து விசிறிகளையும் பார்க்க முடிந்தது, அதிலும் சிறப்பாக வலைப்பதிவில் எழுதுபவர்களை. நீங்கள் எல்லோரும் அங்கு வந்ததற்கு நான் என் நன்றியை தெரிவிக்கிறேன்.[42]

அனைத்துலக டிஸ்லெக்ஸியா சங்கம்

அமெரிக்காவில் (சீயாட்டில், வாஷிங்டன்) தாரே ஜமீன் பர் 29 அக்டோபர் 2008 அன்று அனைத்துலக டிஸ்லெக்ஸியா சங்கத்திற்காக திரையானது. பார்வையாளர்களில் சுமார் 200 மக்கள் இருந்தனர் மற்றும் "இந்தியர்கள் அல்லாத பார்வையாளர்கள் நாம் எடுத்த படத்தை எப்படி வரவேற்பார்கள் என்பதை அறிய மிகவும் ஆவல் கொண்டதாக" கான் குறிப்பிட்டார். இந்த படம் ஒரு மாநாட்டுக்கூடத்தில் திரையானது, திரை அரங்கில் அல்ல, இது அவருக்கு கவலை அளித்தது, மேலும் அது ஒரு திரைப்படமாக கருதவில்லை, ஆனால் ஒரு டிவிடி படமாக அறிவித்ததும் அவரை உறுத்தியது. படத்தின் முடிவில் பார்வையாளர்கள் அனைவரும் "முற்றிலும் எழுந்து நின்று கைதட்டி ஆர்பரித்து அவரை பாராட்டி" திக்குமுக்காட செய்து விட்டார்கள் மேலும் அவர் "பார்வையாளர்களின் கண்களில் இருந்து கண்ணீர் பொழிவதையும் கண்ணாரக்கண்டு ஆனந்தமுற்றார்." மேலும் கான் குறிப்பிடுவது என்ன என்றால் "இப்படத்தை இந்தியாவில் உள்ள நம் வீட்டு பார்வையாளர்களைப் போலவே அவர்களும் வரவேற்றார்கள்" என்பதே.[43][44]

ஒலித்தட்டு

Untitled

தாரே ஜமீன் பர் படத்திற்கான சிடி ஒலித்தட்டு நவம்பர் 5, 2007 அன்று வெளியானது மற்றும் அதற்கான இசையை ஷங்கர்-ஏஹ்சான்-லோய் அமைத்தார்கள். ஒலித்தட்டை பொறுத்தவரை இப்படம் இரு தேசிய திரைப்பட விருதுகளை வென்றது: சிறந்த பாடல் (பிரசூன் ஜோஷி) மற்றும் சிறந்த ஆண் பின்னணி பாடகர் (ஷங்கர் மகாதேவன் மா என்ற பாடலுக்கு).[10]

எண் தலைப்புSingers நீளம்
1. "Taare Zameen Par"  Shankar Mahadevan, Dominique Cerejo, Vivienne Pocha 4:28
2. "Kholo Kholo"  Raman Mahadevan 3:01
3. "Bum Bum Bole"  Shaan, Aamir Khan 3:32
4. "Jame Raho"  Vishal Dadlani 1:79
5. "Maa"  Shankar Mahadevan 3:14
6. "Bheja Kum"  Shankar Mahadevan, Bugs Bhargava, Shankar Sachdev, Roaj Gopal Iyer, Ravi Khanwiker, Loy Mendonsa, Amole Gupte, Kiran Rao, Aamir Khan, Ram Madhavni 1:27
7. "Mera Jahan"  Adnan Sami, Auriel Cordo, Ananya Wadkar 3:92
8. "Ishaan's Theme"  Loy Mendonsa, Shankar Mahadevan, Ehsaan Noorani 2:53

டி.வி.டி.

இந்தியா

தாரே ஜமீன் பர் திரைப்படத்தின் டிவிடி, யுடிவி ஹோம் என்டெர்டைன்மென்ட் (UTV Home Entertainment) என்ற நிறுவனத்தினரால் [45] இந்தியாவில் 25 ஜூலை 2008 அன்று வெளியானது. தர்ஷீல் சபாரி படித்த பள்ளிக்கூடமான மும்பையில் உள்ள கிரீன் லாவ்ன்ஸ் உயர்நிலை பள்ளியில் அது தொடங்கியது. அமீர் கான், டிஸ்கா சோப்ரா, விபின் ஷர்மா, சசெட் என்ஜினீயர் (இஷானின் குடும்பத்தினராக நடித்தவர்கள்), மற்றும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட இதர உறுப்பினர்களும் வந்திருந்தார்கள். தமது உரையாடலில், கான் சொன்னது: "தர்ஷீல் ஒருமிகவும் மகிழ்ச்சியுடைய, கலகலப்பான மற்றும் துள்ளும் உயிரூட்டம் கொண்ட ஒரு குழந்தையாவான். அவன் அப்படி இருப்பதற்கான காரணம் அவனை அப்படி அவனுடைய பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் வளர்த்ததே ஆகும் என்று நான் உறுதியுடன் கூறுகிறேன். தர்ஷீலின் பிரின்சிபால் ஆன திருமதி. பஜாஜ் எங்களுக்கு மிகவும் ஆதரவளித்தார் மற்றும் எங்கள் பணிகளுக்கு ஊக்கமும் தந்தார் என்பதை நான் குறிப்பிட்டே ஆகவேண்டும். ஒரு பள்ளியை உண்மையில் சோதிக்க, குழந்தைகள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை அறியவேண்டும், மேலும் அப்படி பார்க்கும் போது, இங்கு இருக்கும் குழந்தைகள் உண்மையில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவே தெரியவருகிறது.[46]

அனைத்துலக பதிப்பு

ஜனவரி 12, 2010 அன்று, லைக் ஸ்டார்ஸ் ஓன் எர்த் (Like Stars on Earth) என்ற அனைத்துலக டிவிடி (DVD) பதிப்பு, வெளியிடுவதற்கான ஆயத்தங்கள் செய்யப்படுகின்றன.[1] வால்ட் டிஸ்னீ கம்பனி ஹோம் என்டெர்டைன்மேன்ட் (Walt Disney Company Home Entertainment) (அந்நிறுவனம் யுடிவி யில் 14.85 விழுக்காடு பங்குகளை [47] வாங்கியுள்ளது) லைக் ஸ்டார்ஸ் ஓன் எர்த் (Like Stars on Earth) படத்திற்கான வீடியோ வினியோக உரிமைகளைப் பெற்றுள்ளது மற்றும் வடக்கு அமேரிக்கா, ஐக்கிய சாம்ராஜ்ஜியம் மற்றும் ஆஸ்த்ரேலிய நாடுகளில் அப்படம் வெளியாகும்.[48]

பிற மொழிகளில்

வால் நட்சத்திரம் (ஆங்கிலத்தில் Like Stars on Earth), ஹிந்தியில் அமீர் கான் இயக்கி நடித்த தாரே ஜமீன் பர் என்ற திரைப்படத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு ஆகும். இத்திரைப்படம் இந்தியில் 2007ஆம் ஆண்டு வெளியானது. குழந்தைகளின் கற்றல் குறைபாடுகளை உணரச்செய்யும் விதத்தில் இதன் கதையம்சம் இருந்தது.

குறிப்புகள்

  1. "Like Stars on Earth". Walt Disney Company Home Entertainment. பார்த்த நாள் 2009-10-15.
  2. "It's films that matter at the box office, not stars: Aamir". Press Trust of India. பார்த்த நாள் 2008-08-10.
  3. Vij, Gauri (February 3, 2008). "A leap of faith". The Hindu. பார்த்த நாள் 2008-04-11.
  4. IndiaFM News Bureau (December 26, 2007). "Tata Elxsi renders visual effects for the Bollywood movie Taare Zameen Par". IndiaFM. பார்த்த நாள் 2008-04-10.
  5. Mitra, Ashish (March 21, 2008). "Putting clay into play". screenindia.com. பார்த்த நாள் 2008-04-15.
  6. Dhimantvyas. "Making of Taare Zameen Par title animation". dhimantvyas.com. பார்த்த நாள் 2009-05-12.
  7. "Taare Zameen Par brings clay animation to Bollywood". Yahoo! News (January18, 2008). பார்த்த நாள் 2008-06-30.
  8. Dubey, Bharati (21 July 2008). "Disney buys N American rights for TZP". Times of India. பார்த்த நாள் 2008-07-25.
  9. "Taare Zameen Par, Chak De top directors' pick in 2007". Economic Times (December 29, 2007). பார்த்த நாள் 2008-04-10.
  10. "55th NATIONAL FILM AWARDS FOR THE YEAR 2007". Press Information Bureau (Govt. of India).
  11. IndiaFM News Bureau (December 27, 2007). "Taare Zameen Par becomes Tax Free". IndiaFM. பார்த்த நாள் 2008-04-10.
  12. "Maharashtra Dyslexia Association". பார்த்த நாள் 2008-04-11.
  13. "Director's Note: Official website for Taare Zameen Par". பார்த்த நாள் 2008-04-11.
  14. Singh, Harneet (May 21, 2007). "Yes, I have directed Taare Zameen Par" - Aamir Khan". Bollywood Hungama. பார்த்த நாள் 2008-04-11.
  15. "Aamir bends the rules" (December 24, 2007). பார்த்த நாள் 2008-04-21.
  16. Patel, Devansh (December 18, 2007). "TZP makes me a proud actor, producer and a director". Bollywood Hungama. பார்த்த நாள் 2009-05-12.
  17. "Box Office 2007". Box Office India. மூல முகவரியிலிருந்து 2012-07-29 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-05-05.
  18. Meenakshi, Verma (December 26, 2007). "Taare Zameen Par adds to Christmas sparkle at BO". Economic Times. பார்த்த நாள் 2008-04-10.
  19. "'Taare Zameen Par' Overseas". IndiaFM. பார்த்த நாள் 2009-05-05.
  20. "It's films that matter at the box office, not stars: Aamir". Press Trust of India(PTI) (August 10, 2008). பார்த்த நாள் 2008-08-10.
  21. Gajjar, Manish. "Taare Zameen Par (2007)". Film Reviews. BBC. பார்த்த நாள் 2008-01-06.
  22. Pandohar, Jaspreet (18 December 2007). "Taare Zameen Par (2007)". Film Reviews. BBC. பார்த்த நாள் 2008-04-08.
  23. Gupta, Pratim (December 23, 2007). "Return to innocence". The Telegraph. பார்த்த நாள் 2009-04-18.
  24. Kaveree, Bamzai (December 28, 2007). "ALL STAR SIMPLICITY". India Today. பார்த்த நாள் 2008-11-01.
  25. Kamath, Sudhish (January 4 2007). "Return to innocence -- Taare Zameen Par". Film Reviews. The Hindu. பார்த்த நாள் 2008-04-08.
  26. Kazmi, Nikhat (December 21, 2007). "Review". Times of India. பார்த்த நாள் 2008-04-10.
  27. Aprajita, Anil (December 21, 2007). "Review". Screen. பார்த்த நாள் 2009-05-12.
  28. Masand, Rajeev (December 21, 2007). "Taare Zameen Par may change your life". IBN-CNN. பார்த்த நாள் 2008-04-10.
  29. Bhaskaran, Gautaman (January 31, 2008). "Review". The Hollywood Reporter. மூல முகவரியிலிருந்து 2008-09-27 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-06-01.
  30. Bhaskaran, Gautaman (April/May 2008). "Bollywood Dispatch #18: Cannes, U Me Aur Hum, Mumbai Cutting: A City Unfolds, Khuda Kay Liye". lumiere.net.nz. பார்த்த நாள் 2009-05-12.
  31. Tsering, Lisa (January 15, 2009). "Film Review: Chandni Chowk to China". The Hollywood Reporter. மூல முகவரியிலிருந்து 2009-01-16 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-05-12.
  32. Derek, Kelly (December 28, 2007). "Review". Variety. பார்த்த நாள் 2008-06-01.
  33. UNI (January 4, 2008). "'Taare Zameen Par' rocks overseas audience". DNA. பார்த்த நாள் 2009-05-12.
  34. PTI (2008-12-22). "Aamir gets congratulatory call from Oscar panel chief for ‘TZP’!". Zee Entertainment Enterprises. பார்த்த நாள் 2009-01-02.
  35. PTI (14 January 2009). "Taare Zameen Par is special film to all Indians: Aamir". Daily News and Analysis. பார்த்த நாள் 2009-01-14.
  36. PTI (2009-02-01). "Why Taare... didn't make it to the Oscars". NDTV. பார்த்த நாள் 2009-02-01.
  37. Press Trust of India (31 January 2009). "No Obama-like leader in Indian politics: Aamir". India Today. http://indiatoday.digitaltoday.in/index.php?option=com_content&issueid=31&task=view&id=26844&sectionid=67&Itemid=1. பார்த்த நாள்: 31 January 2009.
  38. Indo-Asian News Service (31 January 2009). "I don’t make films for awards: Aamir Khan". Hindustan Times. http://www.hindustantimes.com/StoryPage/StoryPage.aspx?sectionName=HomePage&id=13a498e1-7e3a-447d-96f7-bede2011bbc5&MatchID1=4892&TeamID1=1&TeamID2=5&MatchType1=2&SeriesID1=1235&PrimaryID=4892&Headline=I+don%27t+make+films+for+awards%3a+Aamir+Khan. பார்த்த நாள்: 31 January 2009.
  39. No more acting for me: Mahesh Manjrekar
  40. Banerjee, Soumyadipta (2009-04-20). "Aamir Khan's Tryst with Audrey Hepburn". DNA. பார்த்த நாள் 2009-04-22.
  41. Iyer, Meena (2009-05-05). "What’s Aamir doing in Berlin?". Times of India. பார்த்த நாள் 2009-05-04.
  42. Khan, Aamir (2009-05-09). "Aamir Khan's Blog: DELIRIUM DIVE! (May 9, 2009)". பார்த்த நாள் 2009-05-09.
  43. Khan, Aamir (2008-11-01). "Sleepless In Seattle". aamirkhan.com. பார்த்த நாள் 2008-01-31.
  44. "‘Taare Zameen Par’ gets standing ovation in Seattle". IANS (November 1 2008). பார்த்த நாள் 2008-11-01.
  45. Shahryar, Faridoon (21 July 2008). "DVD Review (India)". India FM. பார்த்த நாள் 2008-07-25.
  46. Ramsubramaniam, Nikhil (25 July 2008). "Taare Zameen Par DVD launch in a complete Masti Ki Paathshala". India FM. பார்த்த நாள் 2008-07-25.
  47. Kumar, Arun (29 November 2007). "Europe's Walt Disney set to take control in UTV". Hindustan Times. பார்த்த நாள் 2008-07-25.
  48. FRATER, PATRICK (25 July 2008). "Disney goes Bollywood". Variety. பார்த்த நாள் 2008-07-25.

கூடுதல் வாசிப்பு

வெளி இணைப்புகள்

விருதுகள்
முன்னர்
Rang De Basanti
Filmfare Best Movie Award
2008
பின்னர்
Jodhaa Akbar
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.