தாருகாபுரம்

தாருகாபுரம் (ஆங்கிலம் : Dharugapuram) இது இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், சிவகிரி வட்டம்[4], வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில்[5][6] உள்ள ஊர் ஆகும்.

தாருகாபுரம்
  கிராமம்  
தாருகாபுரம்
இருப்பிடம்: தாருகாபுரம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 9°12′43″N 77°26′06″E
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், இ. ஆ. ப. [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

இவ்வூரின் சிறப்பு

அருள்மிகு மத்தியஸ்தநாதசுவாமி திருக்கோயில். தென்பாண்டி நாட்டின் பஞ்ச பூத தலங்களில் ஒன்றான நீர் தலம் என இவ்வூர் குறிப்பிடப்படுகின்றது.[7] பஞ்ச பூதங்களில் ஒன்று நீர். இவ்வாலய கருவறையிலுள்ள லிங்கத் திருமேனியைச் சுற்றி எப்போதும் நீர் சூழ்ந்திருக்கும். எனவே இது நீர்த்தலம் எனப்படுகிறது.

சிவபெருமானின் அம்சமான தட்சிணாமூர்த்தி, இக்கோவிலில் நவகிரகங்களையும் தன்னகத்தே கொண்டு விளங்குவதால், இங்கே தனியாக நவகிரக சந்நிதி இல்லை. தட்சிணாமூர்த்தியை வழிபட்டாலே நவகிரகங்களின் அருளையும் சேர்த்துப் பெறலாம் என்பது தொன்நம்பிக்கை.

புராணம்

முற்காலத்தில் மனதைக் குளிர்விக்கும் அற்புத வளங்களோடு விளங்கிய இந்தப் பகுதி தாருகாவனம் எனப்பட்டது. மன்னர்களும் தவயோகிகளும் மக்களும் இளைப்பாறிச் செல்லும் எழிலார்ந்த பகுதியாக விளங்கிய இது, சேர- சோழ- பாண்டிய நாடுகளின் எல்லையில் இருந்தது. அதனால் இதைக் கைப்பற்ற மூவேந்தர்களுக்கிடையே அடிக்கடி சண்டை மூண்டு வந்தது.

இறுதியாக தங்கள் பிரச்சினையைத் தீர்க்க வல்லவர் மாமுனியான அகத்தியர் ஒருவரே என்னும் முடிவுக்கு வந்தவர்கள், அகத்தியரைக் காண தென்திசை நோக்கிப் பயணமானார்கள். அவ்வாறு வரும்போது தாருகாவனத்தில் இளைப்பாறினார்கள்.

அப்போது அங்கு வந்த ஒரு முனிவர் நீங்கள் சம்மதித்தால் நான் மத்தியஸ்தராக இருந்து உங்கள் பிரச்சினையைத் தீர்த்து வைக்கிறேன் என்றார். மூவரும் தங்களுக்குள் ஆலோசித்து, முனிவரின் தீர்ப்பை ஏற்பதாகக் கூறினர்.

சோழ மன்னா, நீ வாய்க்கால் பகுதிகளை வைத்துக்கொள். சேர மன்னா, நீ ஏரிப் பகுதிகளை வைத்துக்கொள். பாண்டிய மன்னா, நீ குளங்கள் உள்ள பகுதிகளை வைத்துக்கொள் என்று கூறிய முனிவர் மறுகணம் மறைந்து போனார். அவர் நின்றிருந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் காட்சியளித்தது. இதைக் கண்டு மெய்சிலிர்த்த மூவேந்தரும் சுயம்பு லிங்கமான ஈசனுக்கு அங்கேயே கோவிலும் எழுப்பினர்.

மாமன்னர்களின் மனப் பிணக்கைத் தீர்த்து வைத்ததால் இத்தல ஈசன் பிணக்கறுத்த மகாதேவர், மத்தியஸ்த நாதர் என்னும் திருப்பெயர்களில் வழங்கப் பெறுகிறார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.