தாயகம் (திரைப்படம்)

தாயகம் திரைப்படம் ஏ.ஆர்.ரமேஷ் இயக்கத்தில் 1996ம் ஆண்டு வெளியான அதிரடி தமிழ் படமாகும். விஜயகாந்த், அருண் பாண்டியன், நெப்போலியன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தேவா இசையமைப்பில் 15 ஜனவரி 1996 ல் வெளிவந்தது. வசூலில் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. [1][2] இத்திரைப்படம் தெலுங்கில் மாத்ருபூமி என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.[3]

தாயகம்
இயக்கம்ஏ.ஆர்.ரமேஷ்
தயாரிப்புஎஸ்.மணி
எஸ்.ராமுவசந்தன்
இசைதேவா
நடிப்புவிஜயகாந்த்
அருண் பாண்டியன்
ரஞ்சிதா
நெப்போலியன்
ஒளிப்பதிவுராஜராஜன்
படத்தொகுப்புஜி.ஜெயசந்திரன்
விநியோகம்சேரநாடு மூவி க்ரியேஷன்ஸ்
வெளியீடு15 ஜனவரி 1996
ஓட்டம்155 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை

மரண தண்டனை பெற்ற மூன்று கைதிகள் சிறையிலிருந்து தப்பித்து, அப்துல் சலிம் (லஷ்மி ரத்தன்) எனும் விஞ்ஞானி பயணிக்கும் விமானத்தை கடத்துகின்றனர். ஏனெனில் அவர் ஒரு அதிசய கண்டுபிடிப்பான ஒரு மருந்தை தனக்கு சொந்தமாக்கி கொள்ள கடத்துகின்றனர். விமான ஒட்டி (நெப்போலியன்) கடத்தல்காரர்களின் கட்டளைகிணங்க விமானத்தை காஷ்மீர் மலை மீது இறக்குகிறார். அங்கே, ஸ்னொபியர் (மன்சூர் அலிகான்) எனும் தீவிரவாதிகளின் தலைவன் மருந்தை பெறுவதற்காக பயணிகளை கொல்வதாக மிரட்டுகிறான். அவர்களை மீட்பதே மீதி கதை.

நடிகர்கள்

விருதுகள்

இத்திரைப்படம் வெளியானபோது பின்வரும் விருதுகளை பெற்றது:

  • தமிழ் மாநில திரைப்பட விருதில் சிறந்த நடிகருக்கான சிறப்புவிருது விஜயகாந்துக்கு கிடைத்தது.
  • தமிழ்மாநில திரைப்படவிருதில் சிறந்த கவிஞர் விருது பிறைசூடனுக்கும் கிடைத்தது.

பாடல்கள்

Untitled

இத்திரைப்படத்திற்கான பிண்ணனி இசையையும் பாடலுக்கும் தேவா இசையமைத்திருந்தார். 1996ல் பாடல்கள் வெளியானது, இதிலுள்ள 5 பாடல்களை கவிஞர் பிறைசூடன் எழுதியிருந்தார். [4]

பாடல்கள்பாடல்பாடியவர்கள்கால அளவு
1'சூ சூ தாரா'மலேசியா வாசுதேவன், சித்ரா4:48
2'மோனாலிசா'மனோ, சித்ரா4:52
3'ஒரு இனிய பறவை'குழந்தை வேலன்,சித்ரா5:06
4'ரங்கீலா'கே. ஜே. யேசுதாஸ், சித்ரா4:28
5'என் கண்ணில்'கோபால் சர்மா5:29

மேற்கோள்கள்

  1. "Thaayagam". entertainment.oneindia.in. பார்த்த நாள் 2013-01-18.
  2. "Thayagam (1996) Tamil Movie". en.600024.com. பார்த்த நாள் 2013-01-18.
  3. http://www.aptalkies.com/movie.php?id=4218&title=Mathrubhoomi%20(1996)
  4. "Thayagam : Tamil Movie". hummaa.com. பார்த்த நாள் 2013-01-18.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.