தாமோதர பாண்டே

தாமோதர பாண்டே (Damodar Pande) (நேபாளி: दामोदर पाँडे) (1752 மார்ச் 13, 1804) ஷா வம்ச, நேபாள இராச்சியத்தின் மன்னர் கீர்வான் யுத்த விக்ரம் ஷாவின் முதல் பிரதம அமைச்சராக, 1799 முதல் 1804 முடிய பதவி வகித்தவர்.[3]

பிரதம அமைச்சர்
மூல்காஜி சாகிப்

தாமோதர பாண்டே
श्री मूलकाजी साहेब
दामोदर पाँडे
தாமோதர பாண்டே
முதல் நேபாள பிரதம அமைச்சர் (மூல்காஜி)[1]
மூல்காஜி
பதவியில்
1799–1804
அரசர் கீர்வான் யுத்த விக்ரம் ஷா
பின்வந்தவர் ரணஜித் பாண்டே
தலைமைப் படைத்தலைவர்
தனிநபர் தகவல்
பிறப்பு கிபி 1752
இறப்பு கிபி 1804
தேசியம் நேபாளி
பிள்ளைகள் 5 மகன்கள்: ரணகேஸ்வர் பாண்டே, ரணபம் பாண்டே, ராணதல் பாண்டே, ராணா ஜங் பாண்டே, கரவீர பாண்டே[2]
சமயம் இந்து சமயம், சேத்திரி குலம்
படைத்துறைப் பணி
பற்றிணைவு  நேபாளம்
தர வரிசை தலைமைப் படைத்தலைவர்
சமர்கள்/போர்கள் சீன நேபாளப் போர்

இவரது தந்தை கலு பாண்டே, நேபாள இராச்சியத்தை நிறுவிய மன்னர் பிரிதிவி நாராயணன் ஷாவின் கஜி எனும் பதவியில் அமைச்சர் இருந்தவர். தாமோதர பாண்டே, இமயமலை சத்திரிய இனங்களில் ஒன்றான சேத்திரி பிரிவைச் சேர்ந்தவர்.

1752ல் கோர்காவில் பிறந்த தாமோதர பாண்டே, சீன - நேபாளப் போரின் போது, நேபாளப் படைத்தலைவராக பணியாற்றியவர். [4][5][6]

அரசியல்

நேபாள மன்னர் ராணா பகதூர் ஷாவிற்கு (ஆட்சிக் காலம்: 1777 - 1799) எதிரான மக்கள் போராட்டத்தால் வாரணாசிக்கு நாடு கடத்தப்பட்ட போது[7], சிறு குழந்தையாக இருந்த கீர்வான் யுத்த விக்ரம் ஷாவை அரியணை ஏற்றி, அவரது மெய்காப்பாளராகவும், அமைச்சராகவும் தாமோதர பாண்டே நியமிக்கப்பட்டார்.

4 மார்ச் 1804ல் முன்னாள் மன்னர் ராணா பகதூர் ஷா நேபாளம் திரும்பி, நேபாளத்தின் தலைமை அமைச்சராக (முக்தியார்) பொறுப்பேற்றார். 13 மார்ச் 1804ல் ராணா பகதூர் ஷாவின் உத்திரவுப்படி, தாமோதர பாண்டேவை தன்கோட்டில் வைத்து தலையை கொய்து கொல்லப்பட்டார்.[8]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Acharya 2012, பக். 54.
  2. [http://nepalarmy.mil.np/history.php?page=three Nepal Army
  3. Nepal 2007, பக். 58.
  4. Acharya 2012, பக். 55.
  5. "Advanced history of Nepal" by Tulasī Rāma Vaidya
  6. Nepal:The Struggle for Power (Sourced to U.S. Library of Congress)

ஆதார நூற்பட்டியல்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.