தாமசு பாக்

தாமசு பாக் (Thomas Bach, வர்ட்சுபர்கில் பிறப்பு: 29 திசம்பர் 1953) செருமானிய வழக்கறிஞரும் முன்னாள் வாள்வீச்சு வீரரும் ஆவார். இவர் பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் ஒன்பதாவது மற்றும் தற்போதைய தலைவராக உள்ளார். இடாய்ச்சு ஒலிம்பிக் விளையாட்டுக் குழுவின் (DOSB) செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார்.

மேதகு
தாமசு பாக்
9வது பன்னாட்டு
ஒலிம்பிக் குழுத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
10 செப்டம்பர் 2013
முன்னவர் ஷாக் ரோகெ
தனிநபர் தகவல்
பிறப்பு 29 திசம்பர் 1953 (1953-12-29)
வர்ட்சுபர்கு, மேற்கு செருமனி

வாள்வீச்சு விளையாட்டு

தாமசு பாக்

பாக் டாபெர்பிசோசைம் வாள்வீச்சு சங்கத்தின் (FC Tauberbischofsheim) முன்னாள் விளையாட்டுக்காரர் ஆவார். 1976இல் மொண்ட்ரியாலில் நடந்த கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வாள்வீச்சிற்கான அணி விளையாட்டில் செருமானிய அணிக்கு தங்கப் பதக்கம் வென்றளித்தார்.[1][2] அடுத்தாண்டு புவனெசு ஐரிசில் நடந்த வாள்வீச்சு உலகப் போட்டிகளில் உலகச் சாதனையாளராக பட்டம் வென்றார்.

மேற்சான்றுகள்

  1. "Olympics Statistics: Thomas Bach". databaseolympics.com. பார்த்த நாள் 16 April 2011.
  2. "Thomas Bach Olympic Results". sports-reference.com. பார்த்த நாள் 16 April 2011.

வெளி இணைப்புகள்

முன்னர்
சாக் ரோகெ
பன்னாட்டு ஒலிம்பிக் குழுத் தலைவர்
2013–நடப்பு
பதவியில் உள்ளார்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.