தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (Tamilnad Mercantile Bank Limited) இந்தியாவின் ஒரு பழமையான தனியார் வங்கியாகும். இது தூத்துக்குடி நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. இந்த வங்கி நாடார் மகாஜன உறுப்பினர்களால் 1921 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த வங்கி இந்திய நிறுவனங்கள் சட்டம்-1913 ன் கீழ் 1921 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதியில் நாடார் வங்கி (ஆங்கிலம்: Nadar Bank Limited) எனும் பெயரில் பதிவு செய்யப்பட்டது. 1921 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று இந்த வங்கியின் முதல் தலைவராக எம்.வி. சண்முகவேல் நாடார் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இந்த வங்கிக்கு தற்போது இந்தியா முழுவதும் 267 கிளைகள் உள்ளன.
![]() | |
வகை | தனியார் நிறுவனம் |
---|---|
நிறுவுகை | தூத்துக்குடி-, மே 11, 1921 |
தலைமையகம் | தூத்துக்குடி-, இந்தியா |
முக்கிய நபர்கள் | மேலாண் இயக்குனர்& தலைமை நிர்வாக அதிகாரி ஏ. கே. ஜெகன்னாதன் |
தொழில்துறை | வங்கி மூலதன சந்தைகள் மற்றும் தொடர்புடைய தொழில்கள் |
உற்பத்திகள் | கடன்கள், கடனட்டைகள், சேமிப்பு, முதலீடு சாதனங்கள் போன்றவை. |
இணையத்தளம் | வங்கியின் இணையதளம் |
எர்னஸ்ட் அன்ட் யங் என்ற நிறுவனம் வெளியிடும் 2011ம் ஆண்டுக்கான சிறந்த இந்திய வங்கிகளின் தர வரிசைப் பட்டியலில் பழமையான தனியார் வங்கிகளில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.[1]
மேற்கோள்கள்
- "பழமையான தனியார் வங்கிகளில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கு முதலிடம்". ஒன்இந்தியா (மார்ச்சு 30, 2012). பார்த்த நாள் மார்ச்சு 30, 2012.