தமிழக முத்திரைக் காசு வார்ப்புக் கூடுகள்

தமிழக முத்திரைக் காசு வார்ப்புக் கூடுகள் என்பது தமிழக முத்திரைக் காசுகள் செய்ய பயன்பட்ட வார்ப்புக் கூடுகளாகும். இதில் கிடைத்த சாம்பல் நிற வார்ப்புக் கூடுகள் இரண்டும் சென்னை பல்கலைக்கழகப் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறையால் நடந்த இரு அகழ்வாராய்ச்சிகளில் கண்டெடுக்கப்பட்டவை.

கூடுகள்

  1. முதலாம் வார்ப்புக் கூட்டில் ஒரே தரத்தில் நான்கு நாணயங்களை தயாரிக்கக் கூடிய வசதி உள்ளது. இவற்றில் 2 காசச்சுகள் நல்ல நிலையிலும், 2 மிகத்தேய்ந்த நிலையிலும் காணப்படுகின்றன. இவற்றில் யானை, காளை மற்றும் அறுகிளைச் சின்னம் ஆகியவை காணப்படுகின்றன.
  2. இரண்டாம் கூடு காஞ்சிபுரம் அகழ்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றில் உள்ள அச்சுகளில் ஒன்று நல்ல நிலையிலும் மற்ற மூன்றும் தேய்ந்த நிலையிலும் காணப்படுகின்றன. இவற்றில் யானை, காளை மற்றும் அறுகிளைச் சின்னம் ஆகியவை காணப்படுகின்றன.

முக்கியத்துவம்

முதலில் இதைப்போன்ற முத்திரை காசுகள் வட இந்தியாவில் இருந்து தமிழகம் வந்தவை என்ற கருத்து நிலவியது. ஆனால் மகாலிங்கம் போன்றவர்கள் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு முதலே பாண்டியர்கள் முத்திரைக்காசுகளை வெளியிட்டுள்ளதால் வடவிந்திய வழியே தமிழகத்துக்கு இக்காசுகள் வந்தவை என்ற கருத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என்று கருதினர். அந்நேரத்தில் நடன காசிநாதன் வெளியிட்ட தமிழக முத்திரைக்காசுகளின் பட்டியல் மற்றும் இவ்வார்ப்புக்கூடுகளும் அதை உறுதிப்படுத்தின.

மூல நூல்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.