தசுன் சானக்க
தசுன் சானக்க (Dasun Shanaka, பிறப்பு: 9 செப்டம்பர் 1991), இலங்கை துடுப்பாட்ட வீரர் ஆவார்.[1] இவர் நீர்கொழும்பு புனித பிட்டர்சு கல்லூரி, மார்சி ஸ்டெல்லா கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி பயின்றவர். இவர் 2015 சூலை மாதத்தில் பாக்கித்தானுக்கு எதிரான இலங்கை அணியின் பன்னாட்டு இருபது20 அணியில் சேர்க்கப்பட்டார்.[2] 2015 ஆகத்து 1 இல் தனது முதலாவது இ20ப போட்டியில் கலந்து கொண்டார்.[3]
தசுன் சானக்க Dasun Shanaka | ||||
![]() | ||||
இவரைப் பற்றி | ||||
---|---|---|---|---|
முழுப்பெயர் | மதகமகமகே தசுன் சானக்க | |||
உயரம் | 6 ft 0 in (1.83 m) | |||
வகை | பல்-துறை | |||
துடுப்பாட்ட நடை | வலக்கை | |||
பந்துவீச்சு நடை | வலக்கை மத்திமம் | |||
அனைத்துலகத் தரவுகள் | ||||
முதற்தேர்வு (cap 134) | 19 மே, 2016: எ இங்கிலாந்து | |||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||
ஆண்டுகள் | அணி | |||
2011–இன்று | சிங்கள விளையாட்டுக் கழகம் | |||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
தே | இ20ப | மு.த | ப.அ | |
ஆட்டங்கள் | 1 | 10 | 32 | 39 |
ஓட்டங்கள் | 4 | 111 | 1,374 | 360 |
துடுப்பாட்ட சராசரி | 2.00 | 12.33 | 38.16 | 18.94 |
100கள்/50கள் | 0/0 | 0/0 | 4/6 | 0/1 |
அதிக ஓட்டங்கள் | 4 | 27 | 127 | 60* |
பந்து வீச்சுகள் | 78 | 54 | 1,219 | 348 |
இலக்குகள் | 3 | 4 | 29 | 7 |
பந்துவீச்சு சராசரி | 15.33 | 18.85 | 26.20 | 34.00 |
சுற்றில் 5 இலக்குகள் | 0 | 0 | 1 | 0 |
ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | n/a | 0 | n/a |
சிறந்த பந்துவீச்சு | 3/46 | 3/16 | 6/69 | 2/21 |
பிடிகள்/ஸ்டம்புகள் | 0/– | 0/– | 25/– | 24/– |
மே 27, 2016 தரவுப்படி மூலம்: CricketArchive |
2016 மே மாதத்தில் இலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது, லிசுட்டர்சயர் துடுப்பாட்ட அணிக்கு எதிராக முதல்-தர ஆட்டத்தில் கலந்து கொண்டு சதம் அடித்தார்.[4][5] 2016 மே 19 இல் தனது முதலாவது தேர்வுப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடினார்.[6] இவர் இலங்கையின் 134வது தேர்வுத் துடுப்பாட்ட வீரர் ஆவார்.[7] இவர் தனது முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்து தலைவர் அலஸ்டைர் குக்கின் இலக்கைக் கைப்பற்றினார்.
மேற்கோள்கள்
- "Dasun Shanaka". ESPN Cricinfo. பார்த்த நாள் 23 July 2015.
- "Five uncapped players in SL squad for Pakistan T20s". ESPNcricinfo. ESPN Sports Media (23 சூலை 2015). பார்த்த நாள் 23 சூலை 2015.
- "Pakistan tour of Sri Lanka, 2nd T20I: Sri Lanka v Pakistan at Colombo (RPS), Aug 1, 2015". ESPNcricinfo. ESPN Sports Media (1 ஆகத்து 2015). பார்த்த நாள் 1 ஆகத்து 2015.
- "Sri Lanka's Dasun Shanaka scores hundred against Leicestershire". zeenews (15 மே 2016). பார்த்த நாள் 19 மே 2016.
- Mehta, Kalika (13 மே 2016). "Leicestershire v Sri Lanka: Dasun Shanaka rescues tourists". bbc.com. பார்த்த நாள் 19 மே 2016.
- "Sri Lanka tour of England and Ireland, 1st Investec Test: England v Sri Lanka at Leeds, May 19-23, 2016". ESPNcricinfo. ESPN Sports Media (19 May 2016). பார்த்த நாள் 19 May 2016.
- Gardner, Alan (18 மே 2016). "A new Test of resolve after T20 hiatus". ESPNcricinfo. பார்த்த நாள் 19 May 2016.
வெளி இணைப்புகள்
- கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: தசுன் சானக்க