தங்க வாயில்

தங்க வாயில் கிறிஸ்தவ இலக்கியங்களில் காணப்படும் பெயரும், எருசலேம் பழைய நகரில் உள்ள பழைய வாயில்களில் ஒன்றுமாகும். யூத பாரம்பரியத்தின்படி, செக்கீனா (שכינה) (புனிதப் பிரசன்னம்) இவ்வாயில் வழியாக வெளிப்பட்டது. இது மீண்டும் மெசியா (மீட்பர்) வரும்போது (எசேக்கியேல் 44:1–3)[1] ஏற்பட்டு, தற்போதுள்ள வாயில் நீக்கப்பட்டு புதிய வாயில் உருவாகும். இதனால்தான் இவ்விடத்திலிருந்த முன்னைய வாயிலில் யூதர்கள் இரக்கத்திற்காக வழிபட்டார்கள்.[2]

தங்க வாயில்
Golden Gate
தங்க வாயில்
பழைய எருசலேம்
பொதுவான தகவல்கள்
நகர்யெரூசலம்
ஆள்கூற்று31°46′44″N 35°14′13″E

உசாத்துணை

  1. 1. பின்பு, அவர் என்னைக் கிழக்குக்கு எதிரே பரிசுத்த ஸ்தலத்துக்குப் புறவாசல் வழியே திரும்பப்பண்ணினார்; அது பூட்டப்பட்டிருந்தது. 2. அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: இந்த வாசல் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும்; ஒருவரும் இதற்குள் பிரவேசிப்பதில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதற்குள் பிரவேசித்தார், ஆகையால் இது பூட்டப்பட்டிருக்கவேண்டும். 3. இது அதிபதிக்கே உரியது, அதிபதி கர்த்தருடைய சந்நிதியில் போஜனம்பண்ணும்படி இதில் உட்காருவான்; அவன் வாசல் மண்டபத்தின் வழியாய்ப் பிரவேசித்து, மறுபடியும் அதின்வழியாய்ப் புறப்படுவான் என்றார்.
  2. AJE - Jerusalem 3000 - The Golden Gate

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.