டையாக்சேன் டெட்ராகீட்டோன்

டையாக்சேன் டெட்ராகீட்டோன் (Dioxane tetraketone) என்பது C4O6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிமவேதியியல் சேர்மமாகும். 1,4-டையாக்சேன்-2,3,5,6-டெட்ரோன் என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. ஆக்சோ கார்பன் வகை சேர்மமான இச்சேர்மம் டையக்சேனின் நான்மடி கீட்டோனாகப் பார்க்கப்படுகிறது. மேலும், ஆக்சிரேண்டையோனின் வளைய இருபடியாகவும், கருத்தியலாக ஆக்சாலிக் அமிலத்தின் நீரிலியாகவும் கூட இதைப் பார்க்கிறார்கள்.

டையாக்சேன் டெட்ராகீட்டோன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,4-டையாக்சேன்-2,3,5,6-டெட்ரோன்
இனங்காட்டிகள்
213967-57-8 Y
ChemSpider 8710170 N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10534779
பண்புகள்
C4O6
வாய்ப்பாட்டு எடை 144.04 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இது: Y/N?)
Infobox references

1998 ஆம் ஆண்டில் பாலோ சிட்ராசோலினியும் பிறரும் தொகுப்பு முறையில் இதைத் தயாரித்தனர். இதற்காக ஆக்சாலில் குளோரைடு அல்லது ஆக்சாலில் புரோமைடுடன் வெள்ளி ஆக்சலேட்டும் டையெத்தில் ஈதரும் சேர்த்து -15° செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்தனர். தொடர்ந்து உருவாகும் கரைசலை தாழ்வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் ஆவியாக்கி தயாரித்தனர். இச்சேர்மம் ஈதர் மற்றும் டிரைகுளோரோமெத்தேனில் கரைக்கப்பட்டு −30 °செல்சியசு வெப்பநிலையில் உள்ளபோது நிலைத்தன்மையுடன் உள்ளது. ஆனால் 0 °செல்சியசு வெப்பநிலையில் 1:1 விகிதத்தில் கார்பனீராக்சைடு, கார்பனோராக்சைடுகளாகச் சிதைவடைகிறது[1]. இச்சேர்மத்தின் நிலைத்தன்மையும் உறுதியும் கருத்தியல் முறைகளில் ஆய்வு செய்யப்பட்டன[2].

மேற்கோள்கள்

  1. Strazzolini, P.; Gambi, A.; Giumanini, A. G.; Vancik, H. (1998). "The reaction between ethanedioyl (oxalyl) dihalides and Ag2C2O4: a route to Staudinger’s elusive ethanedioic (oxalic) acid anhydride". Journal of the Chemical Society, Perkin Transactions 1 1998 (16): 2553–2558. doi:10.1039/a803430c.
  2. Gambi, A.; Guimanini, A. G.; Strazzolini, P. (2001). "Theoretical investigations on (CO)n(CO2)m cyclic cooligomers". Journal of Molecular Structure: THEOCHEM 536 (1): 9–16. doi:10.1016/S0166-1280(00)00601-1.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.