டைட்டன் ஆரம்

டைட்டன் ஆரம் (Titan arum) அல்லது அமார்ஃபோஃபாலஸ் டைட்டனம் (Amorphophallus titanum) (பண்டைய கிரேக்கம் அமார்ஃபோஸ் என்றால் "உருவாகாத, நடக்காத" என்று பொருளாகும். ஃபாலஸ், டைட்டன் என்பன "பெரிய" என்று பொருள்தரும் சொற்கள்) என்பது உலகின் மிகப்பெரியப் பூக்களைக் கொடுக்கும் கிளையிலாத் தாவரமாகும். (மிகப்பெரிய ஒற்றைப்பூ தரும் தாவரம் இரஃப்லேசியா அர்னால்டி); மிகப்பெரிய பூ தரும் கிளைக்கும் இராச்சியம் தாலிபோட் பனை சார்ந்த காரிஃபா அம்ப்ராகுலிஃபெரா ஆகும்). இது இரஃப்லேசியா அர்னால்டியைப் போல தனித்த மலரைத் தருவதில்லை. மாறாக பூந்துணரைத் (Inflorescence) தருகிறது.

டைட்டன் ஆரம்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: ஆஞ்சியோஸ்பெர்மம்
தரப்படுத்தப்படாத: மோனோகாட்டுகள்
வரிசை: அலிஸ்மெடாலெஸ்
குடும்பம்: அரசீயெ
துணைக்குடும்பம்: அரோய்டீயெ
சிற்றினம்: தாம்சொனீயெ
பேரினம்: அமார்ஃபோஃபாலஸ்
இனம்: A. டைட்டனம்
இருசொற் பெயரீடு
அமார்ஃபோஃபாலஸ் டைட்டனம்
(Becc.) Becc. ex Arcang

இந்த மலரின் மணம் சிதைவுண்ட பாலூட்டியின் மணத்தினை ஒத்திருக்கும்.[1] டைட்டன் ஆரம் பிண மலர் (corpse flower) என்றும் அழைக்கப்படும். இது மழைக்காடுகளில் வளரும் தன்மை கொண்டது. இதன் சுகந்தம் பூச்சிகளையும் வண்டுகளையும் கவர்ந்து இழுக்கக் கூடியவை.

உலகிலேயே பெரிய மலர் என்ற பெயர் பெற்ற இம்மலர் தன்மகரந்தச் சேர்க்கை செய்துகொள்வதில்லை. ஆனாலும் இம்மலரிலிருந்து வீசும் பிணவாடை காடுகளில் இறந்த விலங்குகளில் ஒட்டியுள்ள வண்டுகளையும், வியர்வை ஈக்களையும் கவருவதின் மூலம் அயல் மகரந்த சேர்க்கையை நடத்திக்கொள்கிறது. இப்பூ மலர்ந்த பின்னர் 24 மணி நேரத்தில் வாடிவிடுகிறது, ஆனால் இப்பூ பூப்பதற்கு எட்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். [2]


படக் காட்சியகம்

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "History and Botany of the Titan Arum" from the Brooklyn Botanic Garden
  2. நிறைத்த மணம் தி இந்து தமிழ் 13 ஆகசுட் 2016
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.