இரஃப்லேசியா அர்னால்டி

இரஃப்லேசியா அர்னால்டி (ரஃப்லேசியா அர்னால்டி) இரஃப்லேசியா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இது உலகிலேயே மிகப்பெரிய தனித்த மலர்களைத் தரும் தாவரமாகும். இம்மலர் ஒரு மீட்டர் விட்டம் வரையும் 11 கிலோ எடை அளவுக்கும் வளரக்கூடியது. இந்த மலரின் மணம் சிதைவடையும் மீன் நாற்றத்தில் இருக்கும். எனவே இது "பிண மலர்" (corpse flower) என்று அழைக்கப்படுகிறது. இது பெங்குலு, சுமத்ரா தீவு, இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளுக்குரிய மிகைச்செறிவினமாகும்.[1].[2]

இரஃப்லேசியா அர்னால்டி
ரஃப்லேசியா அர்னால்டி மலரும் மொட்டும்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: ஆஞ்சியோஸ்பெர்மம்
தரப்படுத்தப்படாத: யூடிகோட்டுகள்
தரப்படுத்தப்படாத: ரோசிடுகள்
வரிசை: மால்பிகியாலெஸ்
குடும்பம்: ரஃப்லேசியேசி
பேரினம்: ரஃப்லேசியா
இனம்: R. அர்னால்டி
இருசொற் பெயரீடு
ரஃப்லேசியா அர்னால்டி
R.Br.
வேறு பெயர்கள்
  • Rafflesia titan Jack

டைட்டன் ஆரம், தாலிபோட் பனை போன்றவை மிகப்பெரிய மலர்களைக் கொண்டிருப்பினும் அவை பல மலர்களின் தொகுப்பாகும். மாறாக இரஃப்லேசியா அர்னால்டி முழுமையான ஒரு தனித்த மலராகும்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.