டூப்பாக் ஷகூர்

டூப்பாக் (Tupac) என்றழைக்கப்படும் டூப்பாக் அமரு ஷகூர் (Tupac Amaru Shakur) ஓரு புகழ்பெற்ற அமெரிக்க ராப் இசைக் கலைஞர் ஆவார். 1991 முதல் 1996 வரை இவர் ஐந்து இசைத்தொகுப்புகளை படைத்தார். 75 மில்லியன் இசைத்தொகுப்பு நகல்களை விற்பனை செய்த டூபாக் விற்பனை செய்த இசைத்தொகுப்புகள் மிகுந்த ராப்பர் என்று கின்னெஸ் உலகச் சாதனை நூலில் உள்ளார். பல ராப் விமர்சனம் எழுத்தாளர்கள் இவரை ராப் இசையில் மிகச்சிறந்த கலைஞர்களில் சேர்த்துக் கொள்கின்றனர். ராப் இசை தவிர திரைப்பட நடிகராகவும் கவிதை எழுத்தாளராகவும் பணியாற்றினார். பெரும்பான்மையாக ஆபிரிக்க அமெரிக்கர்கள் வாழும் வறுமைப்பட்ட பகுதிகளில் நடந்த வன்முறை, இனப் பாகுபாடு, போதைப்பொருள் பயன் போன்ற சமூகப் பிரச்சனைகளைப் பற்றி டூப்பாக் பாடல்களை படைத்தார். சமூக சமத்துவத்தை டூபாக் பல பாடல்களில் ஆதரவளித்தார்.

டூபாக் ஷகூர்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்டூபாக் அமரு ஷகூர்
பிற பெயர்கள்மாக்கவெலி (Makaveli)
பிறப்புசூன் 16, 1971(1971-06-16)
நியூயார்க் நகரம், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா
பிறப்பிடம்மரின் நகரம், கலிபோர்னியா
இறப்புசெப்டம்பர் 13, 1996(1996-09-13) (அகவை 25)
லாஸ் வேகஸ், நிவாடா, ஐக்கிய அமெரிக்கா
இசை வடிவங்கள்ஹிப் ஹொப்
தொழில்(கள்)ராப் பாடகர், ராப் எழுத்துவர், நடிகர்
இசைத்துறையில்1990-1996
வெளியீட்டு நிறுவனங்கள்இன்டர்ஸ்கோப், டெத் ரோ, அமரு
இணைந்த செயற்பாடுகள்அவுட்லாஸ், டாக்டர் ட்ரே, ஸ்னூப் டாக், டிஜிட்டல் அண்டர்க்ரவுண்ட்
இணையதளம்2paclegacy.com

நியூயார்க் நகரில் பிறந்த டூப்பாக் பெரும்பான்மையாக ஓக்லன்ட், கலிபோர்னியா நகரில் வளந்தார். இசை உலகில் முதலாக டிஜிட்டல் அண்டர்கிரவுண்ட் என்னும் ராப் குழுமத்தில் ஒரு நடனக்காரராக இருந்தார். 1991இல் டூப்பாக்கின் முதலாம் இசைத்தொகுப்பு 2பாக்கலிப்ஸ் நௌ வெளிவந்து ராப் திறனாய்வாளர்கள் இதை பாராட்டியுள்ளன, ஆனால் இந்த இசைத்தொகுப்பில் இருந்த பாடல் வரிகளை சில மக்கள் கண்டனம் செய்தன. 1994ல் நவம்பர் மாதத்தில் ஐந்து முறை துப்பாக்கிச் சூட்டிற்கு உள்ளானார். இந்த நிகழ்வை முன்னாள் நன்பர் நொடோரியஸ் பி.ஐ.ஜி உள்ளிட்ட ராப் உலகில் வேறு சிலரை குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிகழ்வு 1990களில் நடந்த கடும் கிழக்கு-மேற்கு எதிரிடையின் ஒரு காரணமாகும்.

பாலியல் குற்றத்துக்கு 11 மாதங்களாக சிறைப்பிடிக்கப்பட்டார், ஆனால் டெத் ரோ ரெக்கர்ட்ஸ் என்ற ஒலிப்பதிவு நிறுவனத்தின் அதிபர் சுக் நைட் நிதியுதவி செய்து டூப்பாக் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதனால் டூப்பாக் டெத் ரோ ரெக்கர்ட்ஸ் நிறுவனத்தை சேர்ந்து ராப் இசை வரலாற்றில் முதலாம் இரட்டை இசைத்தொகுப்பு, ஆல் ஐஸ் ஆன் மி, படைத்தார்.

செப்டம்பர் 7, 1996 லாஸ் வேகஸ் நகரில் டூப்பாக் நான்கு முறை துப்பாக்கியால் சுடப்பட்டு ஆறு ஆண்டுகளுக்கு பிறகு உயிரிழந்தார்.

இசைத்தொகுப்புகள்

உயிர் இருக்கும்பொழுது வெளிவந்த இசைத்தொகுப்புகள்

  • 1991: 2பாக்கலிப்ஸ் நௌ
  • 1993: ஸ்டிரிக்ட்லி 4 மை N.I.G.G.A.Z.
  • 1994: தக் லைஃப் (with தக் லைஃப்)
  • 1995: மி அகைன்ஸ்ட் த வர்ல்ட்
  • 1996: ஆல் ஐஸ் ஆன் மி
  • 1996: த டான் கில்லூமினாடி: த 7 டே தியரி

மரணத்துக்கு பிறகு வெளிவந்த இசைத்தொகுப்புகள்

  • 1997: R U ஸ்டில் டவுன் (ரிமெம்பர் மி)
  • 1999: ஸ்டில் ஐ ரைஸ்
  • 2001: அண்டில் த எண்ட் ஆஃப் டைம்
  • 2002: பெட்டர் டேஸ்
  • 2003: டூபாக்: ரெசரெக்ஷன்
  • 2004: லாயல் டு த கேம்
  • 2006: பாக்'ஸ் லைஃப்
  • 2007: பிகினிங்ஸ் - த லாஸ்ட் டேப்ஸ் 1988-1991

நடித்த திரைப்படங்கள்

ஆண்டுபடம்பாத்திரம்குறிப்புகள்
1991நதிங் பட் ட்ரபிள்அவர்தாமேசிறிய பாத்திரம்
1992ஜூஸ்பிஷப்முதன்முறை கதாநாயகனாக
1993போயெடிக் ஜஸ்டிஸ்லக்கிஜேனெட் ஜாக்சன் உடன் கதாநாயகன்
1994அபவ் த ரிம்பெர்டிமார்லன் வேயன்ஸ் உடன் கதாநாயகன்
1996புலெட்டேங்க்மரணத்துக்கு பிறகு வெளிவந்தது
1997கிரிட்லாக்ட்இசிகியெல் "ஸ்பூன்" விட்மோர்மரணத்துக்கு பிறகு வெளிவந்தது
1997கேங்க் ரிலேடெட்டிடெக்டிவ் ராட்ரிகெஸ்டூபாக்கின் கடைசியாக நடித்த திரைப்படம்
2003டூபாக்: ரெசரெக்ஷன்அவர் தாமேவிளக்கப்படம்
2008லிவ் 2 டெல்அவர் தாமே2008இல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
2009பெயர் இல்லாத டூபாக் விளக்கப்படம்அவர் தாமே(அறிவிக்கப்பட்டது)[1]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.