டி. சுதர்சனம்

டி. சுதர்சனம் (1941/42 – 26 ஜூன் 2010) இவர் ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்ஆவார்.

காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினராக ஆரம்பகால அரசியல் வாழ்க்கை

இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாக பூந்தமல்லி (சட்டமன்றத் தொகுதி)யில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991ல் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1] மேலும் 1996 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரசு(மூப்பனார்) கட்சியின் வேட்பாளராக பூந்தமல்லி (சட்டமன்றத் தொகுதி)யில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2]

தமிழ் மாநில காங்கிரசு

இந்திய தேசிய காங்கிரசிலிருந்து பிரிந்து தமிழ் மாநில காங்கிரசு உருவானபோது இவர் ஜி. கே. மூப்பனாரைப் பின்பற்றி அவருக்கு உறுதுணையாக இருந்தார். அக்கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டார். இவர் திருவள்ளூர் (சட்டமன்றத் தொகுதி)யிலிருந்து தமிழ் மாநில காங்கிரசு(மூப்பனார்) கட்சியின் வேட்பாளராக 2001 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இவர் தமிழ் மாநில காங்கிரசு கட்சியானது இந்திய தேசிய காங்கிரசில் இணையும்வரை அக்கட்சியிலேயே இருந்தார்[3][4]

காங்கிரசு சட்டமன்ற கட்சித் தலைவர்

2006 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாகபோட்டியிட்டு வெற்றிபெற்றார்[5][6][7] 2006 தேர்தலுக்குப்பின் இவர் தமிழ்நாடு சட்ட மன்றத்தில் காங்கிரசு கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவராகப் பதவி வகித்தார்.

இறப்பு

கோயம்பத்தூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் பல்லுருப்பு செயலிழப்பு காரணமாக உயிர் நீத்தார்.

2010 உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்றுக்கொண்டிருக்கும் போது அவர் உடல் சுகவீனம் அடைந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் இறக்கும்போது அவருக்கு வயது 68, மேலும் அவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.[8]

உசாத்துணைகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.