ஞானவரோதயர்

ஞானவரோதயர் 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்.
உபதேச காண்டம் என்னும் நூல் பாடியவர்.
உபதேச காண்டம் என்னும் பெயரில் மற்றொரு புலவர் கோனேரியப்பர் பாடிய நூலும் உள்ளது.

காஞ்சிபுரம் ஆயிரங்கால் மண்டபத்திலிள்ள ஆறுமுகசாமி (முருகப்பெருமான்) அருளால் கச்சியப்பர் கந்தபுராணம் பாடினார்.
அதில் ஆறு காண்டங்கள் உள்ளன.
இதன் ஏழாவது காண்டமாகப் பாடப்பட்டது உபதேச காண்டம்.
திருச்சி மாவட்டம் வயலூர் முருகன் அருளால் இது பாடப்பட்டது என்பர்.

இவரது உபதேச காண்டம் நூலில் 2600 பாடல்கள் உள்ளன.

ஞானவரோதயரின் ஆசிரியர் கச்சியப்பர்.
ஞானவரோதயரின் உபதேச காண்டம் 13ஆம் பாடல் கச்சியப்பருக்கு வணக்கம் கூறுகிறது.
ஞானவரோதயரின் மாணாக்கர் காளமேகம். ஞானவரோதயர் மதுரை சென்றபோது அவரை வரவேற்கச் சங்கப்புலவர்கள் இல்லையே என வருந்திப் பாடிய காளமேகப் புலவரின் பாடல் ஒன்று தமிழ் நாவலர் சரிதையில் உள்ளது.

கருவிநூல்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.