ஜோசப் எமானுவேல் அப்பையா

ஜோசப் எமானுவேல் அப்பையா (Joseph Emmanuel Appiah, 1918 - 1990) கானா நாட்டில் பிறந்தவர். தன்னுடைய மேற்படிப்பை இங்கிலாந்தில் மேற்கொண்டிருக்கிறார். இங்கிலாந்தில் இருந்த பொழுது மேற்கு ஆப்பிரிக்க மாணவர்கள் குழுமத்தில் சேர்ந்து பணியாற்றியிருக்கிறார். அச்சமயத்தில் அவருக்கு, அவருடைய சொந்த நாடான கானாவிலும் பிற ஆப்பிரிக்க நாடுகளிலும் ஆங்கிலேயரின் ஆட்சிக்கு எதிரான வேலை செய்பவர்கள் அறிமுகமானார்கள். அவர்களில் முக்கியமானவர் நவீன கானாவை உருவாக்கி அதன் முதலாவது அதிபராகவும் இருந்த குவாம் ந்க்ருமாஹ்(Kwame Nkrumah). ஆனால், அப்பையா குடும்பத்தினர் கானாவுக்குத் திரும்பிச் சில நாட்களில் இவர்களது நட்பு உடைந்துபோயிற்று. 1957 ஆம் ஆண்டு பொது வாழ்க்கையில் இறங்கிய ஜோ அப்பையா, 1978 ஆம் ஆண்டுவரைக்கும் அரசாங்க மந்திரியாகவோ தூதுவராகவோ இந்திருக்கிறார். இந்தக் காலகட்டத்தில் இவர் சிறைப்படுத்தவும் பட்டிருக்கிறார். பொதுவாழ்க்கையிலிருந்து விலகியபிறகு பிறந்த ஊருக்குத் திரும்பிய ஜோ அப்பையா, கடைசிவரை அவரின் இனத்தலைவராக இருந்திருக்கிறார். இவருடைய சுயசரிதையான “Joe Appiah: The Autobiolgraphy of an African Patriot”, ஆப்பிரிக்காவின் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் கடைசி நாட்கள் மற்றும் பின் காலனித்துவ ஆப்பிரிக்காவைத் தெரிந்துகொள்ள மிகவும் உதவியான நூல் என்கிறார்கள்.

ஜோசப் எமானுவேல் அப்பையா
பிறப்பு16 நவம்பர் 1918, 1918
குமாசி
இறப்பு8 சூலை 1990 (அகவை 71)
படித்த இடங்கள்
  • Mfantsipim School
வாழ்க்கைத்
துணை(கள்)
பெக்கி கிரிப்ஸ் அப்பையா
குழந்தைகள்குவாம் ஆந்தனி அப்பையா

நூல்கள்

  • Appiah, Joseph (1990) The Autobiography of an African Patriot, Praeger: New York
  • குவாம் ஆந்தனி அப்பையா (1993) In My Father's House: Africa in the Philosophy of Culture, OUP: New York

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.