ஜொனி 95
ஜொனி 95 மிதிவெடி இலங்கையில் விடுதலைப் புலிகளால் உருவாக்கபட்டுப் பாவிக்கபட்டது. இது மரப்பலகையில் மின்கலத்தை இணைப்பதன் மூலம் மிதிக்கும் போது மின் இணைப்பு குறுஞ்சுற்றாக்கப்படுவதன் மூலம் வெடித்தல் நிகழ்கிறது. இதில் மின்கலம் செயலிழந்தால் வெடித்தல் நிகழாது எனினும் வளவுகளைத் துப்பரவு செய்யும் போது எரித்தால் வெடித்தல் நிகழலாம் இதனாலே சேதனப் பசளையாக்குவது பரிந்துரைக்கப்படுகிறது. இது சுமாராக 50 கிராம் அளவிலான வெடிபொருளைக் கொண்டிருக்கும். இது அண்ணளவாக 11 செண்டிமீட்டர் நீளமும், 7 செண்டிமீட்டர் அகலமும் 5.5 முதல் 6 செண்டிமீட்டர் உயரமும் உடையது. கூடுதலான உலோகத்தை உள்ளடக்கியபடியால் இலகுவாக மிதிவெடிகளைக் கண்டுபிடிக்கும் கருவிகள் மூலம் கண்டுபிடிக்க இயலும். சிலசமயம் சிகப்பு நிறத்தில் ஆங்கிலத்தில் Jony 95 Made in Tamil Eeelam என்றவாறு எழுதப்பட்டு இருக்கும்.

ஜொனி மிதிவெடி. அருகில் உள்ள கைக்கடிகாரம் அளவை ஒப்பிடுவதற்காக வைக்கப்பட்டுள்ளது
உசாத்துணை
- ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் இலங்கையில் உள்ள மிதிவெடிகள், வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்கள் பற்றிய துண்டுப்பிரசுரம். (ஆங்கில மொழியில்)
- ஹலோ ரஸ்ட் இன் வெடிபொருள் அகற்றுவோரின் புத்தகம் (ஆங்கில மொழியில்)
மனிதர்களுக்கு எதிரான மிதிவெடி | ![]() |
---|---|
ஈடீஎம் | எம் 969 | பி4எம்கே1 | ரங்கன் 99 |ரைப் 69 | ரைப் 72 | விஎஸ் 50 | ஜொனி 95 |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.