ஜேம்ஸ் ஸ்டுவர்ட்
ஜேம்சு மெயிட்லண்ட் ஸ்டுவர்ட் (James Maitland Stewart, மே 20, 1908 - சூலை 2, 1997) ஓர் அமெரிக்கத் திரைப்பட நடிகரும், படைத்துறை அதிகாரும் ஆவார். இவர் சிறந்த நடிகருக்கான அகாதமி விருதிற்காக ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 1940 இல் வெளியான தி பிலடெல்பியா ஸ்டோரி என்ற திரைப்படத்திற்காக அகாதமி விருதை வென்றுள்ளார். 1985 இல் வாழ்நாள் சாதனையாளருக்கான அகாதமி விருதையும் பெற்றுள்ளார். இவர் இரண்டாம் உலகப் போர், வியட்நாம் போர் ஆகியவற்றிலும் பங்கு கொண்டுள்ளார்.[2]
ஜேம்சு ஸ்டுவர்ட் James Stewart | |
---|---|
![]() 1948 இல் யேம்சு ஸ்டுவர்ட் | |
பிறப்பு | மே 20, 1908 இந்தியானா, பென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா |
இறப்பு | சூலை 2, 1997 89) பெவர்லி இல்சு, கலிபோர்னியா | (அகவை
இறப்பிற்கான காரணம் | நுரையீரல் இரத்த குழாய் அடைப்பு[1] |
கல்லறை | கிளென்டேல், கலிபோர்னியா |
பணி | நடிகர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1932–1991 |
அறியப்படுவது | இரண்டாம் உலகப் போரில் சேர்ந்த முதல் அமெரிக்க நடிகர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | மிஸ்டர் சிமித் கோஸ் டு வாசிங்டன், த பிலடெல்பியா ஸ்டோரி, இட்ஸ் எ ஒன்டர்புல் லைப், ரெயார் வின்டோ, வெர்ட்டிகோ |
வாழ்க்கைத் துணை | குளோரியா ஏட்ரிக் மெக்லீன் (தி. 1949–1994) |
பிள்ளைகள் | 4 (இரு தத்தெடுத்த குழந்தைகள் உள்பட) |
விருதுகள் | வாழ்நாள் சாதனையாளர் அகாதமி விருது (1985) சிறந்த நடிகருக்கான அகாதமி விருது (1941) கோல்டன் குளோப் விருது (1965, 1974) |
1999 இல் அமெரிக்க திரைப்படக் கழகத்தின் (AFI) சிறந்த ஆண் நடிகர் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்தார்.[3]
மேற்கோள்கள்
- "James Stewart, the Hesitant Hero, Dies at 89". த நியூயார்க் டைம்ஸ். சூலை 3, 1997. http://www.nytimes.com/learning/general/onthisday/bday/0520.html.
- Smith, Lynn (March 30, 2003). "In Supporting Roles". Los Angeles Times: p. 193.
- "AFI's 100 Years ... 100 Stars" (June 16, 1999). பார்த்த நாள் சூன் 22, 2013.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.