ஜெனீவா உடன்படிக்கை

ஜெனீவா உடன்படிக்கை' என அழைக்கப்படுவது சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் 1864- 1949 வரையான காலப்பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு உடன்படிக்கையின் தொகுப்பேயாகும்.

இரண்டாம் உலக போருக்கு (1939-45) பின்னர் பேச்சுவார்த்தைகள் மூலம் அதன் முந்தய மூன்று ஒப்பந்தங்களையும் இணைத்தும் சில கொள்கைகளையும் சேர்த்து 1949 ஆண்டு ஒப்பந்தமாக இறுதி செய்யப்பட்டது.ஒரு போர் மண்டலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் மற்றும் கைதிகளின் அடிப்படை மற்றும் போர்க்கால உரிமைகளை வரையறுக்கின்றது.இந்த ஒப்பந்தங்களை 195 நாடுகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நிறைவேற்ற ஒப்புதல் அளித்துள்ளன.மேலும் இது பொதுமக்களின் பாதுகாப்புகளையும் வரையறுக்கிறது மற்றும் உயிர் இரசாயன ஜெனிவா ஒப்பந்தம் மற்றும் ஹேக் உடன்படிக்கை(1899 ஆண்டு முதல் ஹேக் மாநாடு, 1907 ஆம் ஆண்டு இரண்டாம் ஹேக் மாநாடு) படி நுண்ணுயிரிகள்,நச்சு வாயுக்களை பயன்படுத்தி போர் செய்வதை தடை செய்கிறது

வரலாறு.

இதன் வரலாறு செஞ்சிலுவை சங்கத்தின (Red Cross); வரலாற்றுடன் தொடர்புடையதாகவே காணப்படுகின்றது. செஞ்சிலுவை சங்கத்தின் தந்தையான கென்றி டுனான்ற் (Jean Henri Dunant)

  • 1864 ல் யுத்தத்தில் காயமடையும் போர் வீரர்கள் பற்றிப்பேச ஒர் சர்வதேச பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்திருந்தார். இந்த முதலாவது உடன்படிக்கையை பிரதான ஐரேப்பிய வல்லரசுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டன.
  • 1906 ல் இரண்டாவது உடன்படிக்கையில் முக்கிய அம்சங்கள் விரிவாக்கப் பட்டதுடன் கடலில் ஏற்படும் போர்களுக்கும் இவை பொருந்தும் என ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • 1929 ல் மூன்றாவது உடன்படிக்கையின்போது யுத்தக் கைதிகளைக் கையாழும் முறை பற்றிய நிபந்தனைகள் சேர்க்கப்பட்டன.
  • இரண்டாம் உலகப்போரில் பல நாடுகள் இவ்வுடன்படிக்கையை மீறி நடந்ததால் இவ்வுடன்படிக்கை 1948 ஆகஸ்டு 23 – 30 வரையான காலப்பகுதியில்; சுவீடன் நாட்டில் ஸ்டொக் ஹொம் என்ற நகரில் இடம்பெற்ற செஞ்சிலுவை சங்க மாநாட்டில் மேலும் 4 உடன்படிக்கைகள் சேர்க்கப்பட்டன. இந்த உடன்படிக்கைகள் 1949 ஆகஸ்ட் 12 ல் ஜெனீவாவில் நடைபெற்ற மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதுவே நான்காவது ஜெனீவா உடன்படிக்கை எனப்படுகின்றது.

இவ்வுடன்படிக்கையின்படி போரிடும் தரப்பொன்றின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வாழும் சாதாரண குடிமக்களின் உரிமைகள் காக்கப்பட்டுள்ளன. அதாவது எந்தவெரு நோக்கத்திற்காகவும் தனிநபர்களையோ குழுக்களையோ நாடு கடத்தல், ஆட்களை பணையக்கைதிகளாக வைத்திருத்தல், ஆட்களை பாலியல் தாக்குதல்களுக்கு உள்ளாக்குதல், உடல் உள ரீதியில் வதைப்படுத்தல், விசாரணை இன்றி கூட்டுத்தண்டணை வழங்குதல், பழி வாங்குதல், நியாயமின்றி சொத்துக்களை அழித்தல், இன மத தேசிய அல்லது அரசியல் ரீதியில் பாரபட்சமாக நடத்துதல் என்பன முற்றாகத்தடை செய்யப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட பிரேரணைகள்

1864 ல் முதலாவது உடன்படிக்கை

1. காயப்பட்ட அல்லது நோய்வாய்ப்பட்ட போர் வீரர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் நிறுவனங்கள் கைப்பற்றப்படவோ அழிக்கப்படவோ கூடாது.
2. எல்லாத்தரப்பைச் சேர்ந்த வீரர்களும் பக்கச்சார்பற்ற முறையில் பராமரிப்பும் சிகிச்சையும் வழங்கப்பட வேண்டும்.
3. காயப்பட்ட வீரர்களுக்கு உதவும் குடிமக்களும் காக்கப்பட வேண்டும்.
4. இந்த உடன் படிக்கையின் கீழ் பணிபுரியும் ஆட்களையும் உபகரணங்களையும் இனம்காண செஞ்சிலுவைச்சின்னம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

1929 ல் மூன்றாவது உடன்படிக்கை

1. யுத்த கைதிகளை மனிதாபிமானத்தோடு நடத்தவும்.
2. யுத்த கைதிகளைப்பற்றிய தகவல்களை வழங்கவும்.
3. கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்குச்சென்று பார்வையிட நடுநிலை நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்குவது.

1949 ல் நான்காவது உடன்படிக்கை

1. யுத்த களத்தில் காயமடைந்த அல்லது நோயுற்ற இராணுவத்தினருக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பானது.
2. கடலில் வைத்து காயமடைந்த அல்லது நோயுற்ற அல்லது கப்பலுடைந்த படையினருக்கு நிவாரணம் வழங்குவது
3. யுத்த கைதிகளை நடத்தும் விதம் பற்றியது
4. யுத்த காலத்தில் சாதாரண குடிமக்களின் உரிமைகளைப்பாதுகாப்பது.

1977 உடன்படிக்கையின் சாரம்

சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் கரந்தடிப் போராளிகள் (கொரில்லா போராளிகள்) மற்றும் கணிசமான நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போராளிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவது.

நடைமுறை படுத்தல்

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை அமலாக்க அதிகாரம்

ஜெனீவா உடன்படிக்கை மற்றும் பிற ஒப்பந்தங்கள் தொடர்பான அனைத்து பிரச்சினைகளை விசாரிக்கும் மற்றும் நடைமுறைப்படுத்தும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபைக்கு வழங்கப்பட்டது.ஐ.நா. அரிதாகவே ஜெனீவா உடன்படிக்கை தொடர்பான தனது அதிகாரத்தை செயல்படுத்துகிறது அதனால் பெரும்பாலான பிரச்சினைகள் பிராந்திய ஒப்பந்தங்கள் மூலம் அல்லது அந்தந்த நாடுகளின் சட்டங்கள் மூலம் தீர்க்கப்படும்.

அதிகாரங்களை பாதுகாத்தல்

இந்த நடவடிக்கையினை பாதுகாத்தல் ஆயுத மோதலில் பகுதியாக எடுத்து கொள்ளப்படுகிறது.போரின் போது அந்நாட்டு மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு இரு கட்சிகளுக்கிடையே நடுநிலையான பேச்சுவார்த்தையை நடத்துகிறது.

போர் குற்றங்கள்

உடன்படிக்கையின் அனைத்து மீறல்களும் சமமாக கருதப்படுவதில்லை எனினும் மிக மோசமான குற்றங்களை எதிர்த்து ஒரு சட்ட வரையறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.இது கல்லறை மீறப்படுதல்(Grave breaches) என்று குறிப்பிடப்படுகிறது. மூன்றாம் மற்றும் நான்காம் ஜெனீவா உடன்படிக்கை மாநாட்டின் மூலம் போர் குற்றங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.பின்வரும் நடவடிக்கைகள் பூற்குர்ரங்கள் என வரையறுக்கப்படுகின்றன,அவை

  • வேண்டுமென்றே கொலை,சித்திரவதை அல்லது உயிரியல் சோதனைகள் செய்தல்
  • வேண்டுமென்றே உடல் அல்லது சுகாதார கேடுகளை விளைவித்தல்
  • எதிரி படைகளுக்காக வேலை செய்ய நிர்பந்திதல்
  • வேண்டுமென்றே ஒரு நியாயமான போர் குற்றம் விசாரணைக்கு மறுத்தல்

நான்காம் ஜெனிவா உடன்படிக்கை பின்வருபவற்றயும் போர் குற்றமாக கருதுகிறது அவை

  • பிணைய கைதிகளாக பிடித்தல்
  • தேவையில்லாத இராணுவ நடவடிக்கைகளுக்காக வேண்டுமென்றே ஒருவரின் உடமைகளுக்கு சேதம் விளைவித்தல்
  • சட்டவிரோத நாடுகடத்தல் மற்றும் இடப்பெயர்த்தல்

இதன் மீதான விசாரணைகளை ஐ.நா. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வழியாக நடத்தப்படும்.

மேற்கோள்கள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.