ஜுவாலா குட்டா
ஜுவாலா குட்டா (Jwala Gutta, தெலுங்கு: జ్వాలా గుత్తా) ஒரு இந்திய இடக்கை இறகுப்பந்தாட்ட வீரர் ஆவார். இந்திய சீன கலப்பினராகிய குட்டா தேசிய இறகுப்பந்தாட்ட போட்டிகளில் 2010 வரை 13 முறை வென்றுள்ளார். இரட்டையர் ஆட்டக்காரரான இவருடன் சுருதி குரியனும் பின்னர் அசுவினி பொன்னப்பாவும் இணைந்து ஆடியுள்ளனர். அருச்சுனா விருது பெற்ற சேத்தன் ஆனந்தை திருமணம் புரிந்திருந்த குட்டா 2011இல் மணமுறிவு பெற்றார்.[2]குண்டே ஜாரி கல்லந்தய்யிண்டே என்ற தெலுங்குத் திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
ஜுவாலா குட்டா జ్వాలా గుత్తా | |
---|---|
நேர்முக விவரம் | |
பிறந்த தேதி | 7 செப்டம்பர் 1983 |
பிறந்த இடம் | வார்தா, மகாராட்டிரம், இந்தியா |
உயரம் | 1.78 m (5 ft 10 in)[1] |
நாடு | ![]() |
கரம் | இடக்கரம் |
பயிற்சியாளர் | எஸ். எம். அரிஃப் |
கலப்பு இரட்டையர்/ மகளிர் இரட்டையர் | |
பெரும தரவரிசையிடம் | 6 |
தற்போதைய தரவரிசை | 21(23 சூன் 2011) |
வென்ற பதக்கங்கள் | |||
---|---|---|---|
![]() | |||
மகளிர் இறகுப்பந்தாட்டம் | |||
இறகுப்பந்தாட்ட உலக கூட்டமைப்பின் உலக வாகையாளர் போட்டிகள் | |||
வெண்கலம் | 2011இலண்டன் | மகளிர் இரட்டையர் | |
பொதுநலவாய விளையாட்டுக்கள் | |||
வெள்ளி | 2010 தில்லி | கலப்பு அணி | |
தங்கம் | 2010 தில்லி | மகளிர் இரட்டையர் | |
வெள்ளி | 2014 கிலாஸ்கொவ் | மகளிர் இரட்டையர் | |
வெண்கலம் | 2006 Melbourne | கலப்பு அணி | |
உப்பர் கோப்பை | |||
வெண்கலம் | 2014 தாமஸ் & உப்பர் கோப்பை | குழு | |
வெண்கலம் | 2016 தாமஸ் & உப்பர் கோப்பை | குழு | |
இறகுப்பந்தாட்ட ஆசிய வாகையாளர் | |||
வெண்கலம் | இறகுப்பந்தாட்ட ஆசிய வாகையாளர் போட்டிகள் | மகளிர் இரட்டையர் | |
தென் ஆசிய விளையாட்டுகள் | |||
தங்கம் | 2006 தென் ஆசிய விளையாட்டுகள் | கலப்பு அணி | |
தங்கம் | 2016 தென் ஆசிய விளையாட்டுகள் | மகளிர் இரட்டையர் | |
தங்கம் | 2016 தென் ஆசிய விளையாட்டுகள் | மகளிர் குழு |
ஆரம்ப காலம்
ஜுவாலா குட்டா செப்டம்பர் 7, 1983 இல் மகாராட்டிரத்தில் பிறந்து ஆந்திர பிரதேசத்தின் ஹைதராபாதில் வளர்ந்தார். இவரின் தந்தை தெலுங்கர், தாய் சீனர்.[3][4]
மேற்சான்றுகோள்கள்
- "BWF content". Bwfcontent.tournamentsoftware.com. பார்த்த நாள் 2012-04-19.
- "Father evasive on Jwala Gutta divorce", Indian Express, 6 August 2010, http://www.indianexpress.com/news/father-evasive-on-jwala-gutta-divorce/656875/, பார்த்த நாள்: 2010-09-03
- "She's an asset to any team" (3 November 2011). பார்த்த நாள் 17 February 2016.
- Naik, Shivani (6 September 2009). "Orient Express". இந்தியன் எக்சுபிரசு. Indian Express Group (New Delhi). http://www.indianexpress.com/news/orient-express/512855/. பார்த்த நாள்: 19 August 2011. "Jwala Gutta has squared off against many players from China on the badminton court. As she celebrates the mixed doubles Grand Prix gold she won last week, she tells us about her Chinese connection"
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.