ஜீவநதி (சிற்றிதழ்)

ஜீவநதி (Jeevanathy) யாழ்ப்பாணத்திலிருந்து மாதாந்தம் வெளிவரும் தமிழ் இலக்கியச் சிற்றிதழ் ஆகும்.

ஜீவநதி
இதழாசிரியர்கலாமணி பரணீதரன்
வகைஇலக்கியம்
இடைவெளிமாதம் ஒரு முறை
முதல் வெளியீடுஆகத்து 5, 2007
நாடுஇலங்கை

ஜீவநதியின் வைகாசி, 2012 இதழ் ஆத்திரேலியச் சிறப்பிதழாக வெளியிடப்பட்டுள்ளது.

முதலாவது இதழ்

ஆகத்து 5, 2007 அன்று ஜீவநதியின் முதலாவது இதழ் வெளியாகியது.

ஜீவநதி வெளியிட்ட கே. எசு. சிவகுமாரனின் பவள விழாச் சிறப்பிதழ்

நடப்பிக்கை

ஜீவநதியின் முதன்மை ஆசிரியர் கலாமணி பரணீதரன் ஆவார். துணை ஆசிரியர் வெற்றிவேல் துசியந்தன் ஆவார்.[1] பதிப்பாசிரியர் த. கலாமணி ஆவார். ஆலோசகர்களாகத் தெணியான், கி. நடராசா ஆகியோர் உள்ளனர்.

உள்ளடக்கம்

சிறுகதைகள், கவிதைகள், இலக்கியக் கட்டுரைகள், நேர்காணல்கள், புதுப் புனல், கலை இலக்கிய நிகழ்வுகள், திறனாய்வுக் கட்டுரைகள், பேசும் இதயங்கள் போன்றவை இச்சஞ்சிகையில் வெளிவருகின்றன.[2]

விருதுகள்

  • சின்னப்ப பாரதிவிருது (2012, ஈழத்தில் இருந்துவரும் சிறந்த சஞ்சிகைக்காக இந்தியாவில் பெற்றுக்கொண்டது)
  • இனிய மணா இலக்கிய விருது (2010, சிறந்த சிற்றிதழுக்காக இந்தியாவில் பெற்றுக்கொண்டது)[3]

ஜீவநதி வெளியீடுகள்

ஜீவநதி பிரசுரப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றது. ஜீவநதி வெளியீடுகளாக வெளிவந்த நூல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

  1. பாட்டுத்திறத்தாலே...
  2. மனதில் உறுதி வேண்டும்[4]
  3. நதியில் விளையாடி...
  4. வெறிச்சோடும் மனங்கள்[5]
  5. எண்ணிலாக்குணமுடையோர்[6]
  6. மீண்டும் துளிர்ப்போம்...[7]
  7. ஜீவநதி நேர்காணல்கள்
  8. இலக்கியமும் எதிர்காலமும்[8]
  9. முன்னோர் சொன்ன கதைகள்
  10. மொழிபெயர்க்கப்படாத மௌனங்கள்
  11. கவியில் உறவாடி...
  12. இருபாலை சேனாதிராய முதலியார் ஆக்கிய ஆக்கங்கள் சிலவற்றின் தொகுப்பு[9]
  13. ஜீவநதி அரங்கக் கட்டுரைகள்
  14. இந்த நிலம் எனது
  15. இருட்தேர்
  16. மான சஞ்சாரம்
  17. என் கடன்[10]

இதையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.