ஜான் சோர்

ஜான் சோர் (John Shore, 1st Baron Teignmouth) (5 அக்டோபர் 1751 – 14 பிப்ரவரி 1834), பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் அலுவலரான இவர் வங்காளத்தின் தலைமை ஆளுநராக 1793 முதல் 1797 முடிய பணியாற்றியவர்.

டேய்ன்மவுத் பிரபு
ஜான் சோர்
இந்தியத் தலைமை ஆளுநர், வில்லியம் கோட்டை, கொல்கத்தா, பிரித்தானிய இந்தியா
பதவியில்
1793–1797
அரசர் மூன்றாம் ஜோர்ஜ் மூன்றாம் ஜார்ஜ்
பிரதமர் வில்லியம் பிட்
முன்னவர் காரன்வாலிஸ்
பின்வந்தவர் வெல்லஸ்லி
தனிநபர் தகவல்
பிறப்பு 5 அக்டோபர் 1751
இறப்பு 14 பிப்ரவரி 1834
படித்த கல்வி நிறுவனங்கள் ஆரோ பள்ளி

இளமை வாழ்க்கை

பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின், கொல்கத்தா தலைமை அலுவலகத்தில், வருவாய்த் துறையில் தலைமை மேற்பார்வையாளராகா பணிபுரிந்து கொண்டிருந்த ஜான் சோர், அன்றைய இந்தியத் தலைமை ஆளுநராக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபுவின் நம்பிக்கையைப் பெற்றார். பின்னர் டாக்கா மற்றும் பெகர் பகுதிகளின் வருவாய் ஆணையாளராகப் பொறுப்பேற்ற ஜான் சோர் நீதித்துறை மற்றும் நிதித்துறைகளில் சீரிதிருத்தங்கள் கொண்டு வந்தார். சில பிணக்குகளால் 1785ல் இங்கிலாந்து திரும்பினார். 21 சனவரி 1787-இல் கொல்கத்தா திரும்பிய ஜான் சோர், வங்காள மாகாண அரசுக் குழுவில் உறுப்பினர் பதவியேற்றார். இந்தியத் தலைமை ஆளுநர் காரன்வாலிஸ் காலத்தில், ஜான் சோர் பிகார், வங்காளம், ஒடிசா பகுதிகளில் நிலச்சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.

வங்காளத்தின் நிலவுடைமையாளர்களிடமிருந்து விளைச்சலில் எவ்வளவு நிலவரியாக வசூலிப்பது என்ற சர்ச்சையின் முடிவாக 1793ல் நிரந்தத் தீர்வு எற்பட ஜான் சோர், காரன்வாலிஸ்க்கு உதவியாக இருந்தார்.[1] வாரன் ஹேஸ்டிங்ஸ் மீதான குற்றச்சாட்டுகளுக்கு, 2 சூன் 1790-இல் இங்கிலாந்து நீதிமன்றத்தில் ஜான் சோர் சாட்சியம் அளித்தார்.

இந்தியத் தலைமை ஆளுநராக

காரன்வாலிஸ் பிரபுவிற்குப் பின், 28 அக்டோபர் 1793 அன்று ஜான் சோர், இந்தியத் தலைமை ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஜான் சோர், மராத்தியப் படைகளிடமிருந்து, ஐதராபாத் நிசாம்களை காத்தார். வடமேற்கு இந்தியாவில் சீக்கியப் பேரரசு வளர்வதற்கு துணையாக இருந்தார்.

மேற்கோள்கள்

  1. "Cornwallis Code" (4 February 2009).

மேலும் படிக்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.