சோம்தேவ் தேவ்வர்மன்

சோம்தேவ் தேவ்வர்மன் (பிறப்பு குவகாத்தி 13 பிப்ரவரி 1985), அல்லது "சோம்தேவ் தேவ் வர்மன்", இந்திய டென்னிசு வீரராவார். அவர் ஐக்கிய அமெரிக்காவின் வர்சீனியா பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது அமெரிக்க தேசிய கல்லூரி விளையாட்டுக் கழகத்தின் (NCAA) ஒற்றையர் டென்னிசுப் போட்டிகளில் தொடர்ந்து இருமுறை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து புகழ்பெற்றார். 2010-இல் 2010 பொதுநலவாய விளையாட்டுக்களில் சோம்தேவ் தனிநபர் பிரிவில் தங்கமும் 2010 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் பிரிவில் தங்கமும் இரட்டையர் பிரிவில் சனம் சிங் என்ற வீரருடன் இணைந்து தங்கமும் வென்றுள்ளார்.

சோம்தேவ் தேவ்வர்மன்
செல்லப் பெயர் புஜி, தேவ்
நாடு இந்தியா
வசிப்பிடம்சார்லோட்சுவில், விர்ஜினியா, ஐக்கிய அமெரிக்கா
பிறந்த திகதிபெப்ரவரி 13, 1985 (1985-02-13)
பிறந்த இடம்குவகாத்தி அசாம், இந்தியா
உயரம்1.80 m (5 ft 11 in)
நிறை72 kg (159 lb; 11.3 st)
தொழில்ரீதியாக விளையாடியது2008
விளையாட்டுகள்வலதுகை; இருகை பின்கையாட்டம்
வெற்றிப் பணம்$122, 075
ஒற்றையர்
சாதனை:7–9
பெற்ற பட்டங்கள்:0
அதி கூடிய தரவரிசை:127 (சூலை 20, 2009)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன்-
பிரெஞ்சு ஓப்பன்-
விம்பிள்டன்-
அமெரிக்க ஓப்பன்2ம் சுற்று (2009)
இரட்டையர்
சாதனைகள்:0–3
பெற்ற பட்டங்கள்:0
அதிகூடிய தரவரிசை:எண். 345 (ஆகத்து24, 2009)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன்{{{AustralianOpenDoublesresult}}}
பிரெஞ்சு ஓப்பன்{{{FrenchOpenDoublesresult}}}
விம்பிள்டன்{{{WimbledonDoublesresult}}}
அமெரிக்க ஓப்பன்{{{USOpenDoublesresult}}}

தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: செப்டம்பர் 15, 2009.

இவர் ரஞ்சனா மற்றும் பிரவஞ்சன் தேவ் வர்மன் தம்பதியினருக்குப் பிறந்தவர். சென்னையருகே வளர்ந்த இவர் 2005-08 ஆண்டுகளில் வர்சீனியா பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பட்டபடிப்பு படித்தார்.[1] 2008ஆம் ஆண்டு முதல் தொழில்முறையில் டென்னிசு ஆடிவரும் தேவ்வர்மன் ஆண்டு துவக்கத்தில் இருந்த தரவரிசை 1033இலிருந்து முன்னேறி ஆண்டின் இறுதியில் 204 தரவரிசை எண்ணில் உள்ளார்.

2009ஆம் ஆண்டு சென்னை ஓப்பன் போட்டியில் இருமுறை சென்னை ஓப்பன் வெற்றியாளர் இசுப்பானிய கார்லோசு மாயாவையும் தரவரிசை எண் 25இல் இருந்த குரோசியாவின் இவோ கார்லோவிச்சையும் வென்று போட்டி இறுதிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் குரோசியாவின் மாரின் சிலிக்கிடம் 6–4, 7–6(3) என்ற கணக்கில் தோற்றார். தென்னாப்பிரிக்காவில் நடந்த டேவிசு கோப்பை 2009ஆம் ஆண்டுக்கான போட்டியில், சோம்தேவ் தேவ்வர்மன் முதல் ஒற்றையர் ஆட்டத்திலும் மாற்று ஒற்றையர் ஆட்டத்திலும் தென்னாப்பிரிக்கா வீரர்களை வென்று இந்திய அணி 11 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக உலக சுற்றுக்கு முன்னேற உதவினார்.[2][3]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.