செல்ட்டிக் கடல்

செல்ட்டிக் கடல் (Celtic Sea) அத்திலாந்திக் பெருங்கடல் பகுதியில் அயர்லாந்து தெற்கு கடற்கரை மற்றும் கிழக்கில் செயிண்ட் ஜார்ஜ் வாய்க்கால் வழிபகுதிகளால் சூழப்பட்டது. இதன் எல்லைக்குள் பிரிஸ்டல் வாய்க்கால்வழி, ஆங்கிலக் கால்வாய், மற்றும் பிஸ்கே வளைகுடா மற்றும் அதன் அருகில் உள்ள வேல்ஸ், கார்ன்வால், டேவன், மற்றும் பிரிட்டானி ஆகிய பகுதிகள் அடங்கும். இக்கடலின் தெற்கு மற்றும் மேற்கு எல்லைகள் கூர்மையாகச் செல்லும் கண்ட அடுக்கு மூலம் வரையறுக்கப்பட்டுள்ளன.

செல்ட்டிக் கடல்
Celtic Sea
செல்ட்டிக் கடல்
அமைவிடம் அத்திலாந்திக் பெருங்கடல்
Basin countries அயர்லாந்து
உஷண்ட்
ஃபாஸ்ட்நெட் ராக்

வரலாறு

செல்ட்டிக் கடல் அதன் பெயர் பெற்றமைக்கு காரணம், செல்ட்டிக் பாரம்பரியத்தைக் கொண்ட அதன் அருகமைந்த நிலப்பகுதிகளே ஆகும். இக்கடலுக்குப் பெயர், முதன் முதலில் 1921- இல் இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் பிரான்சு நாடுகளைச் சேர்ந்த மீன்வளத்துறை நிபுணர்கள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில், டப்ளினில் ஈ. டபிள்யூ. எல். ஹோல்ட் என்பவரால் முன்மொழியப்பட்டது. இந்த கடலின் வடக்குப் பகுதியை முன்னர் செயிண்ட் ஜார்ஜ் வாய்க்கால் வழியின் ஒரு பகுதியாகவும் மற்றும் பிரித்தானியாவுடன் இணைந்த ஒரு தெற்குப் பகுதியாகவும் கருதப்பட்டது.

இந்தக் கடல் பகுதியை வேறுபடுத்திக் காட்டப்பட வேண்டிய அவசியம் நேர்ந்தது. ஏனெனில் பொதுவான கடல் உயிரியல், நிலவியல் மற்றும் நீரியல் காரணங்களுக்காக ஒரு பொதுவான பெயர் தேவையாக இருந்தது. செல்ட்டிக் கடல் என்னும் பெயர் பிரான்சில் முதலிலும், பின்னர் ஆங்கிலம் பேசும் ஏனைய நாடுகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் கடல் உயிரியல் மற்றும் கடலியலாளர்கள் ஆகியோர்களால் ஏற்கப்பட்டது , பின்னர் எண்ணெய் நிறுவனங்கள் இதை ஏற்றுக்கொண்டன.

எல்லைகள்

செல்டிக் கடல் பகுதியை அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து தெற்கு மற்றும் மேற்குத் திசைகளில் பிரித்துக் காட்ட நிலவரம்புகள் இல்லை. இந்த வரம்புகளுக்கு, ஹோல்ட் 200 அடி ஆழத்தை (366 மீ) கடல் எல்லைக்கோடு மற்றும் பிரிட்டானி நுனியில் இருந்து உஷண்ட் தீவு வரை என்று அளவிட்டுக் கூறினார்.

சர்வதேச கடலியல் அமைப்பு பின்வருமாறு செல்டிக் கடல் எல்லையை வரையறுக்கிறது:

  • வடபகுதி :
ஐரிஷ் கடல் தெற்கு எல்லை மிசென் தலைப்பகுதியில் இருந்து பிறகு, அயர்லாந்து, தென்கடற்கரை, [செயின்ட் டேவிட் தலைப்பகுதியில் இருந்து கார்ன்சொர் முனையையும் சேர்த்து ஒரு கோடு], அதே கோட்டில் நிலை 51°0'N 11°30'W வரைவதற்கு.
  • மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் :
ஒரு கோடு 51 °0'N 11° 30'W தெற்கில் 49°N நிலையில், அதே கோட்டில் அட்சரேகையில் 46°30'N இணைத்து பிஸ்கே விரிகுடாவின் மேற்கு எல்லை மீது [ஒர்டேகள் நிலமுனையில் இருந்து பென்மார்ச் முனையையும் சேர்த்து ஒரு கோடு], பின்னர் பென்மார்ச் முனை வரை வரைவதற்கு
  • கிழக்குப்பகுதி :
ஆங்கிலேய வாய்க்கால்வழியின் மேற்கத்திய எல்லை முதல்[அறுதியிட மேற்குப் பகுதியில் இலே வியர்ஜ் சேர்த்து ஒரு கோடு] மற்றும் பிரிஸ்டல் வாய்க்கால்வழியில் மேற்கு எல்லை[செயின்ட் கோவான் தலைப்பகுதி முதல் ஹார்ட்லேன்ட் முனையையும் சேர்த்து ஒரு கோடு] வரைவதற்கு


வெளி இணைப்புகள்

  1. http://www.eoearth.org/article/Celtic_Sea?topic=49523
  2. http://hansard.millbanksystems.com/written_answers/1974/dec/16/celtic-sea#S5CV0883P0-06989
  3. http://www.iho-ohi.net/iho_pubs/standard/S-23/S23_1953.pdf
  4. http://www.internalwaveatlas.com/Atlas_PDF/IWAtlas_Pg045_CelticSea.PDF
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.