செருமானிய மொழிகள்

செருமானிய மொழிகள் அல்லது இடாய்ச்சிய மொழிகள் என்பன இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் ஒரு பகுதிக் கிளைமொழிகளைக் குறிக்கும். இக் குழுவைச் சேர்ந்த மொழிகளின் பொதுவான முதலுரு மொழி முதலுரு இடாய்சிய மொழி (Proto Germanic) எனப்படுகிறது. இது இரும்புக் கால வட ஐரோப்பாவில், கி.மு. முதல் ஆயிரவாண்டின் நடுப்பகுதியை அண்டிய காலத்தில் (~கி.மு 500) பேசப்பட்டு வந்ததாக உய்த்திணந்தோ வருவிக்கப் பெற்றோ கூறப்பெறுகின்றது. முதலுரு இடாய்ச்சிய மொழியும் அதன் வழி வந்த கிளை மொழிகளும் பல குறித்தறியப் பெறும் தனி இயல்புகளைக் கொண்டுள்ளன. இவற்றுள் கிரிமின் விதி எனப்படும் மெய்யொலி மாற்றம் (consonant change) பரவலாக அறியப்பட்டதாகும்.


இடாய்ச்சிய (செருமானிய) மொழிகளின் பட்டியல்

இடாய்ச்சிய மொழிகளும் அவற்றின் முக்கிய கிளைமொழிக் குழுக்களும்

இன்று வாழும் இடாய்ச்சிய மொழிகள் யாவும் ஒன்று மேற்கு இடாய்ச்சியக் கிளையைச் சேர்ந்ததாகவோ அல்லது வடக்கு இடாய்ச்சு மொழிக் கிளையைச் சார்ந்ததாகவோ உள்ளன. மேற்கு இடாய்ச்சிய மொழிக் கிளையே மிகப்பெரியதும் பல கிளைகளைக் கொண்டதும் ஆகும். இந்த மேற்குக் கிளையின் உட்கிளைகளாக ஆங்கிலோ-ஃவிரிசியன் (Angl-Frisian), குறிப்பாக ஆங்கில மொழியும் அதன் கிளைகளும், ஐரோப்பியக் கண்டத்தின் மேற்கு இடாய்ச்சு மொழியும் அதன் கிளைகளும் (எ.கா டச்சு (இடச்சு)) உள்ளன.

  • மேற்கு இடாய்ச்சிய மொழிகள்
    • உயர் இடாய்ச்சு மொழிகள் (இதில் இன்று வழக்கில் இருக்கும் பொதுச்சீர் இடாய்ச்சு மொழியும் இடாய்ச்சு மொழியின் கிளை வழக்குகளும் அடங்கும்)
      • நடு இடாய்ச்சு
        • கிழக்கு நடு இடாய்ச்சு
        • மேற்கு நடு இடாய்ச்சு
          • இலக்சம்பர்கிய மொழி
          • பென்சில்வேனிய இடாய்ச்சு (கனடாவிலும், அமெரிக்காவில் தென் பென்சில்வேனியாவிலும் வாழும் அம்மானிய-மென்னோனிய மக்கள் பேசும் மொழி)
      • மேல் இடாய்ச்சு
        • உயர் பிராங்கோனியம்
        • ஆலமானிய இடாய்ச்சு
        • ஆத்திரிய-பவேரிய இடாய்ச்சு
          • மோச்செனோ மொழி
          • இட்சிம்பிரியன் மொழி(Cimbrian language)
          • உத்தரிய இடாய்ச்சு (ஆத்திரிய-பவேரிய மொழி வகை, Hutterite German)
      • யூத இடாய்ச்சு (Yiddish)
    • கீழ் பிராங்கோனிய மொழிகள்
      • இடச்சு, இடச்சின் கிளைவழக்கு வட்டார மொழிகள்
      • ஆப்பிரிகான மொழி
    • கீழ் இடாய்ச்சு
      • மேற்குக் கீழ் இடாய்ச்சு
      • கிழக்குக் கீழ் இடாய்ச்சு
        • பிளௌட்டீட்சியம் (Plautdietsch) (மென்னோனிய கீழ் இடாய்ச்சு)
    • ஆங்கில-ஃவிரிசிய மொழிகள்
      • ஃவிரிசிய மொழிகள்
      • ஆங்கில மொழிகள்
        • ஆங்கிலம், அதன் கிளை வட்டார மொழிகள்
        • இசுக்காட்டு மொழி (கீழ்நில, தாழ்நில இசுக்காடுகள் மொழி)
        • இயோலா மொழி (Yola) (வழக்கற்றுவிட்டது)
  • வட இடாய்ச்சிய மொழிகள்
    • மேற்கு இசுகாண்டிநேவியம்
      • நோர்வே மொழி (Norwegian)
      • ஐசுலாந்திய மொழி (ஐசுலாந்தியம்)
      • ஃவாரோயெசு மொழி (Faroese)
      • கிரீன்லாந்திய நோர்வேயம் (Greenlandic Norse) (வழக்கற்றுவிட்டது)
      • நோர்னிய மொழி(Norn) (வழக்கற்றுவிட்டது)
    • கிழக்கு இசுக்காண்டிநேவியம்
    • கோட்லாண்டியம் (Gutnish) (சுவீடனில் உள்ள கோட்லாண்டு என்னும் தீவில் வழங்குமொழி)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.