இந்திய-ஐரோப்பிய மொழிகள்

இந்திய-ஐரோப்பிய மொழிகள் (Indo-European languages) சுமார் 300 கோடி மக்களால் பேசப்படும் 150 மொழிகளை உள்ளடக்கியுள்ளது. இவற்றுள் ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவைச் சேர்ந்த பெரும்பாலான முக்கிய மொழிக்குடும்பங்கள் அடங்கும். இந்தப் பெருமொழிக்குடும்பத்தில் பிரபல மொழிகளான ஆங்கிலம், ஸ்பானிய மொழி, பிரெஞ்சு மொழி, போர்த்துக்கீசம், ஜெர்மன் மொழி, இத்தாலிய மொழி, ரஷ்ய மொழி, பார்சி, ஹிந்தி, உருது என்பனவும் அடங்குவன.

இந்திய-ஐரோப்பிய
புவியியல்
பரம்பல்:
15ஆம் நூற்றாண்டுக்கு முன்,ஐரோப்பா,மற்றும் தெற்காசியா, மத்திய ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா; இன்று உலகம் முழுவதும்
இன
வகைப்பாடு
:
உலக மொழிகளின் பிரதான குடும்பங்களில் ஒன்றாகும்.
துணைக்
குழுக்கள்:
அனத்தோலியம்
அருமானியம்
பால்த்திய-சிலாவியம்
செல்டிக்கு
இத்தாலியம்
டோர்ச்சன்
கரும்பச்சை-இ-ஐ பேசுபவர்கள் பெருன்பான்மையான நாடுகள்
பச்சை இ-ஐ சிறுபான்மை, ஆனால் ஆட்சி மொழி

மேற்படி தொடர்பு பற்றிய எடுகோள், வில்லியம் ஜோன்ஸ் என்னும் மொழியியலறிஞரால் முதன் முதலில் முன்வைக்கப்பட்டது. இவர் அக்காலத்தில் மிகத்தொன்மையான மொழிகளாகக் கருதப்பட்ட, லத்தீன், கிரேக்கம், சமஸ்கிருதம் மற்றும் பாரசீக மொழி என்பவற்றுக்கிடையில் ஒற்றுமைகள் இருப்பதைக் கவனித்தார். பிரான்ஸ் பொப் என்பவரின் மேற்சொன்ன நான்கு மொழிகள் மற்றும் பல பழைய மொழிகள் தொடர்பான முறையான ஒப்பீட்டு ஆய்வுகள், மேற்படி கோட்பாட்டுக்குச் சான்றாக அமைந்தன. 19 ஆம் நூற்றாண்டில் அறிஞர்கள் இக் குழுவை "இந்தோ-ஜெர்மானிய மொழிகள்" அல்லது "ஆரியம்" என அழைத்துவந்தனர். பின்னர் மேற்படி தொடர்பு ஐரோப்பாவின் பெரும்பாலான மொழிகளுக்கும் பொருந்துவது அறியப்பட்டதும், இதன் பெயர் இந்தோ-ஐரோப்பிய மொழிகள் என விரிவாக்கப்பட்டது. இதற்கு உதாரணமாக சமஸ்கிருதத்துக்கும், லித்துவேனிய மொழிகளுக்கும் இடையிலான வலுவான தொடர்புகள் கண்டுபிடிக்கப்பட்டதைக் கூறலாம்.

இவற்றுக்குப் பொதுவான முதல் மொழி முதல்நிலை-இந்தோ-ஐரோப்பிய மொழி (PIE) என அழைக்கப்படுகிறது. இது தோற்றம் பெற்ற புவியியல் அமைவிடம் ("Urheimat" என அழைக்கப்படுகின்றது), தொடர்பாகக் கருத்துவேறுபாடு நிலவுகிறது. ஆர்மீனியாவை உள்ளடக்கிய கருங்கடலின் வடக்கு அல்லது மேற்குப் பகுதிகள் அத்தகைய அமைவிடத்துக்காக முன்மொழியப்படும் முக்கிய இடமாகும்.

இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் துணைக் குழுக்களுள் பின்வருவன அடங்கும்.

  • இந்திய-ஈரானிய மொழிகள்
  • இத்தாலிய மொழிகள் (லத்தீன் மொழி, அதன் வழிவந்தவை, ரோமன்ஸ் மொழிகள் என்பன இதில் அடங்கும்)
  • ஜெர்மானிய மொழிகள் (ஆங்கிலம் அடங்கலாக)
  • செல்ட்டிய மொழிகள்
  • பால்ட்டிய மொழிகள்
  • சிலாவிய மொழிகள்
  • அல்பானிய மொழி, இது பெரும்பாலும், இல்லீரிய மொழிகள் துணைக்குழுவைச் சேர்ந்த பல வழக்கொழிந்த மொழிகளுள் வைக்கப்படுகிறது.
  • தராசிய மொழி (வழக்கொழிந்தது)
  • டாசிய மொழி (வழக்கொழிந்தது)
  • பிரிஜிய மொழி (பண்டைய பிரிஜியாவின் வழக்கொழிந்த மொழி)
  • அனத்தோலிய மொழிகள் (வழக்கொழிந்தது, ஹிட்டைடின் மொழி இவற்றுள் குறிப்பிடத்தக்கது.)
  • தொச்சாரிய மொழிகள் (தொச்சாரியர்களின் வழக்கொழிந்த மொழி)
  • கிரேக்க மொழிகள்
  • அருமானிய மொழி

மேலும் காண்க

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.