ஜெனீவா
ஜெனீவா (Geneva) மக்கள் தொகையின் படி சுவிட்சர்லாந்து நாட்டின் இரண்டாம் மிகப்பெரிய நகரமாகும். சுவிட்சர்லாந்தின் பிரெஞ்சு பேசும் பகுதியின் மிகப்பெரிய நகரம் ஆகும். ஜெனீவா ஏரியிலிருந்து ரோன் ஆறு பாய்கிற இடத்தில் அமைந்த இந்நகரத்தில் 186,825 மக்கள் வசிக்கின்றனர். ஐக்கிய நாடுகள், செஞ்சிலுவை போன்ற பன்னாட்டு அமைப்புகளின் தளங்கள் இங்கு அமைந்துள்ளன. ஜெனீவாவில் பெரும் ஹாட்ரான் மோதுவியும் அமைந்துள்ளது. செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமையிடம் இந்நகரத்தில் அமைந்துள்ளது.
ஜெனீவா | |
---|---|
![]() | |
![]() | |
நாடு | சுவிட்சர்லாந்து |
பரப்பளவு | |
• மொத்தம் | 15.86 |
ஏற்றம் | 375 |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,91,237 |
• பெருநகர் அடர்த்தி | 12,058 |
தொலைபேசி குறியீடு | 6621 |
இணையதளம் | ville-geneve.ch |
கல்வி

ஜெனீவா பல்கலைக்கழகம், ஜோன் கால்வின் என்பவரால் 1559ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. சுமார் 13000 மாணவர்கள் படிக்கும் இப்பல்கலைக்கழகம் ஐரோப்பாவில் உள்ள சிறந்த பல்கலைகழகங்களுள் ஒன்றாகும்.[1]
உலக அமைப்புகள்
ஐ. நா. சபையின் தலைமைச்செயலகம் இங்குள்ளது. ஐ. நா. சபையின் பல்வேறு பிரிவுகளின் செயலகங்களும் இங்கேயே உள்ளன.

வேறு குறிப்பிடத்தக்க அமைப்புகள்:
- உலக வாணிக அமைப்பு
- செஞ்சிலுவைச் சங்கம்
- அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்பு (CERN)
ஜெனீவாவின் புகழ்
எழுத்து
- டேன் பிரவுனின் இரு புதினத்திலும் ஜெனீவா பற்றி எழுதப்பட்டிருந்தது.
இசை
பல்வேறு பாடகர்கள் ஜெனீவாவை பற்றி பாடியுள்ளார்கள். மரியா கார்ரி, வான் மேரிசன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
மக்கள் தொகை
பின்வரும் பட்டியல் ஜெனீவாவின் மக்கள் தொகையினை காட்டுகிறது:[2]

மக்கள் தொகை[2] | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வருடம் | மொத்த மக்கள்தொகை | ஜெர்மன் மொழி பேசுபவர்கள் | பிரெஞ்சு மொழி பேசுபவர்கள் | கத்தோலிக்கர்கள் | ப்ராடெஸ்டன்டுகள் | மற்றவர்கள் | யூதர்கள் | இசுலாமியர்கள் | மற்றவர்கள் | சுவிஸ் | சுவிஸ் அல்லாதவர்கள் |
1850 | 37,724 | 11,123 | 26,446 | 29,203 | 8,521 | ||||||
1870 | 60,004 | 27,092 | 35,064 | 39,012 | 24,507 | ||||||
1888 | 75,709 | 10,806 | 61,429 | 32,168 | 41,605 | 1,330 | 654 | 47,482 | 28,227 | ||
1900 | 97,359 | 11,703 | 77,611 | 44,958 | 49,875 | 1,918 | 1,055 | 58,376 | 38,983 | ||
1910 | 115,243 | 14,566 | 86,697 | 53,248 | 55,474 | 4,267 | 2,170 | 67,430 | 47,813 | ||
1930 | 124,121 | 18,717 | 93,058 | 49,531 | 66,016 | 4,584 | 2,224 | 92,693 | 31,428 | ||
1950 | 145,473 | 20,603 | 111,314 | 58,556 | 74,837 | 6,164 | 2,642 | 118,863 | 26,610 | ||
1970 | 173,618 | 19,657 | 111,553 | 90,555 | 65,393 | 22,591 | 3,128 | 959 | 6,164 | 115,107 | 58,511 |
1990 | 171,042 | 9,610 | 112,419 | 79,575 | 34,492 | 39,227 | 2,444 | 4,753 | 29,747 | 98,812 | 72,230 |
2000 | 177,964 | 7,050 | 128,622 | 66,491 | 26,020 | 34,972 | 2,601 | 8,698 | 41,289 | 99,935 | 78,029 |
குறிப்புகள்
மேற்கோள்கள்
- "The Top 100 Global Universities". MSNBC. பார்த்த நாள் 2010-07-03.
- Geneva in German, French and Italian in the online Historical Dictionary of Switzerland.
வெளி இணைப்புகள்
- Tourism
- Study