செனிக் அமிலம்

செனிக் அமிலம் (Xenic acid) என்பது ஓரு அருமன் வாயு சேர்மமாகும். இதனுடைய மூலக்கூறு வாய்பாடு H2XeO4.ஆகும். செனான் மூவாக்சைடு நீரில் கரைந்து செனிக் அமிலம் உண்டாகிறது. இது ஒரு வலிமையான ஆக்சிசனேற்றியாக விளங்குகிறது. செனிக் அமிலம் சிதைவடைதல் அபாயகரமானது. ஏனெனில் சிதைவின்போது அதிக அளவிளான செனான், ஆக்சிசன், ஓசோன் போன்ற வாயுரூப பொருட்களை வெளியிடுகிறது.

செனிக் அமிலம்
Ball-and-stick model of xenic acid
இனங்காட்டிகள்
ChemSpider 10466143 N
யேமல் -3D படிமங்கள் Image
பண்புகள்
H2XeO4
வாய்ப்பாட்டு எடை 197.31 g/mol
தொடர்புடைய சேர்மங்கள்
தொடர்புடைய சேர்மங்கள் பெர்செனிக் அமிலம்
செனான் மூவாக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இது: Y/N?)
Infobox references

1933 ஆம் ஆண்டில் லினசு பெளலிங் என்பவர் செனிக் அமிலத்தின் இருப்பு தொடர்பான கற்பிதக் கொள்கையை வெளியிட்டார்[1]. கரிம வேதியியலில் செனிக் அமிலம் ஆக்சிசனேற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது.

செனிக் அமிலத்தின் உப்புகள் செனேட்டுகள் என்று அழைக்கப்படுகின்றன. அவை செனான் வாயு மற்றும் பெர்செனேட்டுகளாக தகவற்று இணைந்துள்ளன.

2 HXeO
4
+ 2 OH
XeO4−
6
+ Xe + O
2
+ 2 H
2
O

ஈரணு ஆக்சிசன் ஓசோனாக மாறுவதற்கு போதுமான ஆற்றல் வெளியிடப்படுகிறது

3 O
2
(g) → 2 O
3
(g)

முழுவதுமாக புரோட்டான் நீக்கம் செய்யப்பட்ட எதிர் அயனி உப்புகள் XeO2−
4
ஏதும் தற்பொழுது அறியப்படவிலை.:[2].

மேற்கோள்கள்

  1. Linus Pauling (June 1933). "The Formulas of Antimonic Acid and the Antimonates". J. Am. Chem. Soc. 55, (5): 1895–1900. doi:10.1021/ja01332a016.
  2. Egon Wiberg; Nils Wiberg; Arnold Frederick Holleman (2001). Inorganic chemistry. Academic Press. பக். 399. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-12-352651-5.

வெளி இணைப்புகள்

  • Xenic Acid Reactions with vic-Diols[1]
  1. Bruno Jaselskis, Stanislaus Vas (May 1964). "Xenic Acid Reactions with vic-Diols". J. Am. Chem. Soc. 86, (10): 2078–2079. doi:10.1021/ja01064a041.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.