சூரபத்மன்

சூரபதுமன் என்பவன் காசியபர் என்ற முனிவருக்கும் மாயை என்ற பெண்ணிற்கும் பிறந்த முதல் மகனாவான். மாயைக்கு தாரகன் மற்றும் சிங்கமுகன் என வேறு மகன்மார் உண்டு. சூரபத்மன் பதுமகோமளை எனும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சூரபத்மன் - பதுமகோமளை தம்பதியினருக்கு பாநுகோபன் என்ற மகனும் பிறந்தார்.

சூரவதம்

கந்தபுராணம்

கந்தபுராணம் படி இவன் சிவனிடம் 1008 அண்டங்களை ஆளும் வரத்தையும், சிவனின் வழி வந்தவர்களை தவிர வேறு யாரும் தன்னை அழிக்கக் கூடாது என வரம் பெற்றான். சூரபதுமன் எனபவன் சூரன்+பதுமன் ஆகிய இருவரின் ஒன்றினைந்த உருவம். அதையே திருமுருகாற்றுப்படையும் கூறுகிறது.[1]

"இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை"

இவன் இவ்வரம் பெற்ற போது சிவன் தட்சிணாமூர்த்தி கோலத்தில் ஆழ்ந்த தவத்தில் இருந்தார். அவரின் தவத்தை களைப்பவர்களுக்கு மரணம் நிச்சயம் என அனைத்து கடவுள்களும் அறிந்திருந்ததால் யாரும் அவரின் தவத்தை கலைக்க முடியாது. அவர் தவத்தில் இருக்கும் வரை அவர் வழியில் குழந்தையும் வராது என்றெண்ணிய சூரபதுமன் இவ்வரத்தை பெற்றான்.

தேவர்களின் வற்புறுத்தலால் மன்மதன் அவர் தவத்தை கலைக்க மன்மதனை தனது நெற்றிக்கண் கொண்டு சிவன் எரித்துவிட்டார். அதன் பிறகு சிவனின் 6 முகத்தில் உள்ள நெற்றிக்கண்களில் இருந்து முருகன் தோன்றி சூரபதுமனை வதம் செய்தார்.

முருகன் சூரபதுமனை அழித்ததை கந்த சஷ்டி விழாவாக தமிழகத்தில் தற்போதும் கொண்டாடுகின்றனர்.

மேற்கோள்கள்

  1. பதினெண் புராணங்கள், கந்தபுராணம், கிருட்டிணமாச்சாரியார், நர்மதா பதிப்பகம், சென்னை - 17.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.