சூயெசுப்பெருமம்

சூயெசுப்பெருமம் (Suezmax) சுமை ஏற்றியபடி சூயெசுக் கால்வாய் ஊடாகச் செல்லக்கூடிய மிகப்பெரிய அளவுகளைக் கொண்ட கப்பல்தர வகையாகும். இது பெரும்பாலும், எண்ணெய் தாங்கிகளுக்கே பயன்படுத்தப்படுகிறது. சூயெசுக் கால்வாயின் கப்பலளவைக் கட்டுப்படுத்தும் காரணிகள் மிதப்புயரமும், சூயெசுக் கால்வாய்ப் பாலத்தின் உயரமும் ஆகும்.

பொது இயல்புகள்
வகுப்பும் வகையும்:[[<p class="error wikibase-error">Failed to render property vessel class: Property not found for label 'vessel class' and language 'ta'</p>]] (?)
நிறை:1,60,000 DWT
வளை:77.5 m (254 ft)
உயரம்:68 m (223 ft)
பயண ஆழம்:20.1 m (66 ft)
சூயெசுக் கால்வாயூடாகச் செல்லும்போது எல் பல்லாவில் நிறுத்தப்பட்டுள்ள இரண்டு கப்பல்கள்
சூயெசுக் கால்வாயை ஆழப்படுத்திய பின்னர் பெரிய கப்பல்கள் கால்வாயூடாகச் செல்கின்றன. இந்தப் படத்தில் முனையளவு பருமக்காவி எகிப்து - சப்பான் நட்புறவுப் பாலத்தை நோக்கிச் செல்கிறது.

தற்போது இக்கால்வாயின் ஆழம், 2.1 மீ (66 அடி) மிதப்புயரம் கொண்ட கப்பல்கள் இதனூடாகச் செல்ல முடியும்.[1] இதனால், சில முழுச் சுமையேற்றிய மீநிறைத் தாங்கிகள் இதனூடாகச் செல்வதற்கு ஆழம் போதாது. இக்கப்பல்கள் இதனூடாகச் செல்வதற்கு முன் தமது சரக்கின் ஒரு பகுதியை வேறு கப்பல்களுக்கு மாற்றவேண்டும் அல்லது சூயெசுக் கால்வாயைப் பயன்படுத்தாமல் நன்னம்பிக்கை முனை ஊடாகச் செல்ல வேண்டும். கால்வாய் 2009ல் 18 மீட்டரில் இருந்து 20 மீட்டருக்கு (59 இலிருந்து 66 அடிக்கு) ஆழப்படுத்தப்பட்டது.

சூயெசுப்பெருமக் கப்பல்களின் நிலைத்த எடை 160,000 தொன்களும், வளையளவு (அகலம்) 50 மீட்டரும் (164 அடி) ஆகும். சூயெசுக் கால்வாய்ப் பாலம் 70 மீட்டர் உயரம் என்பதால், கடல் மட்டத்துக்கு மேல் கப்பலின் அதிக பட்ச உயரம் 68 மீட்டர் (223.1 அடி). சூயெசுக் கால்வாய் ஆணையம், ஏற்றுக்கொள்ளத்தக்க அகலம், மிதப்புயரம் ஆகியவற்றைக் கொண்ட அட்டவணைகளை உருவாக்கியுள்ளது. இது மாறக்கூடியது.[2]

மேற்கோள்கள்

  1. "Egypt's Suez canal H1 revenue, traffic up; upgrade helps". Reuters Africa. Thomson Reuters (af.reuters.com) (26 July 2010). பார்த்த நாள் 26 March 2011.
  2. Suez Canal Authority - Rules of Navigation
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.