சூயெசுக் கால்வாய்ப் பாலம்
முபாரக் அமைதிப் பாலம் எனப்படும் சூயெசுக் கால்வாய்ப் பாலம் எல் கண்டாராவில் சூயெசுக் கால்வாயைக் கடக்கும் ஒரு சாலைப் பாலம். இது எகிப்து-சப்பான் நட்புறவுப் பாலம், அல் சலாம் பாலம், அல் சலாம் அமைதிப் பாலம் போன்ற பெயர்களாலும் அறியப்படுகிறது. இப்பாலம் ஆப்பிரிக்காக் கண்டத்தை யூரேசியாவுடன் இணைக்கிறது.
முபாரக் அமைதிப் பாலம் | |
---|---|
![]() | |
ஆள்கூற்று | 30.828248°N 32.317572°E |
வாகன வகை/வழிகள் | vehicular traffic[1] |
கடப்பது | சூயெசுக் கால்வாய் |
இடம் | எல் கண்டாரா, எகிப்து |
Owner |
|
பராமரிப்பு | சாலைகள், பாலங்கள், போக்குவரத்துக்கான பொது ஆணையம், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்புகள் அமைச்சு |
Characteristics | |
வடிவமைப்பு | கம்பிவடத்தால் தாங்கப்பட்ட பால அமைப்பு, H-தூண், பொட்கிளாய்[1] |
கட்டுமான பொருள் | எஃகும் வலிதாக்கிய காங்கிறீட்டும்[1] |
மொத்த நீளம் | 3.9 km (2.4 mi)[1] |
அகலம் | 10 m (33 ft)[1] |
உயரம் | pylons: 154 m (505 ft)[1] |
அதிகூடிய தாவகலம் | 404 m (1,325 ft)[1] |
கீழ்மட்டம் | 70 m (230 ft)[1] |
History | |
வடிவமைத்தவர் | கசிமா |
Constructed by | பின்வருவோரைக் கொண்ட கூட்டிணைவு:
|
கட்டத் தொடங்கிய நாள் | 1995 |
திறக்கப்பட்ட நாள் | அக்டோபர் 9, 2001 |
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Egypt" does not exist. |
வடிவமைப்பும் கட்டுமானமும்
இப்பாலம் சப்பான் அரசின் உதவியுடன் கட்டப்பட்டது. இதன் தலைமை ஒப்பந்த நிறுவனம், கசீமா கார்ப்பரெசன்.[2] [1] 60% கட்டுமானச் செலவை (13.5 பில்லியன் யென்) சப்பான் அரசு பொறுப்பேற்றது. 1995ல் சனாதிபதி முபாரக் சப்பானுக்குச் சென்றிருந்தபோது, சினாய்த் தீவக்குறையின் வளர்ச்சிக்கான பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த உதவி குறித்த உடன்பாடு ஏற்பட்டது. எகிப்து எஞ்சிய 40% செலவைப் (9 பில்லியன் யென்) பொறுப்பேற்றது. பாலம் 2001 அக்டோபரில் திறந்துவைக்கப்பட்டது.
கால்வாய்க்கு மேல் 70 மீட்டர் (230 அடி) உயரத்திற்கு மேல் செல்லும் இப்பாலம், 3.9 கிலோ மீட்டர் (2.4 மைல்) நீளமானது. இது 400 மீட்டர் நீளமானதும், கம்பி வடங்களினால் தாங்கப்படுவதுமான முதன்மை அகல்வையும், இரண்டு பக்கங்களிலும் ஒவ்வொன்றும் 1.8 கிமீ (1.1 மைல்) நீளமான அணுகு அகல்வுகளையும் கொண்டது. முதன்மை அகல்வைத் தாங்கும் தூண்கள் 154 மீ (505 அடி) உயரமானவை.
கால்வாய் நீர்மட்டத்துக்கு மேல் இதன் உயரம் 70 மீட்டர்கள் என்பதால், நீர் மட்டத்தில் இருந்து ஆகக் கூடிய உயரம் 68 மீட்டர்களாக உடைய கப்பல்கள் மட்டுமே சூயெசுக் கால்வாய் ஊடாகச் செல்ல முடியும்.[3]
மேற்கோள்கள்
- Suez Canal Bridge at en:Structurae
- "Kajima's Spectacular Suez Canal Bridge Project". Kajima. பார்த்த நாள் March 16, 2014.
- Art. 52 Rules of Navigation