சுவல்பார்டு

சுவல்பார்டு (Svalbard), முன்னதாக டச்சுப் பெயர் இசுபிட்சுபெர்கன் (Spitsbergen) ஆர்க்டிக் பெருங்கடலில் உள்ள நோர்வேசிய தீவுக்கூட்டம் ஆகும். தற்போது இத்தீவுக்கூட்டத்தில் உள்ள முதன்மையான தீவு இசுபிட்சுபெர்கன் என அழைக்கப்படுகின்றது. ஐரோப்பிய பெருநிலத்தின் வடக்கே வட துருவத்திற்கும் நோர்வேயின் பெருநிலப்பகுதிக்கும் இடையே இத்தீவுகள் அமைந்துள்ளன. இந்தத் தீவுகள் நிலநேர்க்கோடு 74° வடக்கு மற்றும் 81° வடக்கு இடையிலும் நிலநிரைக்கோடு 10° கிழக்கிலிருந்து 35° கிழக்கு வரையிலும் பரவியுள்ளன. மிகப்பெரிய தீவாக இசுபிட்சுபெர்கன் உள்ளது; அடுத்துள்ள பெரிய தீவுகள் நோடாசுலாந்தெட், எட்கேரியோ ஆகும்.

சுவல்பார்டு
Coat of arms
Location of சுவல்பார்டு
Status Unincorporated area
தலைநகரம்லாங்யியர்பியன்
பெரிய நகர் தலைநகரம்
ஆட்சி மொழி(கள்) Norwegian, Russian
இனக் குழு
இறையாண்மையுள்ள நாடு  நோர்வே
Leaders
   ஆளுநர் செஸ்டின் அஸ்கோல்ட் (2015–)
பரப்பு
   மொத்தம் 61 கிமீ2
23 சதுர மைல்
மக்கள் தொகை
   2012[1] கணக்கெடுப்பு 2,642
நாணயம் நார்வே குரோனா (NOK)
நேர வலயம் சிஈடி (ஒ.அ.நே+1)
   கோடை (ப.சே) சிஈஎஸ்டி (ஒ.அ.நே+2)
அழைப்புக்குறி +47
இணையக் குறி .no a
a. .sj ஒதுக்கப்பட்டது,பயன்பாட்டில் இல்லை.[2]

நிர்வாகப் பிரிவுகளின்படி இந்த தீவுக்கூட்டம் நோர்வேயின் மாவட்டங்களில் ஒன்றாக இல்லை; கூட்டுருவாக்கம் பெறாத பகுதியாக நோர்வே அரசு நியமிக்கும் ஆளுநரால் நிர்வகிக்கப்படுகின்றது. 2002 முதல் சுவல்பார்டின் முதன்மை குடியிருப்புப் பகுதியான லாங்யியர்பியனில் பெருநிலப் பகுதி நகராட்சிகளை ஒத்த தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூராட்சி நடைபெற்று வருகின்றது. உருசிய சுரங்க சமூகத்தினர் பாரென்ட்சுபர்கு என்ற குடியிருப்பில் வாழ்கின்றனர். நியொல்சன்டு என்றவிடத்தில் ஆய்வகம் ஒன்றும் சுவெக்ருவா என்னுமிடத்தில் சுரங்கமும் உள்ளன. சுவல்பார்டு உலகின் மிகுந்த வடக்குக் கோடியில் நிரந்தர குடிமக்களுடன் அமைந்துள்ள குடியிருப்பாகும். இதற்கும் வடக்கிலிருக்கும் குடியிருப்புகளில் சுழல்முறையில் வசிக்கும் ஆய்வாளர்கள் மட்டுமே வசிக்கின்றனர்.

இத்தீவுகள் 17ஆவது 18ஆவது நூற்றாண்டுகளில் திமிங்கிலவேட்டைகான அடித்தளமாக பயன்பட்டன. 20ஆம் நூற்றாண்டு துவக்கத்தில் நிலக்கரி சுரங்கங்கள் தோன்றலாயின. இதன் காரணமாக நிரந்தர குடியிருப்புகள் நிறுவப்பட்டன. 1920ஆம் ஆண்டு ஏற்பட்ட சுவல்பார்டு உடன்பாடு நோர்வேசிய இறைமையை உறுதி செய்தது; 1925இல் இயற்றப்பட்ட சுவல்பார்டு சட்டம் இதனை நோர்வே இராச்சியத்தின் முழுமையான அங்கமாக ஆக்கியது. தவிரவும் இவை சுவல்போர்டை கட்டற்ற பொருளியல் மண்டலமாகவும் படைத்துறையற்ற மண்டலமாகவும் அறிவித்தன. நோர்வேயைச் சேர்ந்த இசுடோர் நோர்சுக்கேயும் உருசிய நிறுவனம் ஆர்க்டிகுகோலும் மட்டுமே இன்று உள்ளன. ஆய்வும் சுற்றுலாவும் முதன்மையான கூடுதல் தொழிகளாக வளர்ந்துள்ளன; சுவல்போர்டு பல்கலைக்கழக மையமும் சுவல்போர்டு உலகளாவிய விதை பெட்டகமும் முக்கியமானவை. இந்தக் குடியிருப்புகளை இணைக்க சாலைகள் எதுவுமில்லை. பனி உந்திகளும், வானூர்திகளும் படகுகளும் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.சுவல்போர்டு வானூர்தி நிலையம், லாங்யியர் முதன்மை வாயிலாக உள்ளது.

  1. "The .bv and .sj top level domains". Norid. மூல முகவரியிலிருந்து 23 January 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 24 March 2010.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.