சுற்றுத்தாள் (அஞ்சல்)

அஞ்சல் தொடர்பில் சுற்றுத்தாள் (wrapper) என்பது, ஒருவகை அஞ்சல் எழுதுபொருள் ஆகும்.[1] செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் போன்றவற்றை அஞ்சலில் அனுப்பும்போது சுற்றுவதற்கு இது பயன்படுகிறது. இது சுருட்டிய செய்தித்தாள்களைச் சுற்றுவதற்குப் போதுமான அளவு கொண்டதாகவும், அஞ்சலுக்கான முன்கட்டணம் செலுத்தப்பட்டதைக் குறிக்கும் தபால்தலை அச்சிட்டதாகவும் இருக்கும்.

மடிக்கப்பட்ட பிரித்தானிய விக்டோரியா அரசி ஒரு பென்னி சுற்றுத்தாள்.
1899ல் வெளியிடப்பட்ட ஒரு சுற்றுத்தாளின் மேலச்சு மாதிரி.

வரலாறு

1861ம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்கா முதன் முதலாக அஞ்சல் தேவைக்கான சுற்றுத்தாளை வெளியிட்டது.[2] தொடர்ந்து நியூ சவுத் வேல்சு (1864), வட செருமன் கூட்டாட்சி (1868), விக்டோரியா (1869), ரோமானியா (1870), பெரிய பிரித்தானியா (1870) என்பனவும் சுற்றுத்தாள்களை வெளியிட்டன. மொத்தமாக 110 நாடுகள் சுற்றுத்தாள்களை வெளியிட்டுள்ளன.[3][4]

சார்லசு நைட் என்பவரே முதன் முதலாக அஞ்சல்தலையிட்ட சுற்றுத்தாளைப் பயன்படுத்துவது குறித்து முன்மொழிந்தவர் என்றும், சுற்றுத்தாளைக் கண்டுபிடித்தவர் என்றும் கருதப்படுகிறார்.[5][6] 1834ல் நிதித்துறை அமைச்சராக இருந்த அல்தோர்ப் பிரபுவுக்கு எழுதிய கடிதத்தில் சார்லசு இந்தத்திட்டத்தை முன்மொழிந்திருந்தார்.[7]

மேற்கோள்கள்

  1. "Klug, Janet; Postal stationery wrappers offer challenge in Linns.com Refresher Course section".
  2. Perry, Thomas Doane, Guide to the Stamped Envelopes and Wrappers of the United States, p127, The Dietz Press, 1940
  3. Higgins & Gage World Postal Stationery Catalog
  4. Ascher, Dr Siegfried, Grosser Ganzsachen-Katalog, 1925.
  5. Smyth, Eleanor C, Sir Rowland Hill the Story of a Great Reform, 1907, p189
  6. Dagnall, H, Postal Stationery Wrappers, 1993, p42
  7. Melville, Fred, Chats on Postage Stamps, 1911, p 97
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.