சீனாவிலுள்ள இனக் குழுக்களின் பட்டியல்

சீனாவிலுள்ள இனக் குழுக்களின் பட்டியல், சீனா என்று தம்மை அழைத்துக்கொள்ளும் மக்கள் சீனக் குடியரசு மற்றும் சீனக் குடியரசு (தாய்வான்) ஆகிய நாடுகளில் வாழும் இனக்குழுக்களை உள்ளடக்குகின்றது.

ஹான் சீனர்களே சீனாவின் மிகப் பெரிய இனக் குழுவினராகும். இவர்கள் சீனாவில் மொத்த மக்கள்தொகையின் 91.5% த்தினராக இருக்கின்றனர். இது ஏறத்தாழ 1.2 பில்லியன்கள் ஆகும். இவர்கள் தவிர சீனாவில் அரசினால் தேசிய இனங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 55 இனக் குழுக்கள் உள்ளன. இவர்கள் தொகை ஏறத்தாழ 105 மில்லியன்கள் ஆகும். இச் சிறுபான்மைக் குழுக்கள் பெரும்பாலும் வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு, தெற்கு, தென்மேற்கு ஆகிய பகுதிகளில் வாழ்கின்றனர். சில குழுக்கள் நாட்டின் நடுவிலுள்ள உட் பகுதிகளிலும் வாழ்கின்றனர்.

முக்கியமான சிறுபான்மை இனக்குழுக்களாவன: சுவாங் (16.1 மில்லியன்), மஞ்சு (10.6 மில்லியன்), ஹுயி (9.8 மில்லியன்), மியாவோ (8.9 மியாவோ), உய்குர் (8.3 மில்லியன்), துஜியா (8 மில்லியன்), யி (7.7 மில்லியன்), மங்கோலியர் (5.8 மில்லியன்), திபேத்தியர் (5.4 மில்லியன்), புயேயி (2.9 மில்லியன்), தோங் (2.9 மில்லியன்), யாவோ (2.6 மில்லியன்), கொரியர் (1.9 மில்லியன்), பாயி (1.8 மில்லியன்), ஹானி (1.4 மில்லியன்), கசாக் (1.2 மில்லியன்), லி (1.2 மில்லியன்), டாய் (1.1 மில்லியன்).

சீனாவில் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இனக் குழுக்கள்

மக்கள்தொகைப்படி வரிசைப்படுத்தப்பட்டது.[1].

மக்கள் சீனக் குடியரசு, சீனக்குடியரசு (தாய்வான்) ஆகிய நாடுகளின் இனமொழிப் பரம்பல் நிலப்படம்.
  1. ஹான் (汉族: Hàn Zú)
  2. சுவாங் (壮族: Zhuàng Zú)
  3. மஞ்சு (满族: Mǎn Zú)
  4. ஹூயி (回族: Huí Zú)
  5. மியாவோ (苗族: Miáo Zú) (Hmong)
  6. உக்யுர் (维吾尔族: Wéiwúěr Zú)
  7. யி (彝族: Yí Zú)
  8. துஜியா (土家族: Tǔjiā Zú)
  9. மங்கோலியர் (蒙古族: Měnggǔ Zú)
  10. திபேத்தியர் (藏族: Zàng Zú)
  11. புயேயி (布依族: Bùyī Zú)
  12. தோங் (侗族: Dòng Zú)
  13. யாவோ (瑶族: Yáo Zú)
  14. கொரியர் (朝鲜族: Cháoxiǎn Zú)
  15. பாயி (白族: Bái Zú)
  16. ஹானி (哈尼族: Hāní Zú)
  17. லி (黎族: Lí Zú)
  18. கசாக்குகள் (哈萨克族: Hāsàkè Zú)
  19. டாய் (傣族: Dǎi Zú, தாய் இனக்குழுவுக்குள் அடங்கியது. டாய் லூவே என்றும் அழைக்கப்படுவதுண்டு.]])
  20. ஷெ (畲族: Shē Zú)
  21. லிசு (傈僳族: Lìsù Zú)
  22. கெலாவோ (仡佬族: Gēlǎo Zú)
  23. லாகு (拉祜族: Lāhù Zú)
  24. தொங்சியாங் (东乡族: Dōngxiāng Zú)
  25. வாக்கள் (佤族: Wǎ Zú) (Va)
  26. சுயி (水族: Shuǐ Zú)
  27. நாக்கி (纳西族: Nàxī Zú) (மோசுவோ இனக்குழுவையும் உள்ளடக்கியது. (摩梭: Mósuō))
  28. கியாங் (羌族: Qiāng Zú)
  29. து (土族: Tǔ Zú)
  30. சிபே (锡伯族: Xíbó Zú)
  31. முலாவோ (仫佬族: Mùlǎo Zú)
  32. கிர்கிஸ் (柯尔克孜族: Kēěrkèzī Zú)
  33. தாவுர் (达斡尔族: Dáwòěr Zú)
  34. ஜிங்போ (景颇族: Jǐngpō Zú)
  35. சாலர் (撒拉族: Sǎlá Zú)
  36. பிளாங் (布朗族: Bùlǎng Zú)
  37. மாவோனான் (毛南族: Màonán Zú)
  38. தாஜிக் (塔吉克族: Tǎjíkè Zú)
  39. புமி (普米族: Pǔmǐ Zú)
  40. அச்சாங் (阿昌族: Āchāng Zú)
  41. நூ (怒族: Nù Zú)
  42. எவெங்கி (鄂温克族: Èwēnkè Zú)
  43. ஜிங் (京族: Jīng Zú) (வியட்நாமிய இனக்குழு அல்லது கின் இனக்குழுவோடு ஒத்த குழுவினர்.)
  44. ஜினோ (基诺族: Jīnuò Zú)
  45. தேயாங் (德昂族: Déáng Zú)
  46. உஸ்பெக் (乌孜别克族: Wūzībiékè Zú)
  47. ரஷ்யர் (俄罗斯族: Éluōsī Zú)
  48. யூகுர் (裕固族: Yùgù Zú)
  49. போனான் (保安族: Bǎoān Zú)
  50. மொன்பா (门巴族: Ménbā Zú)
  51. ஓரோகென் (鄂伦春族: Èlúnchūn Zú)
  52. தெருங் (独龙族: Dúlóng Zú)
  53. தாத்தார் (塔塔尔族: Těr Zú)
  54. ஹெசென் (赫哲族: Hèzhé Zú) (ரஷ்ய எல்லைக்குள் வாழும் நானாய் இனக்குழுவினரோடு ஒத்த இனத்தவர்.)
  55. லூபா (珞巴族: Luòbā Zú)
  56. காவோஷான் (高山族: Gāoshān Zú) (தாய்வானிய முதுகுடிகள் அனைவரையும் குறிக்கும் ஒரே பெயர்)

தாய்வானிய முதுகுடிகள்

இது தாய்வானிய முதுகுடிகளின் பட்டியலாகும். மக்கள் சீனக் குடியரசு இவர்கள் அனைவரையும் காவோஷான் என்னும் பெயரில் ஒரே இனக்குழுவாக வகைப்படுத்தியுள்ளது. (高山族 : Gāoshān Zú). தாய்வானில் இயங்கும் சீனக் குடியரசு இவற்றுள் 13 குழுக்களை ஏற்றுக்கொண்டுள்ளது. இக்குழுக்கள் நட்சத்திரக் குறி மூலம் காட்டப்பட்டுள்ளன.

  1. அமிகள் (阿美)*
  2. அத்தாயல் (தாயல், தாயன்) (泰雅)*
  3. பாபுசா (貓霧捒)
  4. பாசே (巴賽)
  5. பூனுன் (布農)*
  6. ஹோவான்யா (洪雅 or 洪安雅)
  7. காவாலான் (噶瑪蘭)*
  8. கேத்தாகலன் (凱達格蘭)
  9. லுயிலங் (雷朗)
  10. பயிவான் (排灣)*
  11. பாசே/கக்சாபு (Pazih) (巴宰 or 巴則海)
  12. போப்போரா (巴布拉)
  13. புயுமா (卑南)*
  14. கவுகாவுத் (猴猴)
  15. ரூக்காய் (魯凱)*
  16. சாயிசியத் (Saisiat) (賽夏)*
  17. சாக்கிசாயா (撒奇萊雅)*
  18. சிராயா (西拉雅)
  19. டாவோ (யாமி) (雅美/達悟)*
  20. தாவோக்கா (道卡斯)
  21. தாவோ (邵)*
  22. ரோபியாவன் (多囉美 or 多囉美遠)
  23. துருக்கு (தரோக்கோ) (太魯閣)*
  24. சூ (Cou) (鄒)*

"ஏற்றுக்கொள்ளப்படாத" சிறுபான்மை இனக் குழுக்கள்

இது மக்கள் சீன அரசால் அதிகார பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படாத இனக்குழுக்களின் பட்டியல் ஆகும்.

  • கேஜியா (革家人)
  • குமு (克木人)
  • குகொங் (மஞ்சள் லாகு/லாகு ஷி (苦聪人))
  • மாங் (芒人)
  • டெங் (僜人)
  • ஷெர்ப்பா (夏尔巴人)
  • பாஜியா (八甲人)
  • யி (羿人)
  • யூத்தாய் (犹太, யூதர்)

ஹாங்காங் மற்றும் மக்குவாவில் உள்ள இனக்குழுக்கள்

ஹாங்காங், மக்காவு என்பன, மக்கள் சீனக் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதிகள் ஆகும். ஹாங்காங், மக்காவு பகுதிகளின் அரசுகள் மக்கள் சீனக் குடியரசின் இன வகைப்பாட்டைப் பயன்படுத்துவது இல்லை. அத்துடன் மேற்குறிப்பிட்ட வகைப்பாடு ஹாங்காங், மக்காவு பகுதிகளிலுள்ள இனக்குழுக்களைக் கவனத்திற்கு எடுக்கவும் இல்லை. இதனால் அப் பகுதிகளிலுள்ள சிறுபான்மையினரான பிலிப்பினோக்கள், இந்தோனீசியர், ஐரோப்பியர், தெற்காசியர், போத்துக்கீசர், மாக்கானியர்கள் (சீன, போத்துக்கீசக் கலப்பு இனத்தவர்) ஆகியோர் மக்கள் சீனாவின் பட்டியலில் இடம்பெறவில்லை.

இவற்றையும் பார்க்கவும்

குறிப்புக்கள்

  1. List of ethnic groups in China and their population sizes Paul and Bernice Noll's Window on the World.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.